கேள்வி
பரிசுத்த ஆவியின் அற்புதங்கள் செய்கின்ற வரங்கள் இன்றும் இருக்கிறதா?
பதில்
இந்த கேள்வி தேவன் இன்றும் அற்புதங்கள் செய்கின்றாரா இல்லையா என்பது கிடையாது என்பதை நாம் முதலாவது அறிந்துகொள்ள வேண்டும். இன்று தேவன் மனிதர்களை சுகமாக்குவதில்லை, மனிதர்களிடம் பேசுவதில்லை, அற்புத அடையாளங்களைச் செய்வதில்லை என்று கூறுவது முட்டாள்தனமான காரியம் வேதத்திற்கு புறம்பான காரியமாகும். கேள்வியென்னவெனில் 1 கொரிந்தியர் 12-14 வரையுள்ள அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள அற்புதங்கள் செய்யும் வரங்கள் இன்றும் சபைகளில் பயன்படுத்தப்படுகின்றதா என்பது தான். மேலும் இந்த கேள்விக்கூட பரிசுத்த ஆவி ஒருவருக்கு வரங்களைக் கொடுக்க முடியுமா என்பது கிடையாது. கேள்வியென்னவெனில் இன்றும் பரிசுத்த ஆவியானவர் அற்புதங்கள் செய்கின்ற வரங்களைப்பகிர்ந்து கொடுக்கிறாரா இல்லையா என்பதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் என்ன அறிந்துக் கொள்கிறோமென்றால் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய சித்தத்தின்படி வரங்களைப் பகிர்ந்துக் கொடுக்கிறார் (1 கொரிந்தியர் 12:7-11) .
அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்திலும், நிரூபங்களிலும் அநேக அற்புதங்கள் அப்போஸ்தல்களாலும் அவரோடு நெருங்கி இருந்தவர்களாலும் செய்யப்பட்டது. ‘‘அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே” (1 கொரிந்தியர் 12:12). ஒரு வேளை எல்லா விசுவாசிகளாலும் அற்புதங்களும், அடையாளங்களும், அதிசயங்களும் நடந்திருக்குமானால் இவை அப்போஸ்தலருடைய அடையாளமாக இருந்திருக்க முடியாது. அப்போஸ்தலர் 2:22ல் இயேசு பலத்த செய்கைகளாலும், அற்புதங்களாலும், அடையாளங்களை நடப்பித்தும் அவரை வெளிப்படுத்தினார் என்று கூறுகின்றது. அப்படியே அப்போஸ்தலர்களும் உண்மையாய் தேவனுடைய செய்தியை சுமந்து செல்கிறவர்கள் என்று அவர்கள் செய்த அங்புதங்கள் மூலமாக நிரூபித்தார்கள். அப்போஸ்தலர் 14:3 சுவிசேஷம் பவுலும், பர்னபாவும் செய்த அற்புதங்களால் ‘‘உறுதிப்படுத்தப்பட்டது’’ என்று கூறுகின்றது.
1 கொரிந்தியர் 12-வது அதிகாரம் முதல் 14-வது அதிகாரம் வரை பரிசுத்த ஆவியின் வரங்களைக் குறித்தே கூறுகிறது. இந்த வாக்கியங்களிலிருந்து ‘‘சாதாரன’’ கிறிஸ்தவர்களுக்கு இந்த வரங்கள் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது (12:8-10, 28-30). பெரும்பாலும் இது எப்படி நடந்தது என்று கூறப்படவில்லை. நாம் மேலே கண்ட காரியங்களிலிருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால் அப்போஸ்தலர்கள் அற்புதங்களாலும், அடையாளங்களாலும் முத்திரைப் போடப்பட்டிருந்தார்களென்றும் சாதாரண கிறிஸ்தவர்கள் எல்லா நேரங்களிலும் அல்ல சில நேரங்களில் மட்டுமே வரங்கள் கொடுக்கபட்டிருந்தார்கள்கள் என்றும் கற்றுக்கொள்கிறோம்.
இன்று நம்மிடம் இருப்பது போல் முழுமையான வேதாகமம் ஆதித்திருச்சபைகளில் இருக்கவில்லை என்று நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். (2 திமோத்தேயு 3:16-17). ஆகவே தேவன் தாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் என்று அறிந்துக்கொள்வதற்கு தீர்க்தரிசன வரம், அறிவை உணர்த்தும் வசனம் போன்ற வரங்கள் அவர்களுக்கு அவசியமாயிருந்தது. தீர்க்தரிசன வரம் விசுவாசிகள் புதிய சத்தியத்தையும் வெளிப்பாடுகளையும் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொள்ள உதவினது. இப்போது தேவனுடைய வெளிப்பாடுகள் வேதாகமத்தில் முழுமையாயிருக்கிறது. எனவே ‘வெளிப்பாட்டு வரங்கள்’ இப்போது தேவையில்லை.
தேவன் அற்புதமாக ஜனங்களை ஒவ்வொரு நாளும் சுகப்படுத்துகிறார். தேவன் இன்றும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார். கேட்கிற சத்தத்திலோ, நம்முடைய மனதிலோ அல்லது நமது எண்ணங்கள், உள்ளுணர்வுகள் மூலமாகவோ பேசிக்கொண்டுதான் இருக்கிறார். தேவன் இன்றும் அற்புதங்களையும் அடையாளங்களையும் கிறிஸ்தவர்கள் மூலமாக செய்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் இவை அற்புதங்கள் செய்யும் வரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அற்புதங்கள் செய்கின்ற வரமானது சுவிசேஷம் சத்தியமென்றும் அப்போஸ்தலர்கள் உண்மையான தேவனுடைய ஊழியர்கள் என்றும் சாட்சிக் கொடுக்கவே கொடுக்கப்பட்டது. வேதாகமம் வரங்கள் முடிவடைந்து விட்டது என்று நேராக நமக்கு சொல்லவில்லை. ஆனால் புதிய ஏற்பாட்டில் பதிவுச் செய்யப்பட்ட அளவிற்கு இந்த காலத்தில் தேவையில்லை என்பதற்கு அடித்தளம் அமைத்திருக்கின்றது.
English
பரிசுத்த ஆவியின் அற்புதங்கள் செய்கின்ற வரங்கள் இன்றும் இருக்கிறதா?