இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பது என்றால் என்ன?


கேள்வி: இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பது என்றால் என்ன?

பதில்:
யோவான் 14:13-14 வரையிலுள்ள வசனங்களில், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கவேண்டுமென்பதைக் குறித்து போதிக்கப்பட்டுள்ளது, “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.” சிலர் இந்த வசனத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள், அதாவது இந்த வசனத்தை தவறாகப் புரிந்து கொண்டு, “இயேசுவின் நாமத்தில்” என்று ஜெபத்தை முடித்தால், நாம் கேட்ட எல்லாவற்றையும் எபோழுதும் தேவன் நமக்கு கொடுப்பார் என்று எண்ணுகின்றார்கள். இது “இயேசுவின் நாமம்” என்பதை ஏதோ மந்திரசூத்திரமாகப் பயன்படுத்துகிறதை போலாகும். இது வேதாகமத்திற்கு உட்பட்டதல்ல.

இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பது என்பது அவருடைய அதிகாரத்தோடு நமது ஜெபங்களுக்கு பதில் கொடுக்கும்படி பிதாவானவரிடம் விண்ணப்பம் செய்தலாகும், காரணம் நாம் அவரது குமாரனான “இயேசுவின்” நாமத்தில் செல்லுகிறோம். இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பது என்பது, தேவனுடைய சித்தத்தின்படியாக ஜெபிக்கிறதாகும், “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 5:14-15). இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பது என்பது இயேசுவை மகிமைப்படுத்தும் மற்றும் கனப்படுத்தும் காரியங்களுக்காக ஜெபிப்பதாகும்.

ஜெபத்தின் முடிவில் “இயேசுவின் நாமத்தில்” என்று சொல்வது ஒரு மந்திர சூத்திரமல்ல. நாம் ஜெபத்தில் கேட்பது அல்லது சொல்லுவது தேவனுடைய மகிமைக்காக அல்லது அவரின் சித்தப்படி இல்லாதிருக்குமானால், “இயேசுவின் நாமத்தில்” என்று நாம் சொல்வது அர்த்தமற்றதாய் இருக்கும். கபடற்ற நிலையில் இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பதும் தேவனுடைய மகிமைக்காக ஜெபிப்பதுமே முக்கியமானது. ஜெபத்தில் பயன்படுத்தும் வார்த்தைகள் முக்கியம் அல்ல, ஜெபத்தின் நோக்கமே முக்கியம். தேவனின் சித்தத்திற்கு உட்பட்டு ஜெபிப்பதே இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பதற்கு சாரம்சமாகும்.

English
முகப்பு பக்கம்
இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பது என்றால் என்ன?

எப்படி கண்டுபிடிக்க ...

கடவுளோடு நித்தியத்தை செலவிடுங்கள்கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெறுங்கள்