கேள்வி
வாழ்க்கைத் துணையைத் தேடும்போது சரீரப்பிரகாரமான ஈர்ப்பு எந்த அளவிற்கு முக்கியமானது?
பதில்
தேவன் ஆண்களையும் பெண்களையும் உடல்ரீதியாக ஒருவரையொருவர் ஈர்ப்பதற்காகவே படைத்தார் என்பதில் சந்தேகமில்லை. கணவன்-மனைவி இடையே நெருக்கத்திற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் மற்றும் மனித இனத்தின் உயிர்வாழ்விற்கும் திருமணத்தில் பாலியல் கூறு முக்கியமானது. அதே சமயம், நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்—திருமணம் வரை ஒருவரையொருவர் பார்த்துக் கூட கொள்ளாதது உட்பட—உலகின் பல பகுதிகளில் இன்றும் நடைமுறையில் இருக்கும் வழக்கம் ஆகும்.
சாலமோன், உன்னதபாட்டின் 4 மற்றும் 7 வது அதிகாரங்களில் தனது பிரியமானவளுக்கு மணவாளனின் மேலுள்ள ஈர்ப்பை விவரிக்கிறார். அவளின் உடல் அழகையும் அவள் மீதான ஆசையையும் விவரிக்கிறான். அவள் 8 ஆம் அதிகாரத்தில் பிரதி உபகாரமாக அவன் மீதான அவளது பேரார்வத்தையும் அவன் தழுவுதலுக்கான அவளது விருப்பத்தையும் விவரிக்கிறாள். உன்னதபாட்டு புத்தகம் உடலியல் ஈர்ப்பானது ஒரு அங்கமாக இருக்கும் திருமண அன்பின் அழகான சித்தரிப்பு ஆகும்.
கணவன் அல்லது மனைவியைத் தேடும் போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் உடல் ஈர்ப்பு மட்டுந்தான் என்று சொல்ல முடியாது. ஒன்று, அழகு என்பது உலகத்தால் வரையறுக்கப்படக்கூடாது. உலகம் அழகாகக் காண்பது வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள அழகின் தரத்தை விட மிகவும் குறைவாக உள்ளது. உடல் அழகு காலப்போக்கில் மங்கிவிடும், ஆனால் உண்மையான உள் அழகு தேவனை நேசிக்கும் ஒரு பெண்ணிடமிருந்து வெளிப்படுகிறது (நீதிமொழிகள் 31:30). பேதுரு பெண்களை உள்ளான அழகை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கிறார். “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்” (1 பேதுரு 3:3-5). புற அழகு என்பது விரைவிலேயே இல்லாமற்ப்போகிறது; உள்ளான அழகோ நித்தியமானது.
ஒரு மனிதனின் கவர்ச்சியும் உள்ளிருந்து வரக்கூடியதாக இருக்க வேண்டும். வேதாகமத்தில் மிகத் தெளிவான உதாரணம் இயேசு, "அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது" (ஏசாயா 53:2). இருப்பினும், தேவனுடைய அவதார குமாரனாக அவரது மகிமை மற்றும் கிருபையின் அழகு, அவரைப் பார்த்த அனைவருக்கும் அவருக்குள் இருந்து பிரகாசித்தது. அதற்கு நேர் எதிரானது லூசிபர்/சாத்தான், அவன் "ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்" (எசேக்கியேல் 28:12). அவனது வெளிப்புற அழகு இருந்தபோதிலும், லூசிபர் தீமை மற்றும் தெய்வபக்தியற்ற நிலையின் உருவகமாக இருந்தார்.
வெளிப்புற அழகு விரைவாக மாறிப்போகும், ஆனால் பாவத்தால் பாதிக்கப்படும் ஆண்களும் பெண்களும் அதற்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தேவனுடைய பார்வை வேறு. “மனுஷன் பார்க்கிறபடி கர்த்தர் பார்ப்பதில்லை; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" (1 சாமுவேல் 16:7) வருங்கால கணவன் அல்லது மனைவி ஒரு உண்மையான, மீண்டும் பிறந்த கிறிஸ்தவராக இருக்க வேண்டும், அவர் விசுவாசத்தில் வளர்ந்து முதிர்ச்சியடைந்து, கீழ்ப்படிந்தவராக இருக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரே நோக்கத்தைக் கொண்ட இருவர்-தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனை மகிமைப்படுத்துவது-ஒருவருக்கொருவர் தங்கள் சரீர ஈர்ப்பும் தினசரி அதிகரித்து வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்படிச் செய்கின்றனர்.
English
வாழ்க்கைத் துணையைத் தேடும்போது சரீரப்பிரகாரமான ஈர்ப்பு எந்த அளவிற்கு முக்கியமானது?