settings icon
share icon
கேள்வி

இயேசு கிறிஸ்துவின் வெவ்வேறு பெயர்கள் மற்றும் தலைப்புகள் யாவை?

பதில்


வேதாகமத்தில் கிறிஸ்துவின் 200 பெயர்கள் மற்றும் தலைப்புகள் உள்ளன. கிறிஸ்துவின் தன்மை, தேவனுடைய திரியேக-ஒற்றுமையில் அவரது நிலை மற்றும் நம் சார்பாக பூமியில் அவரது கிரியை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் பெயர்கள் தொடர்பான மூன்று பிரிவுகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட சில முக்கியமானவை பின்வருமாறு.

கிறிஸ்துவின் தன்மை

மூளைக்குத் தலைக்கல்: (எபேசியர் 2:20) – இயேசு அவருடைய திருச்சபையின் மூலக்கல்லாக இருக்கிறார். அவர் யூத மற்றும் புறஜாதியார், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து வயதினரிடமிருந்தும் எல்லா இடங்களிலிருந்தும் உள்ள பரிசுத்தவான்கள் அனைவரும் அவரின் பேரில் உள்ள விசுவாசத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு கட்டமைப்பாக அமைகிறார்கள்.

சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்: (கொலோசெயர் 1:15) – சிலர் தவறாக எண்ணுவதுபோல தேவன் முதலில் சிருஷ்டித்தது கிறிஸ்துவை அல்ல, ஏனென்றால் வசனம் 16 கூறுகிறது, ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

சபையின் தலையாயிருக்கிறார்: (எபேசியர் 1:22; 4:15; 5:23) – இயேசு கிறிஸ்து, ஒரு ராஜா அல்லது போப் அல்ல, சபையின் ஒரே உயர்ந்த, ராஜ்யபாரம் கொண்ட ஆளுகைச் செய்கிறவர்—அவர்களுக்காக அவர் மரித்து மற்றும் அவரில் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு இரட்சிப்பு அருளுகிறவர்.

பரிசுத்தவான்: (அப்போஸ்தலர் 3:14; சங்கீதம் 16:10) – கிறிஸ்து பரிசுத்தமானவர், அவருடைய தெய்வீக மற்றும் மனிதத் தன்மையிலும், அவருடைய மக்களுக்கு பரிசுத்த நீரூற்று. அவருடைய மரணத்தால், நாம் தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாகவும் தூய்மையாகவும் ஆக்கப்பட்டோம்.

நியாயாதிபதி: (அப்போஸ்தலர் 10:42; 2 தீமோத்தேயு 4:8) – உலகத்தை நியாயந்தீர்க்கவும் நித்தியத்தின் வெகுமதிகளை வழங்குவதற்காகவும் பிதாவாகிய தேவன் இயேசுவை நியமித்தார்.

ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமானவர்: (1 தீமோத்தேயு 6:15; வெளிப்படுத்துதல் 19:16) – பூமியில் உள்ள அனைத்து அதிகாரங்களின் மீதும், அனைத்து ராஜாக்கள் மற்றும் ஆளுகிறவர்கள் மீதும் இயேசுவுக்கு சர்வ அதிகாரம் உள்ளது, மேலும் அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதை யாரும் தடுக்க முடியாது. அவர் விரும்பியபடி அவர்களை வழிநடத்துகிறார்.

உலகத்தின் வெளிச்சம்: (யோவான் 8:12) – இயேசு பாவத்தால் இருண்ட ஒரு உலகத்திற்கு வந்தார் மற்றும் அவருடைய கிரியை மற்றும் அவரது வார்த்தைகள் மூலம் ஜீவன் மற்றும் சத்தியத்தின் ஒளியை ஊற்றினார். அவரை நம்புகிறவர்கள் அவரால் தங்கள் கண்கள் திறக்கப்பட்டு வெளிச்சத்தில் நடக்கிறார்கள்.

சமாதான பிரபு: (ஏசாயா 9:6) – இயேசு இப்பூமிக்கு வந்தது, யுத்தம் இல்லாத உலகிற்கு அமைதியைக் கொண்டுவருவதற்காக அல்ல, ஆனால் தேவனிடத்திலிருந்து பாவத்தால் பிரிக்கப்பட்ட மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் சமாதானத்தை உண்டுபண்ணும்படி வந்தார். பாவிகளை பரிசுத்தமான தேவனுடன் ஒப்புரவாக்குவதற்காக அவர் மரித்தார்.

தேவனுடைய குமாரன்: (லூக்கா 1:35; யோவான் 1:49) – இயேசு "பிதாவின் ஒரேபேறானவர்" (யோவான் 1:14). புதிய ஏற்பாட்டில் 42 முறை பயன்படுத்தப்பட்ட, "தேவனுடைய குமாரன்" என்பது கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.

மனுஷகுமாரன்: (யோவான் 5:27) – "மனுஷகுமாரன்" என்பதற்கு மாறாக இந்த சொற்றொடர் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையுடன் இருக்கும் மனிதத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.

வார்த்தை: (யோவான் 1:1; 1 யோவான் 5:7-8) – இந்த வார்த்தை திரியேக தேவனில் உள்ள இரண்டாவது நபரைக் குறிக்கிறது, அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும், முதல் சிருஷ்டிப்பில் ஒன்றுமில்லாமையில் எல்லாவற்றையும் வார்த்தையினாலே சிருஷ்டித்தார், இவர் ஆதியில் பிதாவாகிய தேவனோடு இருந்தார், மற்றும் தேவனாக இருந்தார், மற்றும் அவரால் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது.

தேவனுடைய வார்த்தை: (வெளிப்படுத்துதல் 19:12-13) – இது கிறிஸ்துவைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரியாத ஒரு பெயர் ஆகும். இது அவரது தெய்வீக ஆள்தன்மையின் இரகசியத்தைக் குறிக்கிறது.

ஜீவவார்த்தை: (1 யோவான் 1:1) – இயேசு நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் வார்த்தைகளை மட்டும் பேசவில்லை, ஆனால் இந்த வசனத்தின்படி அவர் ஜீவவார்த்தைகளாக இருக்கிறார், இது அவர் அளிக்கும் நித்திய ஜீவனின் சந்தோஷம் மற்றும் நிறைவேறுதலைக் குறிக்கிறது.

திரித்துவத்தில் அவரது ஸ்தானம்

அல்பாவும் ஓமெகாவுமானவர்: (வெளிப்படுத்துதல் 1:8; 22:13) – இயேசு தன்னை எல்லாவற்றுக்கும் ஆதியும் அந்தமும் என்று அறிவித்தார், இது மெய்யான தேவனைத் தவிர வேறு யாரையும் குறிக்கவில்லை. நித்தியத்தின் இந்த கூற்றானது தேவனுக்கு மட்டுமே பொருந்தும்.

இம்மானுவேல்: (ஏசாயா 9:6; மத்தேயு 1:23) – எழுத்தியல் பூர்வமாக "தேவன் நம்மோடு" என்று அர்த்தமாகும். ஏசாயா மற்றும் மத்தேயு இரு வேதப்பகுதிகளும் பெத்லகேமில் பிறக்கும் கிறிஸ்து தேவனாக இருப்பார் என்றும், அவர் தமது மக்களிடையே வாழும்படிக்கு ஒரு மனிதனின் சாயலில் பூமிக்கு வருவார் என்றும் உரைக்கின்றன.

நான் இருக்கிறேன்: (யோவான் 8:58, யாத்திராகமம் 3:14) – இயேசு இந்த தலைப்பை தனக்குத்தானே சூட்டிக்கொண்டபோது, யூதர்கள் தேவதூஷணம் எனக்கூறி அவரை கல்லால் அடிக்க முயன்றனர். அவர் தன்னை நித்திய தேவன், பழைய ஏற்பாட்டின் மாறாத யேகோவா என்று அறிவிக்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

எல்லாருக்கும் கர்த்தர்: (அப்போஸ்தலர் 10:36) – இயேசு உலகம் முழுவதையும், உலகிலுள்ள அனைத்து தேசங்களையும், குறிப்பாக தேவன் தெரிந்துகொண்ட மக்களையும், புறஜாதிகளையும், மற்றும் யூதர்களையும் ஆளுகிறவர்.

மெய்யான தேவன்: (1 யோவான் 5:20) – இது இயேசு, மெய்யான தேவன் என்பதற்கான நேரடி வலியுறுத்தல் ஆகும், அதாவது தெய்வீகமானவர் என்பது மட்டுமல்ல, அவரே தெய்வீகமானவர் என்பதற்கான நேரடி கூற்று ஆகும். ஒரே ஒரு தேவன் மட்டுமே இருப்பதாக வேதாகமம் கற்பிப்பதால், இது அவருடைய தன்மையை திரியேக தேவனின் பகுதியாக மட்டுமே விவரிக்க முடியும்.

பூமியின்மேல் அவரது கிரியை

நம்முடைய விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமானவர்: (எபிரேயர் 12:2) – இரட்சிப்பு தேவனுடைய ஈவு என்று விசுவாசத்தின் மூலம் நிறைவேற்றப்படுகிறது (எபேசியர் 2:8-9), மேலும் இயேசு நம் விசுவாசத்தின் ஸ்தாபகர் மற்றும் அதை முடித்து வைப்பவர் ஆவார். ஆதி முதல் அந்தம் வரை, அவர் நம்மைக் காப்பாற்றும் விசுவாசத்தின் ஆதாரம் மற்றும் நங்கூரமாக இருக்கிறார்.

ஜீவ அப்பம்: (யோவான் 6:35; 6:48) – அப்பமானது சரீர ரீதியான அர்த்தத்தில் சரீர வாழ்வை நிலைநிறுத்துவது போல், இயேசு நித்திய ஜீவனைக் கொடுக்கும் மற்றும் பராமரிக்கும் அப்பமாக இருக்கிறார். தேவன் தமது மக்களுக்கு உணவளிக்க வனாந்தரத்தில் மன்னாவை வழங்கினார், மேலும் நமக்காக தகர்க்கப்பட்ட அவருடைய சரீரத்தின் மூலம் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க அவர் ஜீவ அப்பமாகிய இயேசுவை வழங்கினார்.

மணவாளன்: (மத்தேயு 9:15) - கிறிஸ்துவை மணவாளனாகவும், சபையானது அவரது மணவாட்டியாகவும் இருப்பது அவருடன் நமக்குள்ள சிறப்பு உறவை வெளிப்படுத்துகிறது. நாம் உடைக்க முடியாதபடி கிருபையின் புதிய உடன்படிக்கையில் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்டுள்ளோம்.

மீட்பர்: (ரோமர் 11:26) – இஸ்ரவேலர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவன் தேவைப்பட்டது போலவே, கிறிஸ்துவும் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்க நமது மீட்பராக இருக்கிறார்.

நல்ல மேய்ப்பன்: (யோவான் 10:11,14) – வேதாகம காலங்களில், ஒரு நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்க தன் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருந்தான். இயேசு தனது ஆடுகளுக்காக தனது உயிரைக் கொடுத்தார், மேலும் அவர் நம்மை கவனித்து பராமரித்து, உணவளிக்கிறார்.

பிரதான ஆசாரியர்: (எபிரேயர் 2:17) – யூதர்களின் பிரதான ஆசாரியன் வருடத்திற்கு ஒரு முறை மக்களின் பாவங்களுக்கு பரிகாரம் செய்ய தேவாலயத்துக்குள் நுழைந்தான். ஆண்டவர் இயேசு சிலுவையில் ஒருமுறை தனது மக்களுக்காக அந்தச் செயல்பாட்டைச் செய்தார்.

தேவ ஆட்டுக்குட்டி: (யோவான் 1:29) – பாவத்திற்கான பரிகாரமாக ஒரு குற்றமில்லாத, மாசற்ற ஆட்டுக்குட்டியை பலியிட தேவனுடைய நியாயப்பிரமாணம் அழைப்பு விடுத்தது. ஆட்டுக்குட்டி சாந்தமாக கொலையுண்ணப்படுவதற்காக கொண்டுப்போகப்பட்டது போல இயேசு ஆனார், அவருடைய பாடுகளின் பொறுமை மற்றும் அவருடையவர்களுக்காக மரிக்க தயாராக இருந்தார்.

மத்தியஸ்தர்: (1 தீமோத்தேயு 2:5) – ஒரு மத்தியஸ்தர் இரண்டு தரத்தார்களுக்கு இடையே அவர்களை பரிந்துபேச செல்கிறார். கிறிஸ்து மனிதர்களையும் தேவனையும் பரிந்துபேசம் ஒரே ஒரு மத்தியஸ்தர் ஆவார். மரியாள் அல்லது புனிதர்களிடம் பிரார்த்தனை செய்வது விக்கிரக ஆராதனையாகும், ஏனெனில் இது கிறிஸ்துவின் மிக முக்கியமான பாத்திரத்தை புறக்கணிக்கிறது மற்றும் மத்தியஸ்தரின் பங்கை மற்றொருவருக்குக் கொடுக்கிறது.

கன்மலை: (1 கொரிந்தியர் 10:4) – வனாந்தரத்தில் மோசேயினால் அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து ஜீவனைக் கொடுக்கும் நீர் பாய்கையில், இயேசு நித்திய ஜீவனின் ஜீவத் தண்ணீரைப் பாயும் கன்மலையாக இருக்கிறார். எந்தப் புயலும் அவைகளை அசைக்காதபடி, நம் ஆவிக்குரிய வீடுகளை நாம் கட்டும் கன்மலை அவரே.

உயிர்த்தெழுதலும் ஜீவனுமானவர்: (யோவான் 11:25) – இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தது போலவே, பாவிகளை நித்திய ஜீவனுக்கு உயிர்ப்பிப்பதற்கான வழிமுறையாக இயேசுவில் அடக்கம்பண்ணப்பட்டுள்ள நம்முடைய பாவம் அவருடன் அடக்கம்பண்ணப்பட்டு, புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறோம்.

இரட்சகர்: (மத்தேயு 1:21; லூக்கா 2:11) – அவர் தம் மக்களை மீட்பதில் மரிப்பதன் மூலம், அவருடைய வல்லமையால் புதுப்பிக்க பரிசுத்த ஆவியைக் கொடுப்பதன் மூலம், அவர்களின் ஆவிக்குரிய சத்துருக்களை வெற்றி கொள்ளச் செய்வதன் மூலம், சோதனைகளில் அவர்களைத் தக்கவைப்பதன் மூலம் காப்பாற்றுகிறார் மற்றும் மரணத்தில், மற்றும் கடைசி நாளில் அவர்களை எழுப்புவதன் மூலமும் இரட்சகராக இருக்கிறார்.

மெய்யான திராட்சச்செடி: (யோவான் 15:1) – மெய்யான திராட்சச்செடியானது கிளைகளுக்கு (விசுவாசிகளுக்கு) ஆவியின் கனியை உற்பத்தி செய்ய வேண்டிய அனைத்தையும் வழங்குகிறது - இரட்சிப்பின் ஜீவத் தண்ணீர் மற்றும் வார்த்தையிலிருந்து ஊட்டச்சத்து அளிக்கிறது.

வழியும் சத்தியமும் ஜீவனுமானவர்: (யோவான் 14:6) – தேவனிடத்திற்கு செல்லுவதற்கு ஒரே வழி இயேசு மட்டுந்தான், பொய்களின் உலகில் ஒரே சத்தியம், நித்திய ஜீவனின் ஒரே மெய்யான ஆதாரம் அவரே. அவர் மூன்றையும் தற்காலிக மற்றும் நித்திய அர்த்தத்தில் உள்ளடக்குகிறார்.

English



முகப்பு பக்கம்

இயேசு கிறிஸ்துவின் வெவ்வேறு பெயர்கள் மற்றும் தலைப்புகள் யாவை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries