settings icon
share icon
கேள்வி

இயேசு தேவனுடைய ஒரேபேறான குமாரன் என்பதன் அர்த்தம் என்ன?

பதில்


"ஒரேபேறான குமாரன்" என்ற சொற்றொடர் யோவான் 3:16 இல் காணப்படுகிறது, இது கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என்று கூறப்பட்டுள்ளது. "ஒரே பேறான" என்ற சொற்றொடர் கிரேக்க வார்த்தையான மோனோகெனேஸ் என்பதன் மொழிபெயர்ப்பாகும். இந்த வார்த்தை ஆங்கிலத்தில் "ஒரே," "ஒன்றே ஒன்று" மற்றும் "ஒரேபேறான" என பல்வேறு வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இங்கே இந்த கடைசி சொற்றொடர் தான் (KJV, NASB மற்றும் NKJV ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் "ஒரே பேறான" என்னும் சொற்றொடர்) பிரச்சனையை ஏற்படுத்துகிறது. கள்ளப்போதகர்கள் இயேசு கிறிஸ்து தேவன் அல்ல என்று தங்களின் தவறான போதனையை நிரூபிக்க முயன்றனர். அதாவது, திரித்துவத்தின் இரண்டாவது நபராகிய இயேசு தேவனுக்கு சமமானவர் இல்லை என்றார்கள். அவர்கள் "ஒரேபேறான" என்ற வார்த்தையைப் பார்க்கிறார்கள், இயேசு ஒரு சிருஷ்டிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள், ஏனென்றால் காலப்போக்கில் ஒரு ஆரம்பம் இருந்த ஒருவர் மட்டுமே "ஒரே பேறானவராக" இருக்கமுடியும் என்றார்கள். இங்கே கவனிக்கத் தவறியது என்னவென்றால், "ஒரேபேறான" என்பது ஒரு கிரேக்க வார்த்தையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. எனவே, கிரேக்க வார்த்தையின் அசல் அர்த்தத்தை நாம் பார்க்க வேண்டும், ஆங்கில அர்த்தங்களை உரையில் மாற்றக்கூடாது.

எனவே மோனோகெனேஸ் என்பதன் அர்த்தம் என்ன? புதிய ஏற்பாடு மற்றும் பிற ஆரம்பகால கிறிஸ்தவ இலக்கியத்தின் (BAGD, 3-வது பதிப்பு) கிரேக்க-ஆங்கில சொற்களஞ்சியத்தின்படி, மோனோகெனேஸ் இரண்டு முதன்மையான வரையறைகளைக் கொண்டுள்ளன. முதல் வரையறை "ஒரு குறிப்பிட்ட உறவுக்குள் ஒரே ஒரு மாதிரியான ஒன்றாக இருப்பது தொடர்பானது." எபிரேயர் 11:17 இல் அதன் பயன்பாட்டுடன் இணைக்கப்பட்ட அர்த்தம் இதுதான், எழுத்தாளர் ஈசாக்கை ஆபிரகாமின் "ஒரே பேறான குமாரன்" என்று குறிப்பிடுகிறார். ஆபிரகாமுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள் இருந்தனர், ஆனால் ஈசாக்கு சாராவின் ஒரே குமாரன் மற்றும் உடன்படிக்கையின் ஒரே குமாரன் ஆவார்.

இரண்டாவது வரையறை "அதன் வகையான அல்லது வர்க்கத்தின் ஒரே ஒரு மாதிரியானது, மற்றும் தனித்துவமானது." இது யோவான் 3:16 இல் உள்ள அர்த்தமாகும். உண்மையில், இந்த வார்த்தையை இயேசுவைக் குறிப்பிடும் ஒரே ஒரு புதிய ஏற்பாட்டு எழுத்தாளர் யோவான் மட்டுமே (யோவான் 1:14, 18; 3:16, 18; 1 யோவான் 4:9 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்). யோவான் தேவனுடைய குமாரன் என்பதை நிரூபிப்பதில் யோவான் முதன்மையாக அக்கறை காட்டினார் (யோவான் 20:31), விசுவாசத்தினால் தேவனுடைய குமாரர்கள் மற்றும் குமாரத்திகளாகிய விசுவாசிகளுக்கு மாறாக, இயேசுவை தேவனுடைய ஒரேஒரு குமாரனாக -தேவனைப் போலவே தெய்வீகத் தன்மையைப் பகிர்ந்துகொள்வதற்காக அவர் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

முக்கியமான காரியம் என்னவென்றால், தேவன் மற்றும் இயேசுவை விவரிக்கும் "பிதா" மற்றும் "குமாரன்" போன்ற சொற்கள், திரித்துவத்தின் வெவ்வேறு நபர்களுக்கிடையேயான உறவைப் புரிந்துகொள்ள உதவும் மனித சொற்கள் ஆகும். ஒரு மனித தந்தைக்கும் மனித மகனுக்கும் இடையிலான உறவை நீங்கள் புரிந்து கொள்ள முடிந்தால், திரித்துவத்தின் முதல் மற்றும் இரண்டாவது நபர்களுக்கிடையேயான உறவை நீங்கள் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். சில கிரிஸ்துவ சமய ஆராதனை முறைகளை (யெகோவாவின் சாட்சிகள் போன்ற), இயேசு "உருவாக்கப்பட்ட" அல்லது "பிதாவாகிய தேவனால்" பெற்றெடுக்கப்பட்டதுபோல உண்மையில் "பிறந்தார்" என்று கற்பிக்க முயன்றால் ஒப்புமையானது அர்த்தமின்றி முறிந்துவிடும்.

English



முகப்பு பக்கம்

இயேசு தேவனுடைய ஒரேபேறான குமாரன் என்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries