settings icon
share icon
கேள்வி

திறந்தநிலை ஆத்திகம் என்றால் என்ன?

பதில்


“திறந்தநிலை ஆத்திகமானது”, “திறந்தநிலை இறையியல்” மற்றும் “தேவனுடைய திறந்தநிலை தன்மை” என்றும் அழைக்கப்படுகிறது, இது மனிதனின் சுதந்திர விருப்பத்துடனான உறவில் தேவனுடைய முன்னறிவிப்பை விளக்கும் முயற்சியாகும். திறந்தநிலை ஆத்திகம் வாதம் அடிப்படையில் இதுதான்: மனிதர்கள் உண்மையிலேயே சுதந்திரமானவர்கள்; தேவன் எதிர்காலத்தை முற்றிலும் அறிந்திருந்தால், மனிதர்கள் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்க முடியாது. எனவே, எதிர்காலத்தைப் பற்றி தேவனுக்கு எல்லாம் தெரியாது. திறந்தநிலை ஆத்திகம் எதிர்காலத்தை அறியமுடியாது என்று கூறுகிறது. ஆகையால், அறியக்கூடிய அனைத்தையும் தேவன் அறிவார், ஆனால் எதிர்காலத்தை அவர் அறியவில்லை என்கிறது.

திறந்தநிலை ஆத்திகம் இந்த நம்பிக்கைகளை வேத வசனங்களில் அடிப்படையாகக் கொண்டது, இது தேவன் "அவருடைய மனதை மாற்றிக்கொள்வது" அல்லது "ஆச்சரியப்படுவது" அல்லது "அறிவைப் பெறுவது போல் தோன்றுகிறது" (ஆதியாகமம் 6: 6; 22:12; யாத்திராகமம் 32:14; யோனா 3:10). எதிர்காலத்தைப் பற்றிய தேவனுடைய அறிவை அறிவிக்கும் பல வேதவசனங்களின் வெளிச்சத்தில், இந்த வேதவசனங்களை நாம் புரிந்துகொள்ளக்கூடிய வழிகளில் தேவன் தன்னை விவரிப்பதை அனுசரித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய செயல்களும் முடிவுகளும் என்னவாக இருக்கும் என்பதை தேவன் நன்கு அறிவார், ஆனால் நம்முடைய செயல்களை அடிப்படையாகக் கொண்ட அவருடைய செயல்களைப் பொறுத்தவரை அவர் “மனதை மாற்றிக்கொள்கிறார்”. மனிதகுலத்தின் துன்மார்க்கத்தில் தேவனுடைய ஏமாற்றம் என்பது அது நிகழும் என்று அவர் அறிந்திருக்கவில்லை என்று அர்த்தமல்ல.

திறந்தநிலை ஆத்திகத்திற்கு முரணாக, சங்கீதம் 139:4, 16 கூறுகிறது, “என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.” தேவனுக்கு எதிர்காலம் என்னவென்று அவருக்குத் தெரியாவிட்டால், இயேசு கிறிஸ்துவைப் பற்றி பழைய ஏற்பாட்டில் சிக்கலான எண்ணற்ற விவரங்களை அவர் எப்படி கணிக்க முடியும்? எதிர்காலம் என்னவென்று அவருக்குத் தெரியாவிட்டால், தேவன் எவ்வாறு நித்திய இரட்சிப்பை உறுதிப்படுத்த முடியும்?

இறுதியில், திறந்தநிலை ஆத்திகம் விவரிக்க முடியாததை விளக்க முயற்சித்து தோல்வியுற்றதாகிறது – தேவனுடைய முன்னறிவிப்புக்கும் மனிதகுலத்தின் சுதந்திர விருப்பத்திற்கும் இடையிலான உறவை விளக்க முடியாமல் தோற்றுவிட்டது. கால்வினிசத்தின் தீவிர முறைகள் தோல்வியுற்றதைப் போலவே அவை மனிதர்களை முன் திட்டமிடப்பட்ட ரோபோக்களைத் தவிர வேறொன்றுமில்லை, எனவே திறந்தநிலை ஆத்திகம் தோல்வியடைகிறது, அது தேவனுடைய உண்மையான சர்வ ஞானத்தையும் இறையாண்மையையும் நிராகரிக்கிறது. தேவன் விசுவாசத்தின் மூலம் புரிந்து கொள்ளப்பட வேண்டும், ஏனென்றால் "விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாதகாரியம்" (எபிரெயர் 11:6). எனவே திறந்தநிலை ஆத்திகம் வேதப்பூர்வமானது அல்ல. எல்லையற்ற தேவனைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது வரையறுக்கப்பட்ட மனிதனுக்கு மற்றொரு வழியாக இது முயற்சிக்கிறது. திறந்தநிலை ஆத்திகத்தை கிறிஸ்துவின் சீஷர்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். திறந்தநிலை ஆத்திகம் என்பது தேவனுடைய முன்னறிவிப்புக்கும் மனித சுதந்திரத்திற்கும் இடையிலான உறவுக்கு ஒரு விளக்கம் என்றாலும், அது வேதாகம விளக்கம் அல்ல.

English



முகப்பு பக்கம்

திறந்தநிலை ஆத்திகம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries