ஆபாச படங்களை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது? ஆபாச படங்களை பார்ப்பது பாவமா?


கேள்வி: ஆபாச படங்களை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது? ஆபாச படங்களை பார்ப்பது பாவமா?

பதில்:
இனையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகள் பாலியல் இன்பத்தை தூண்டும் பாலியல் படங்களுக்கு (pornography) சமந்தப்பட்ட வார்த்தைகளாகும். இன்றிருக்கும் உலகத்தில் ஆபாச படங்கள் அதிகமாய் பரவி இருக்கின்றது. எல்லாவற்றிற்க்கும் மேலாக, பாலியல் உறவை சாத்தான் அதிகமாய் கெடுத்து அதை அசுத்தமானதாக மாற்றி இருக்கிறான். நன்மையும் நேர்மையுமானதாக இருக்கிற இந்த உறவுக்கு (அதாவது கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பின் தாம்பத்திய உறவு) பதிலாக இச்சை, ஆபாச படங்கள், வேசித்தனம், பலாத்காரம், மற்றும் ஓரிண செயற்க்கையை போன்றவைகளால் உலகத்தை நிறைத்திருக்கிறான். ஆபாச படங்களை பார்க்கும் பாவம் மனிதனை அதிக துன்மார்க்கத்துக்கும் ஒழுக்கமற்ற வாழ்க்கைக்கும் நேராக நடத்துகிறது (ரோமர் 6:19). ஆபாச படங்களை பார்ப்பது நம்மை அடிமைப்படுத்தக்கூடிய பழக்கம் என்பது நிச்சயமாய் அறியப்பட்டிருக்கிறது. போதை பொருள் எடுப்பவர்கள் அந்த “போதை நிலை” அடையும்படி எப்படி இன்னும் அதிகமாக எடுப்பார்களோ, அதே போல ஆபாச படங்கள் ஒரு மனிதனை இன்னும் அதிகமான பாலியல் அடிமைத்தனத்துக்கும், அவபக்தியான ஆசைகளுக்கும் அவனை நடத்தும்.

பாவத்தின் மூன்று விதங்கள் என்னவென்றால், மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, மற்றும் ஜீவனத்தின் பெருமை (1 யோவான் 2:16). ஆபாச படங்களை பார்ப்பதினால் அது நம்மை மாம்ச இச்சைக்கு நேராக இழுத்து செல்லும், மற்றும் அது கண்களின் இச்சை என்பதில் சந்தேகமில்லை. நாம் எவைகளை சிந்திக்க வேண்டும் என்று பிலிப்பியர் 4:8-ல் பார்க்கிறோம். நிச்சயமாக ஆபாச காட்சிகள் என்பது இந்த பட்டியலில் சேர்க்கவே முடியாது. ஆபாச படங்களை பார்ப்பது நம்மை அடிமைப்படுத்தும் (1 கொரிந்தியர் 6:12; 2 பேதுரு 2:19), மற்றும் அழிக்கும் (நீதிமொழிகள் 6:25-28; எசேக்கியேல் 20:30; எபேசியர் 4:19). மற்றவர்களை இச்சிக்கவைப்பதே ஆபாச படங்களின் முக்கிய நோக்கமாகும். இப்படி நம் சிந்தையில் இச்சிப்பது தேவனுக்கு விரோதமான பாவம் (மத்தேயு 5:28). தொடர்ந்து ஒரு மனிதன் ஆபாச படங்களை பார்த்தால், அவன் இரட்சிப்படவில்லை என்பதை காட்டுகிறது.

இந்த ஆபாச காட்சிகளில் ஈடுபடுகிறவர்கள் தேவன் மூலமாக அதின் மேல் வெற்றி பெற முடியும். நீங்கள் ஆபாச படங்களில் ஈடுபட்டிருந்து அதில் இருந்து விடுதலை வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்கள் வெற்றிக்கான சில படிகள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது: (1) உங்கள் பாவத்தை தேவனிடம் அறிக்கை செய்யுங்கள் (1 யோவான் 1:9). (2) உங்களை சுத்திகரித்து, புதித்தாக்கி, மனதை மறுரூபமாக்க தேவனிடம் விண்ணப்பம் செய்யுங்கள் (ரோமர் 12:2). (3) பிலிப்பியர் 4:8-ல் இருக்கும் காரிங்களால் உங்கல் மனதை தேவன் நிரைக்கும்படி ஜெபியுங்கள் (4) உங்கள் சரீரங்களை பரிசுத்தமாக வைக்க கற்றுகொள்ளுங்கள் (தெசலோனிக்கேயர் 4:3-4) (5) பாலியல் உறவை குறித்த நல்ல புரிந்துகொள்ளுதளை பெறவும், உங்கள் கணவன் அல்லது மனைவியிடம் மட்டுமே இந்த விருப்பங்களை நிறைவேற்றவும் தேவன் உங்களுக்கு உதவி செய்யும்படி அவரிடம் கேளுங்கள் (1 கொரிந்தியர் 7:1-5). (6) நீங்கள் ஆவியில் நடக்கிறவர்களாய் இருந்தால், மாம்ச இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள் (கொலோசியர் 5:16). (7) இந்த ஆபாசமான காட்சிகளை பார்க்காமல் இருக்க சில நடைமுறை வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட படங்கள் உங்கள் கம்ப்யூடரில் வராமல் தடுக்கின்ற மென்பொருள்களை இறக்கி வையுங்கள், டீவி மற்றும் வீடியோக்கள் பார்ப்பதை குறையுங்கள், உங்கள் உடன் ஜெபிக்கவும் உங்கள்மேல் உத்திரவாதம் செலுத்தும் ஒரு கிறிஸ்தவரை கண்டுபிடியுங்கள்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
ஆபாச படங்களை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது? ஆபாச படங்களை பார்ப்பது பாவமா?