settings icon
share icon
கேள்வி

போப், அல்லது அடுத்த போப் அந்திக்கிறிஸ்துவா?

பதில்


அந்திக்கிறிஸ்து யார் என்று அடையாளம் காண்பதைக் குறித்து பல ஊகங்கள் உள்ளன. ஊகத்தில் அடிக்கடி டைபடும் பெயர் அல்லது "பாதிக்கப்பட்டவர்களில்" ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் போப் ஆவார். புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தின் நாட்களில், மார்ட்டின் லூத்தரும் மற்ற சில சீர்திருத்தவாதிகளும் அக்கால போப் அந்திக்கிறிஸ்து என்று உறுதியாக நம்பினர். போப் ஜான் பால் II மற்றும் பெனடிக்ட் XVI பொதுவாக அந்திக்கிறிஸ்து என்று அடையாளம் காணப்பட்டனர். தற்போதைய போப், முதலாம் பிரான்சிஸ், சமமாக பிரபலமான இலக்காக இருக்கிறார். இது ஏன்? வேதாகமத்தில் போப் அந்திக்கிறிஸ்து என்று குறிப்பிடும் ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா?

போப் அந்திக்கிறிஸ்து பற்றிய ஊகம் முதன்மையாக வெளிப்பாடு 17:9 ஐச் சுற்றி வருகிறது. ஒரு ஸ்திரீ மிருகத்தில் சவாரி செய்வதைக் குறிக்கும் அருவருப்பின் கடைசிக்கால முறைமையை விவரிக்கிறது, வெளிப்படுத்துதல் 17:9 இவ்வாறு அறிவிக்கிறது, "ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்." பண்டைய காலங்களில், ரோம் நகரம் "ஏழு மலைகளின் நகரம்" என்று அழைக்கப்பட்டது, ஏனெனில் ரோம் நகரத்தை சுற்றி ஏழு முக்கிய மலைகள் உள்ளன. எனவேதான், சிந்தனையானது அது எப்படியாவது ரோம் உடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதாகச் செல்கிறதை நாம் அறியலாம். எனவே, தீமையான கடைசிக்கால அமைப்பு எப்படியாவது ரோமுடன் தொடர்புடையதாக இருந்தால்—ரோமில் மையமாக இருக்கும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையுடன் ஒரு சாத்தியமான தொடர்பைக் காண அதிக சிந்தனை தேவையில்லை. வேதாகமத்தில் உள்ள பல பகுதிகள் ஒரு "அந்திக்கிறிஸ்துவை" விவரிக்கின்றன, அவன் கடைசிக்காலத்தில் கிறிஸ்துவுக்கு எதிரான இயக்கத்தை வழிநடத்துவான் (தானியேல் 9:27; 2 தெசலோனிக்கேயர் 2:3-4; வெளிப்படுத்துதல் 13:5-8). எனவே, கடைசிக்கால தீமையான உலக அமைப்பு ரோமை மையமாக கொண்டிருந்தால் மற்றும் ஒரு தனிநபரால் வழிநடத்தப்பட்டால்—அது போப்பையே ஒரு வேட்பாளராகக் காண்கிறது.

இருப்பினும், பல வேதாகமம் விளக்கவுரையாளர்கள் அந்த ஸ்திரீ கத்தோலிக்க திருச்சபையாக இருக்க முடியாது என்றும் ஏழு மலைகள் ரோமைக் குறிக்க முடியாது என்றும் கூறுகின்றனர். அதற்கு வெளிப்படுத்தல் 17-18 அதிகாரங்களில் மிருகத்தின்மேல் சவாரி செய்யும் ஸ்திரீயை பாபிலோன் நகரம் என்று தெளிவாக அடையாளம் காட்டுகிறது என்ற உண்மையை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். (பண்டைய பாபிலோன் நகரம் நவீன பாக்தாத்திற்கு அருகில் இருந்தது.) கூடுதலாக, வசனம் 10 தெளிவாக ஏழு மலைகளை ஏழு ராஜாக்கள் என அடையாளப்படுத்துகிறது, "இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை" எனக் கூறுகிறது. தெளிவாக, இது ரோமின் ஏழு மலைகளைக் குறிக்க முடியாது. மாறாக, ஏழு ராஜாக்களால் ஆளப்படும் ஏழு உலக சாம்ராஜ்யங்களைப் பற்றியக் குறிப்பாகும். வெளிப்பதுத்தின விசேஷம் எழுதப்பட்ட போது, ஐந்து உலக சாம்ராஜ்யங்கள் வந்து போயின—எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சியா மற்றும் கிரீஸ்—ஒன்று (ரோம்) இருகிறது, ஒன்று (அந்திக்கிறிஸ்துவின் உலக சாம்ராஜ்யம்) இன்னும் வரவில்லை.

அந்திக்கிறிஸ்து யாராக இருந்தாலும், அவன் வருவதைப் பற்றி எச்சரிக்கப்பட்டு, அவனையும் அவனுடைய ஆவியைக் கொண்ட அனைவரையும் அடையாளம் காண கற்றுக்கொள்ள வேண்டும். அந்திக்கிறிஸ்துவின் ஆவியை எப்படி அடையாளம் காண்பது என்று 1 யோவான் 4:2-3 கூறுகிறது: " தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது" (NKJV). தற்போதைய போப், பிரான்சிஸ் I, இயேசுவை தேவனிடமிருந்து வந்தவர் என்றும், இயேசு மாம்சத்தில் வந்தவராகவும் ஒப்புக்கொள்கிறார் (1 யோவான் 4:2 ஐப் பார்க்கவும்). கத்தோலிக்க திருச்சபையினுடைய கோட்பாட்டின் பல பகுதிகளில் போப் பிரான்சிஸ் I உடன் நாம் உடன்படவில்லை என்றாலும், இயேசு கிறிஸ்துவின் நபரைப் பற்றிய அவரது பார்வை வேதாகமத்தின்படியானது. எனவே, போப் முதலாம் பிரான்சிஸ் அந்திக்கிறிஸ்து என்று நம்புவது கடினம். ஒரு போப் அந்திக்கிறிஸ்துவாக இருக்கலாம் என்று நாம் நம்பகிறோம் என்கிற அதேவேளையில், இவர்தான் அந்திக்கிறிஸ்து என்று பிடிவாதமாக இருக்கத்தக்கதாக குறிப்பிட்ட எந்த தகவல்களையும் வேதாகமம் கொடுக்கவில்லை. வருங்கால போப் அந்திக்கிறிஸ்து அல்லது அந்திக்கிறிஸ்துவின் கள்ளத்தீர்க்கதரிசியாக இருக்கலாம் (வெளிப்படுத்துதல் 13:11-17). அப்படியானால், அந்த வருங்கால போப் இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்ததை மறுப்பதன் மூலம் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ளப்படுவார்.

Englishமுகப்பு பக்கம்

போப், அல்லது அடுத்த போப் அந்திக்கிறிஸ்துவா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries