பல்வேறு இனங்களின் தொடக்கம் எது?


கேள்வி: பல்வேறு இனங்களின் தொடக்கம் எது?

பதில்:
மனிதர்களின் வெவ்வேறு இனங்கள் அல்லது தோல் நிறங்களின் தொடக்கத்தை குறித்து வேதம் வெளிப்படையாக சொல்லுகிறது இல்லை. உண்மையில், ஒரே ஒரு இனம் தான் உள்ளது: அது மனித இனம். மனிதர்களில், தோல் நிறம் மற்றும் உடல் பண்புகளில் வித்தியாங்கள் உண்டு. தேவன் பாபேல் கோபுரத்தில் மொழிகளை மாற்றினதினால் (ஆதியாகமம் 11:19), அவர் இனகுழப்பத்தை உண்டாக்கினார் என்று சிலர் சொல்லுகின்றனர். வெவ்வேறு இயர்க்கை சூழ்நிலைகளில் மக்க்ள் பிழைக்கும்படிக்கு தேவன் அவர்களில் மரபு வழி மாற்றங்களை உண்டுபண்ணி இருக்க கூடும்; உதாரணமாக, கருப்பு நிற தோல் ஆப்ரிக்கர்களின் நாட்டில் (ஆப்ரிக்கா) அதிகமான வெப்பம் இருப்பதால், அவர்கள் அந்த வெப்பத்தில் வாழும்படி அவர்களின் மரபு வழி அமைந்துள்ளது. இந்த கருத்தின்படி, தேவன் மொழிகளை மாற்றினார், ஆகையால் மொழி பிரிவுகள் உண்டாயின, மற்றும் தேவன் மரபு வழிகளில் வித்தியாசத்தை உண்டுபன்னினதின் மூலம் வெவ்வேறு இன கூட்டங்களும் எங்கே குடியேற வேண்டும் என்று தீர்மாணித்தார். இது உண்மையாய் இருக்கலாம், ஆனால் இந்த கருத்துக்கு வேதத்தில் தெளிவான ஆதாரம் இல்லை. மனித இனங்கள்/தோல் நிறங்களுக்கும் பாபேல் கோபுரத்திற்கும் தொடர்பு உண்டு என்று வெதத்தில் எங்கும் குறிப்பிட வில்லை.

வெள்ள பெருக்கத்திற்கு பிறகு, வெவ்வேறு மொழிகள் வந்தபோது, ஒரு மொழியை பேசினவர்கள் அதே மொழியை பேசின மற்ற குழுவினரோடே சேர்ந்து வேறு இடத்திற்கு நகர்ந்தனர். ஆகையால், இடம் மாறி சென்ற குறிப்பட்ட கூட்டத்தினர்களின் பெருக்கம் நீண்ட நாட்கள் தொடராமல் மாறாக சுருங்கவும், அந்த தலைமுறைகள் மறையவும் தொடங்கின. இதனால் உள்ளின சேர்க்கை நடந்தது. தலைமுறைகளாக இது நடந்தபடியால் குறிப்பட்ட கூட்டம் இன்னும் சுருங்க தொடங்கினர். இப்படி ஒரே மொழியை பேசின குடும்பத்தார் எல்லோரும் தொற்றத்தில் ஒரே போல் இருந்தனர்.

மற்றொரு விலக்கத்தின்படி, ஆதாம் ஏவாள் இருவருக்குள் கருப்பு, மா நிறம், வெள்ளை நிற (மற்ற எல்லா நிறங்களும்) பிள்ளைகளை பெற்றெடுக்கும் மரபு வழிகள் இருந்ததாக கருதப்படுகிறது. இதற்கு உதாரணமாக, இனம் கலந்த தம்பதியினரின் பிள்ளைகள் ஒரு வேளை வெவ்வேறு நிறங்களில் இருக்க கூடும். தேவன் மனிதரை வெவ்வேறி தோற்றமுடையவராக இருக்கும்படி விரும்பினதினால், ஆதாம் ஏவாள் வெவ்வேறு நிறங்கள் உள்ள பிள்ளைகளை பெற்றெடுக்கும் திறனை தந்திருக்க கூடும். பின்பு, நோவா மற்றும் அவன் மனைவி, அவன் மூன்று குமாரர்கள் மற்றும் மனைவிகள் (மொத்தம் எட்டு பேர்) மட்டும் ஜலபிரலயத்தில் இருந்து தப்பினர் (ஆதியாகமம் 7:13). நோவாவின் மருமகள்களும் வெவ்வேறு இனத்தாராய் இருந்திருக்க கூடும். இன்னும், நோவாவின் மனைவியும் வேறு இனத்தவராக இருந்திருக்கலாம். ஒருவேளை, எட்டு நபர்களும் கலப்பு இனமாக இருந்திருக்கலாம். அதனால் அவர்களில் வெவ்வேறு இனங்களை உடைய பிள்ளைகளை வந்திருக்க கூடும். இதில் எந்த விளக்கமாய் இருந்தாலும், நாம் எல்லோரும் ஒரே இனத்தார், ஒரே தேவனால் படைக்கப்ப்டவர்கள், ஒரே நோக்கத்திற்காக படைக்கப்பட்டவர்கள் – அவரை மகிமை படுத்துவதற்கே.

English
முகப்பு பக்கம்
பல்வேறு இனங்களின் தொடக்கம் எது?