புதிய வானங்கள் மற்றும் புதிய பூமி என்றால் என்ன?


கேள்வி: புதிய வானங்கள் மற்றும் புதிய பூமி என்றால் என்ன?

பதில்:
பரலோகம் எப்படியிருக்கும் என்பதை குறித்து அநேகருக்கு தவறான அபிப்பிராயம் உண்டு. புதிய வாணங்கள் மற்றும் புதிய பூமியையும் பற்றி வெளிபடுத்தல் 21-22 ஆகிய அதிகாரங்கள் ஒரு விரிவான படத்தை தருகிறது. கடைசி கால நிகழ்வுகளுக்கு பிறகு, இப்போதிருக்கிற இந்த வாணங்களும் பூமியும் அழிந்துபோகும், மற்றும் அதின் ஸ்தானத்தில் புதிய வாணங்கள் மற்றும் புதிய பூமியும் உண்டாகும். விசுவாசிகள் நித்திய காலமாக இந்த புதிய பூமியில் தான் வாசம் பண்ணுவார்கள். இந்த புதிய பூமி தான் நாம் நித்தியத்தை செலவிடும் “பரலோகம்” ஆகும். இந்த புதிய பூமியில் தான் புது எருசலேம் என்ற தேவ நகரம் இருக்கும். இந்த புதிய பூமியில் தான் முத்துக்களின் வாசல்களும் பொன் வீதிகளும் இருக்கும்.

பரலோகம், அதாவது புதிய பூமி, ஒரு ஸ்தூலமான இடம். இங்கு நாம் மாகிமையின் சரீரமுடயவர்களாய் வாழுவோம் (1 கொரிந்தியர் 15:35-58). “மேகங்களில்” தான் பரலோகம் இருப்பதாக எண்ணுவது தவறான கருத்தாகும். நாம் “ஆவிகலாக பரலோகத்தில் மிதப்போம்” எனபதும் வேதத்திற்கு அப்பாற்பட்ட கருத்து. புதிய பூமியில், பாவம், தீமை, வியாதி, வருத்தம், மரணம் இருப்பதில்லை. நாம் இருக்கும் இந்த பூமியை போல தான் புதிய பூமியும் இருக்க கூடும், ஆனால் அதில் பாவம் என்ற சாபம் இருப்பதில்லை.

புதிய வாணங்களை பற்றி என்ன? ஆகாயம் மற்றும் ஆகாய விருவையும், தேவன் வாசம் பண்ணும் இடத்தையும் “வாணங்கள்” என்று ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதர்கள் எண்ணினார்கள். ஆகையால், புதிய வானங்கள் என்று வெளிபடுத்தல் 21:1-ல் குறிப்பிடும்போது, பிர்பஞ்சம் புதிதாக சிருஷ்டிக்கப்படும் என்று சொல்லுகிறதாக இருக்கலாம். அதாவது, புதிய பூமி, புதிய ஆகாயங்கள், புதிய விண்வெளி உண்டாகலாம். தேவன் இருக்கும் பரலோகமும் மீண்டும் சிருஷ்டிக்கப்பட்டு, ஒரு “புதிய ஆரம்பம்” வரும் என்றும் எடுத்துக்கொள்ளலாம். நித்தியத்தில் நமக்கு புதிய வாணங்களுக்கு போக வாய்ப்புகள் உண்டா? அப்படி இருக்கலாம், ஆனால் நாம் அதை கண்டுக்கொள்ள காத்திருப்போமாக. பரலோகத்தை குறித்த புரிந்துகொள்ளுதலை தேவ வார்த்தை மூலமாக நாம் பெற்றுக்கொள்வோமாக.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
புதிய வானங்கள் மற்றும் புதிய பூமி என்றால் என்ன?