settings icon
share icon
கேள்வி

ஆயிரமாண்டு அரசாட்சியை யார் நிரப்புவார்கள்?

பதில்


ஆயிரமாண்டு அரசாட்சியின் போது இரண்டு தனித்துவமான குழுக்கள் பூமியை நிரப்புவார்கள்—மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களைக் கொண்டவர்கள், மற்றும் உபத்திரவத்தின் மூலம் கடந்து வந்த மற்றும் ஆயிரமாண்டு அரசாட்சியில் வாழப்போகிற பூமிக்குரிய சரீரங்களைக் கொண்டவர்கள். மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களைக் கொண்டவர்கள் சபையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள், சபை எடுத்துக்கொள்ளப்படுதலில் அவர்கள் மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களைப் பெறுகிறார்கள் (1 தெசலோனிக்கேயர் 4:13-18; 1 கொரிந்தியர் 15:21-23, 51-53), மற்றும் கிறிஸ்து பூமிக்குத் திரும்பிய பிறகு உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் (வெளிப்படுத்தல் 20:4-6). பூமிக்குரிய உடல்களைக் கொண்டவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கலாம்: விசுவாசிக்கிற புறஜாதியினர் மற்றும் விசுவாசிக்கிற யூதர்கள் (இஸ்ரவேல்).

வெளிப்படுத்துதல் 19:11-16 இல், இயேசு கிறிஸ்து பூமிக்குத் திரும்புவதை நாம் காண்கிறோம், இது அவருடைய இரண்டாவது வருகை என்று அழைக்கப்படுகிறது. சபை எடுத்துக்கொள்ளப்படுதல் (1 தெசலோனிக்கேயர் 4:13-18; 1 கொரிந்தியர் 15:51-53) என்பது கிறிஸ்துவின் மத்திய வானில் தோன்றுவது, அவருடைய இரண்டாவது வருகை அல்ல. கிறிஸ்துவின் மத்திய வானில் தோன்றுதல் மற்றும் இரண்டாம் வருகைக்கு இடையே வேறுபாடு காட்ட இதை நான் குறிப்பிடுகிறேன். எந்த விதமான சபை எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழ்வையும் வெளிப்படுத்தல் 19-20 அதிகாரங்களில் குறிப்பிடப்படவில்லை. இதன் பொருள் என்னவென்றால், கிறிஸ்து திரும்பி வரும்போது பூமியில் இருக்கும் பரிசுத்தவான்கள் பூமியிலேயே தங்கியிருந்து ஆயிரமாண்டு அரசாட்சியில் பிரவேசிப்பார்கள். உயிரோடிருக்கிற ஒரு விசுவாசி மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தைப் பெறும் சபை எடுத்துக்கொள்ளப்படுதல் அல்லது அதுபோன்ற எந்தவிதமான நிகழ்வும், கிறிஸ்து பூமிக்கு வந்த இரண்டாவது நிகழ்வில் சேர்க்கப்பட்டிருந்தால், வெளிப்படுத்துதல் 19-ல் இது போன்ற ஒரு முக்கிய நிகழ்வைக் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் அத்தகைய ஒரு குறிப்பு காணப்படவில்லை . விசுவாசிகள் மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களைப் பெறும் ஒரே நிகழ்வு வெளிப்படுத்தல் 20:4-6 இல் காணப்படுகிறது, அங்கு உபத்திரவ காலத்தின் போது விசுவாசிகளாக மாறினவர்கள், அவர்களின் விசுவாசத்தின் காரணமாக கொல்லப்பட்டவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். அதே நேரத்தில் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது, மேலும் அவர்கள் மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களைப் பெறுவார்கள் (தானியேல் 12:2 ஐப் பார்க்கவும்).

மத்தேயு 25:31-46 வரையுள்ள வசனங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய மற்றொரு வேதப்பகுதியாகும். இந்த வேதப்பகுதி பொதுவாக செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை பிரித்தல் அல்லது நியாயத்தீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் நீதியுள்ள மற்றும் அநீதியுள்ள புறஜாதியாரைக் குறிக்கின்றன. கிறிஸ்து அநீதியுள்ள புறஜாதியினரை (வெள்ளாடுகளை) நியாயந்தீர்ப்பார், மேலும் அவர்கள் நித்திய தண்டனைக்காக எரிகிற அக்கினிக்கடலிலே தள்ளப்படுவார்கள் (மத்தேயு 25:46). ஆகையால், எந்தவொரு அவிசுவாசியான புறஜாதியாரும் ஆயிர வருட அரசாட்சியில் வாழமாட்டார்கள். நீதியுள்ள புறஜாதியினர், அல்லது செம்மறியாடுகள், ஆயிர வருட அரசாட்சியில் வாழ்வார்கள். அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் மற்றும் பூமியை நிரப்புவார்கள். ஆயினும், இவர்கள் மட்டும் ஆயிர வருட அரசாட்சியில் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதில்லை.

கிறிஸ்து மீண்டும் திரும்பி வரும்போது, அனைத்து இஸ்ரவேலர்களும் அவரை நம்புவார்கள் என்கிற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது (சகரியா 12:10). அவர்களும் மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களைப் பெறமாட்டார்கள் (அதாவது உபத்திரவத்திற்கு முன்பு சபை எடுத்துக்கொள்ளப்பட்டபோது மற்றும் பின்னர் உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் போன்று அல்ல). அவர்கள் ஆயிர வருட அரசாட்சியின் போது குழந்தைகளை பெற்றெடுப்பார்கள்.

எனவே, விசுவாசிகளான புறஜாதியினர், இஸ்ரவேல் மற்றும் எடுத்துக்கொள்ளப்பட்ட / உயிர்த்தெழுப்பப்பட்ட விசுவாசிகள் (மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களைக் கொண்டவர்கள் அனைவரும்) பூமியை நிரப்புவார்கள். எவ்வாறாயினும், மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களைக் கொண்ட விசுவாசிகள் இனப்பெருக்கம் செய்ய மாட்டார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் வாழும் இந்த வாழ்க்கைக்குப் பிறகு திருமணம் என்பது இல்லை (மத்தேயு 22:30).

ஆயிரமாண்டுகால அரசாட்சியின் போது பிறந்த குழந்தைகள் கடந்த கால மக்கள் அனைவரும் கொண்டிருந்ததைப்போல கிறிஸ்துவின் மீதான நம்பிக்கை வைப்பதில் பொறுப்பை கொண்டிருப்பார்கள் (கிறிஸ்து வந்ததிலிருந்து அவர் மீதான நம்பிக்கை; முன்பாக தேவன்மீதான நம்பிக்கை—ஆதியாகமம் 15:2-6; ஆபகூக் 2:4; ரோமர் 3:20). துரதிருஷ்டவசமாக, ஆயிர வருட அரசாட்சியின் போது பிறந்த அனைத்து குழந்தைகளும் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். அவ்வாறு விசுவாசியாதவர்கள், சாத்தான் மீண்டுமாய் ஆயிர வருட அரசாட்சியின் முடிவில் விடுவிக்கப்படும்போது தேவனுக்கு எதிரான கலகத்துக்கு சாத்தானால் வழிநடத்தப்படுவார்கள் (வெளிப்படுத்துதல் 20:7-10).

இந்த விஷயத்தைப் பற்றிய மேலதிக ஆய்வுக்கு (யார் ஆயிர வருட அரசாட்சியில் வாழ்வார்கள்), பின்வரும் வேதப்பகுதிகளையும் பாருங்கள்: ஏசாயா 2:2-4; சகரியா 14:8-21; எசேக்கியேல் 34:17-24; தானியேல் 7:13-14; மீகா 4:1-5.

English



முகப்பு பக்கம்

ஆயிரமாண்டு அரசாட்சியை யார் நிரப்புவார்கள்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries