settings icon
share icon
கேள்வி

பரிசுத்த ஆவியானவரின் பெயர்கள் மற்றும் தலைப்புகள் என்ன?

பதில்


பரிசுத்த ஆவியானவர் பல பெயர்கள் மற்றும் தலைப்புகளால் அறியப்படுகிறார், அவற்றில் பெரும்பாலானவை அவருடைய ஊழியத்தின் சில செயல்பாடுகளை அல்லது அம்சத்தைக் குறிக்கின்றன. பரிசுத்த ஆவியானவருக்கு வேதாகமம் பயன்படுத்தும் சில பெயர்கள் மற்றும் விளக்கங்கள் கீழே உள்ளன:

வேதவாக்கியங்களின் எழுத்தாளர்: (2 பேதுரு 1:21; 2 தீமோத்தேயு 3:16) வேதாகமம், திரித்துவத்தின் மூன்றாவது நபராகிய பரிசுத்த ஆவியானவரால், எழுத்தியல் பிரகாரம் "தேவனால் சுவாசிக்கப்பட்டது" என்பதன் மூலம் அருளப்பட்டிருக்கிறது. ஆவியானவர் அனைத்து 66 புத்தகங்களின் எழுத்தாளர்களையும் அவர்களின் இருதயங்களிலும் மனதிலும் அவர் சுவாசித்ததை சரியாக பதிவு செய்யும்படிக்கு ஏவியது. ஒரு பாய்மரக்கப்பல் காற்றின் மூலம் தண்ணீரில் செல்வதற்கு நகர்த்தப்படுவதுபோல, வேதாகம எழுத்தாளர்கள் ஆவியானவரின் ஏவுதலால் நடத்தப்பட்டனர்.

தேற்றரவாளர் / ஆலோசகர் / பரிந்து பேசுகிறவர்: (ஏசாயா 11:2; யோவான் 14:16; 15:26; 16:7) இந்த மூன்று சொற்களும் கிரேக்க வார்த்தையான பாராக்கிலேட்டோஸ் என்பதன் மொழிபெயர்ப்புகளாகும், இதிலிருந்து நாம் ஆவியானவருக்கு "பாரக்கிலெட்" ஏன்னு, மற்றொரு பெயரைப் பெறுகிறோம். இயேசு சென்றபோது, அவருடைய சீடர்கள் அவருடைய ஆறுதலின் சமுகத்தை இழந்ததால் மிகவும் வேதனைப்பட்டனர். ஆனால், கிறிஸ்துவைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதலளிக்கவும், தேற்றவும், அவர்களை வழிகாட்டவும் ஆவியானவரை அனுப்புவதாக அவர் வாக்குப்பண்ணினார். நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்று ஆவியானவரும் நம் ஆவிகளுடன் "சாட்சியம் அளிக்கிறார்" இதன் மூலம் நமக்கு நமது இரட்சிப்பை உறுதிப்படுத்துகிறார்.

பாவத்தைக் கண்டித்து உணர்த்துகிறவர்: (யோவான் 16:7-11) ஆவியானவர் தேவனுடைய சத்தியங்களை மனிதர்களின் சொந்த மனதிற்குப் பயன்படுத்துகிறார், அவர்கள் பாவிகளாக இருக்கிறார்கள் என்று நியாயமான மற்றும் போதுமான வாதங்களால் அவர்களை நம்ப வைக்கிறார். ஒரு பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக நிற்க நாம் தகுதியற்றவர்கள் என்பதையும், அவருடைய நீதி நமக்குத் தேவை என்றும், அதற்கான நியாயத்தீர்ப்பு நிச்சயம் என்றும் ஒரு நாள் எல்லா மனிதர்களுக்கும் அது நிச்சயமாக வரும் என்றும் அவர் நம் இதயத்தில் கண்டித்து உணர்த்துகிறார். இந்த சத்தியங்களை மறுப்பவர்கள் ஆவியானவரின் கண்டித்து உணர்த்துதலுக்கு எதிராக கலகம் செய்கிறார்கள்.

வைப்பு / முத்திரை / அச்சாரம்: (2 கொரிந்தியர் 1:22; 5:5; எபேசியர் 1:13-14) பரிசுத்த ஆவியானவர் அவருடைய மக்கள் மீது தேவனுடைய முத்திரையாக இருக்கிறார், அவருக்கு சொந்தனமானவர்கள் என்பது அவரின் உரிமை ஆகும். விசுவாசிகளுக்கு ஆவியானவருடைய வரம், நம் பரலோக சுதந்திரத்துக்குக் செலுத்தப்படும் விலைக்கிரயம், இது கிறிஸ்து நமக்கு வாக்குறுதி அளித்து, சிலுவையில் நமக்காக செய்து முடித்தார். ஆவியானவர் நம்மை முத்திரையிட்டிருப்பதால் தான் நமக்கு நம் இரட்சிப்பு உறுதியாயிருக்கிறது. தேவனுடைய முத்திரையை யாராலும் உடைக்க முடியாது.

நடத்துகிறவர்: (யோவான் 16:13) சத்தியத்தைப் பதிவு செய்யும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் வேதத்தை எழுதிய எழுத்தாளர்களுக்கு வழிநடத்தியது போல், அந்த சத்தியத்தை அறிந்து புரிந்துகொள்ள விசுவாசிகளுக்கு வழிகாட்டுவதாக அவர் உறுதியளித்தார். தேவனுடைய சத்தியம் உலகிற்கு "பைத்தியமானது", ஏனென்றால் அது "அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராயப்படுகிறது" (1 கொரிந்தியர் 2:14). கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் ஆவிக்குரிய காரியங்களில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லாவற்றிற்கும் நம்மை வழிநடத்தும் உள்ளுணர்வு ஆவியைக் கொண்டுள்ளனர். கிறிஸ்துவுக்குச் சொந்தமில்லாதவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வழிகாட்டுவதற்கு "விளக்கவுரையாளர்" இல்லை.

விசுவாசிகளுக்குள் வசிப்பவர்: (ரோமர் 8:9-11; எபேசியர் 2:21-22; 1 கொரிந்தியர் 6:19) பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஜனங்களின் இருதயங்களில் வசிக்கிறார், மேலும் அது மறுபடியும் பிறந்த மனிதனின் தனித்துவமான பண்பாகும். விசுவாசிகளின் உள்ளிருந்து, அவர் நம்மை வழிநடத்துகிறார், வழிகாட்டுகிறார், தேற்றுகிறார், மற்றும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார், ஆவியின் கனியை நம்மில் உற்பத்தி செய்கிறார் (கலாத்தியர் 5:22-23). அவர் தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை வழங்குகிறார். கிறிஸ்துவின் அனைத்து உண்மையான விசுவாசிகளும் தங்கள் இதயங்களில் ஆவியைக் குடிக்கொண்டிருக்கிறார்கள்.

பரிந்துபேசுபவர்: (ரோமர் 8:26) பரிசுத்த ஆவியின் மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் ஆறுதலான அம்சங்களில் ஒன்று, அவர் உள்ளாக வசிக்கும் நபர்களின் சார்பாக அவர் ஏறெடுக்கும் அவருடைய பரிந்துபேசும் ஊழியமாகும். நாம் தேவனை அணுகும்போது என்ன அல்லது எப்படி ஜெபிக்க வேண்டும் என்று நமக்குத் தெரியாததால், ஆவியானவர் நமக்காகப் வேண்டுதல் செய்கிறார். அவர் நம்முடைய பெலவீனங்களில் நமக்காக "பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார்”, அதனால் நாம் சோதனைகள் மற்றும் வாழ்க்கையின் கவலைகளால் ஒடுக்கப்பட்டு, களைப்படையும்போது, அவர் கிருபையின் சிங்காசனத்தின் முன்பாக நம்மைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவர் உதவி செய்கிறார்.

வெளிப்படுத்துபவர் / சத்திய ஆவியானவர்: (யோவான் 14:17; 16:13; 1 கொரிந்தியர் 2:12-16) உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, பரிசுத்த ஆவியானவர் "உங்களை சத்தியத்திற்குள் வழிநடத்துவார்" என்று இயேசு வாக்களித்தார். நம் இருதயங்களில் உள்ள ஆவியானவரின் காரணமாக, சத்தியத்தை, குறிப்பாக ஆவிக்குரிய காரியங்களில் நாம்மால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களால் நம்மை புரிந்து கொள்ள முடியாது ஆனால் நமக்குள் கிறிஸ்துவின் மனம் அவருடைய ஆவியானவரின் நபராக இருக்கிறது.

கர்த்தருடைய / கிறிஸ்துவினுடைய / தேவனுடைய ஆவி: (மத்தேயு 3:16; 2 கொரிந்தியர் 3:17; 1 பேதுரு 1:11) இந்தப் பெயர்கள் தேவனுடைய ஆவியானவர் உண்மையில் திரித்துவ தேவனின் ஒரு பகுதி என்பதையும் அவர் மற்ற இரு நபர்களுக்கு பிதாவாகிய தேவன் மற்றும் குமாரனுக்கு நிகரானவர்தான் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. அவர் முதலில் சிருஷ்டிப்பின் போது நமக்கு வெளிப்படுத்தப்பட்டார், அவர் "ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்" என்பது சிருஷ்டிப்பில் அவருடைய பங்கைக் குறிக்கிறது, இது "சகலத்தையும் உண்டாக்கிய" இயேசுவின் பங்குக்கு ஒப்பாக இருப்பதைக் குறிக்கிறது (யோவான் 1:1-3). இயேசுவின் ஞானஸ்நானத்தின்போது, தேவனுடைய அதே திரித்துவத்தை நாம் மீண்டும் பார்க்கிறோம், ஆவியானவர் இயேசுவின் மீது இறங்கி வருகிறார், பிதாவாகிய தேவனின் சத்தம் வானத்திலிருந்து கேட்கப்படுகிறது.

ஜீவனுடைய ஆவி: (ரோமர் 8:2) "ஜீவனுடைய ஆவி" என்ற சொற்றொடரின் அர்த்தம் பரிசுத்த ஆவியானவர் ஜீவனை உருவாக்குகிறார் அல்லது கொடுக்கிறார் என்பதை தெரிவிக்கிறது, இது அவர் இரட்சிப்பைத் தொடங்குகிறார் என்று அல்ல மாறாக அவர் ஜீவனின் புதிய தன்மையை அளிக்கிறார் என்பதைக் காண்பிக்கிறது. நாம் கிறிஸ்துவின் மூலம் நித்திய ஜீவனைப் பெறுகையில், ஆவிக்குரிய வாழ்விற்குத் தேவையான ஆவிக்குரிய உணவை ஆவியானவர் வழங்குகிறார். இங்கே மீண்டும், திரித்துவ தேவன் கிரியை செய்வதை நாம் காண்கிறோம். குமாரனின் கிரியை மூலம் நாம் பிதாவினால் இரட்சிக்கப்படுகிறோம், அந்த இரட்சிப்பு பரிசுத்த ஆவியால் நிலைப்படுத்தப்படுகிறது.

போதகர்: (யோவான் 14:26; 1 கொரிந்தியர் 2:13) இயேசு தம்முடைய சீடர்களுக்கு ஆவியானவர் "சகலத்தையும்" கற்பிப்பார் என்றும், அவர்களுடன் இருந்தபோது அவர் சொன்ன காரியங்களை நினைவு கூருவார் என்றும் வாக்களித்தார். சபையைக் கட்டியெழுப்பவும் ஒழுங்கமைக்கவும் இயேசு கொடுத்த அறிவுரைகள், அவரைப் பற்றிய கோட்பாடுகள், பரிசுத்த வாழ்வுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வரவிருக்கும் காரியங்களின் வெளிப்பாடு ஆகியவற்றை நினைவில் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள் ஆவியானவரால் ஏவப்பட்டனர்.

சாட்சியளிக்கிறவர்: (ரோமர் 8:16; எபிரெயர் 2:4; 10:15) ஆவியானவர் "சாட்சிளிக்கிறவர்" என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை அவர் உறுதிச்செய்து சாட்சியமளிக்கிறார், இயேசுவும் அற்புதங்கள் செய்த சீடர்களும் தேவனால் அனுப்பப்பட்டனர் என்றும், மற்றும் வேதாகமத்தின் புத்தகங்கள் தெய்வீக உந்துதலால் ஏவப்பட்டவை என்பதையும் சாட்சியம் அளிக்கிறார். மேலும், விசுவாசிகளுக்கு ஆவியின் வரங்களை வழங்குவதன் மூலம், அவர் நமக்கும் உலகத்திற்கும் நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்று சாட்சிகொடுக்கிறார்.

English



முகப்பு பக்கம்

பரிசுத்த ஆவியானவரின் பெயர்கள் மற்றும் தலைப்புகள் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries