settings icon
share icon
கேள்வி

வாழ்க்கையின் அர்த்தமென்ன?

பதில்


வாழ்க்கையின் அர்த்தமென்ன? வாழ்க்கையின் நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது? வாழ்க்கையின் நிறைவேறுதல் மற்றும் வாழ்வின் திருப்தி இவைகளை கண்டு பிடிப்பது எப்படி? நிலைத்திருக்கிற பொருளுள்ள, ஒரு வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வதற்கு, எனக்குள் திறமையிருக்கிறதா? அநேகர் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுப் பிடிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களை எண்ணிப்பார்த்து, ஏன் என் வாழ்வில் விரிசல்? ஏன் நான் வெறுமையாக உணருகிறேன்? நான் நினைத்ததை ஒருவேளை சாதித்தாலும், ஏன் எனக்குள் இவைகள் நடைபெறுகிறது என்று சொல்லி ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு முறை ஒரு தடகள பந்தய வீரர் அவரது விளையாட்டில் தனது உச்சத்தை அடைந்தபோது, அவரிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது; நீங்கள் முதலாவது விளையாடத் தொடங்கினபோது, விளையாட்டின் புகழ் உச்சக் கட்டத்தில் ஒருவர் உங்களிடம் என்ன சொல்ல வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள் என்று கேட்டதற்கு, அவர் “நான் புகழின் உச்சியில் வரும்பொழுது, அங்கு ஒன்றுமே இல்லை என்பதை சொல்வதற்கு ஒருவர் வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்தார். ஆம் அநேகருடைய முயற்சிகள் பல ஆண்டுகள் கழித்து, அவர்களுடைய நோக்கங்கள் ஒன்றுமில்லை என்பதையே நிருபிக்கிறது.

மனிதநேய கலாசாரத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடிக்கும் பார்வையை ஜனங்கள் இழந்துபோகிறார்கள். அநேக காரியங்களை நாடித்தேடி சென்று, அவைகளில் தங்கள் வழ்கையினுடைய அர்த்தத்தை கண்டுபிடிக்க நினைக்கிறாகள். அவர்கள் பின்தொடர்ந்து போகிற காரியங்களில் இவைகள் அடங்கும்: வியாபாரத்தில் வெற்றி, சம்பத்து, ஆஸ்தி, செல்வம், நல்ல உறவுகள், பாலுறவு, பொழுதுபோக்கு மற்றும் பிறருக்கு நன்மை செய்தல். மேற்கூறியவைகளை எல்லாம் பெற்றும் அனுபவித்தும், அநேகர் கூறுகிற அனுப சாட்சி என்னவெனில், அதிலே ஒன்றுமில்லை, ஒன்றுமே நிறைவாக இல்லை, வாழ்வே வெறுமையாக இருக்கிறது என்பதுதான்.

பிரசங்கி புத்தகத்தின் எழுத்தாளர் வழ்கையினுடைய அர்த்தத்தை அனேக வீணான வழிகளில் தேடிப்பார்த்தார். அவருக்கு கிடைத்தது என்னவோ வெறும் வெறுமை மட்டும்தான்: “மாயை, மாயை, எல்லாம் மாயை” (பிரசங்கி 1:2). இந்த புத்தகத்தை எழுதிய சாலமோன் ராஜாவினிடத்தில் அளவுக்கதியமாக செல்வமிருந்தது. அவரது காலத்திலே வாழ்ந்த எந்த ஒரு மனிதனைக் காட்டிலும் அவருக்கு ஏராளமான மனைவிகள் இருந்தார்கள். மற்ற இராஜ்ஜியங்கள் பொறாமைப்படத்தக்க அளவில் அரண்மணைகளும், தோட்டங்களும் இருந்தது. புசிப்பதற்கு சிறந்த உணவும், குடிப்பதற்கு நல்ல திராட்சை ரசமும் மற்றும் எல்லா களியாட்டங்களையும் உடையவராயிருந்தார். அவரே ஓரிடத்தில் இப்படியாக “என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை, என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை” (பிரசங்கி 2:10) சொல்கிறார். இவ்வளவு செய்தும் பலன் ஒன்றுமில்லை என புலம்புகிறார்: “என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை” (பிரசங்கி 2:11). நாம் அவ்வப்பொழுது இங்கு அனுபவிக்கிற எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நோக்கத்தோடு தேவன் நம்மை சிருஷ்டித்திருக்கிறார். சாலமோன் தேவனைக்குறித்து இப்படியாக “உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்” என்று சொல்கிறார். நாம் அனுபவிக்கிறவைகளோடு காரியம் முடிந்துவிடவில்லை என்பது இருதயத்திற்கே தெரியும்.

ஆதியாகமம் புத்தகத்தில் வாழ்க்கையினுடைய அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கான துப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது தேவன் மனிதனை தமது சாயலில் தமது ரூபதின்படி சிருஷ்டித்தார் (ஆதியாகமம் 1:26). இதனுடைய அர்த்தம் என்னவெனில், நாம் தேவனைப்போல இருக்கவேண்டும் என்பதே அல்லாமல் வேறே அல்ல.மனிதனுக்கும் பாவம் வருவதற்கு முன்பு சில காரியங்கள் மெய்யானவைகளாக இருந்தன: 1) தேவன் மனிதனை ஒரு சமூக பிராணியாக படைத்தார் (ஆதி. 2:18-25); 2) தேவன் மனிதனுக்கு வேலை கொடுத்தார்; 3) தேவன் மனிதனோடு நல்ல ஐக்கியம் வைத்திருந்தார் (ஆதி. 3:8); 4) தேவன் பூமியிலுள்ளவைகளின் மேல் மனிதனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார் (ஆதி. 1:26). இந்த உண்மைகள் வாழ்க்கையின் அர்த்தம் சம்பந்தமாக முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். தேவன் மனிதகுலத்தை தங்கள் வாழ்க்கையில் பூர்த்தி செய்ய வேண்டுமென எண்ணினார், ஆனால் நம்முடைய நிலை (குறிப்பாக தேவனோடுள்ள நம் ஐக்கியம்) பாவத்தின் வீழ்ச்சி மற்றும் பூமியில் விளைந்த சாபம் ஆகியவை நிமித்தமாக மோசமாக பாதிக்கப்பட்டன (ஆதியாகமம் 3).

வாழ்க்கையின் அர்த்தத்தை மீட்டுதருவதற்கு தேவன் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துதல் புத்தகம் நமக்கு காண்பிக்கிறது. தற்போதைய படைப்புகளை அழித்து அதாவது இந்த வானத்தையும் பூமியையும் அழித்து, புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைப்பார் என்று தேவன் வெளிப்படுத்துகிறார். அந்த நேரத்தில், அவர் தம் ஜனங்களை மீட்டு அவர்களுடன் மீண்டும் முழு ஐக்கியத்தை ஏற்படுத்துவார். விசுவாசியாதவர்களையோ நியாயந்தீர்த்து அக்கினி கடலிலே (வெளிப்படுத்துதல் 20:11-15). பாவத்தின் சாபம் நீங்கிவிடும்; பாவம், துன்பம், வியாதி, மரணம், அல்லது வேதனை போன்றவைகள் அங்கு இருக்காது (வெளிப்படுத்துதல் 21:4). தேவன் மனிதகுலத்தோடு குடியிருப்பார், அவர்கள் அவருடைய பிள்ளைகளாக இருப்பார்கள் (வெளி. 21: 7). இப்படியாக நாம் முழு வட்டத்திற்கு வந்திருக்கிறோம்: தேவன் அவரோடு ஐக்கியப்பட மனிதனை சிருஷ்டித்தார், மனுஷன் பாவம் செய்தான்; ஐக்கியம் துண்டிக்கப்பட்டது, தேவன் மீண்டுமாக ஐக்கியத்தை நிரந்தரமாக நித்தியத்தில் நிலைநாட்டுவார். காண்கிறதை எல்லாம் நாடி அவைகளை கொண்டாலும் நாம் தேவனோடு வாழுகிற நித்திய காரியங்களை இழப்போமானால், நம்முடையா எல்லா சம்பாத்தியங்களும், சாதனைகளும் ஒன்றுமே இல்லாமற்போகும். தேவன் நமக்காக ஒரு போக்கு வழி மற்றும் நித்திய ஆசிர்வாதத்தை வைத்திருக்கிறார். அது இம்மையிலும் மறுமையிலும் ஒரு அர்த்தமுள்ள வாழ்வை நமக்கு கொண்டு வரும். எப்படி இந்த நித்திய பேரின்பம் மற்றும் "பூமியில் சொர்க்கம்" நாம் பெறமுடியும்?

இயேசு கிறிஸ்துவின் மூலமாக அர்த்தமுள்ள வாழ்க்கையை மீண்டும் பெறுதல்

இப்பொழுதும் நித்தியத்திலும் நாம் அர்த்தமுள்ள வாழ்க்கையை கண்டறியவேண்டுமானால், நாம் தேவனோடு நமக்குள்ள ஐக்கியத்தை புதுப்பிக்க வேண்டும். இந்த ஐக்கியத்தை புதிப்பிக்கிற காரியம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே சாத்தியம், இவரை நம்மை தேவனோடு ஒப்புரவாக்க வல்லவராக இருக்கிறார் (ரோமர் 5:10; அப்போஸ்தலர் 4:12; யோவான் 1:12; 14:6). இரட்சகராக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை நாம் நம்பும்போது இரட்சிப்பு மற்றும் நித்திய ஜீவன் நமக்கு கிடைக்கிறது. அந்த இரட்சிப்பு விசுவாசத்தின் மூலம் கிருபையால் பெற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, கிறிஸ்து நம்மை புதிய சிருஷ்டிகளாக சிருஷ்டிக்கிறார், பிறகு நாம் அவரை நெருங்கி வளர்ந்து, அவரையே சார்ந்து பயணத்தைத் தொடங்குகிறோம்.

நாம் நம்முடிய வாழ்க்கையின் அர்த்தத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறார். “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10) என்று இயேசு சொன்னார். ஒரு "முழு" வாழ்க்கை தர்க்கரீதியாக அர்த்தமுள்ளதாகவும், அதேவேளையில் நோக்கமற்ற அலைந்துபோகும் செயலாகவும் உள்ளது.

வாழ்க்கையின் அர்த்தம் தேவனுடைய மகிமைக்குள் மூடப்பட்டுள்ளது. அவர் தெரிந்துகொண்ட அழைத்தபோது, "நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்" (ஏசாயா 43:7). நாம் சிருஷ்டிக்கப்பட்டதன் பிரதான காரணம் தேவனுடைய மகிமைக்காகவாகும். எப்பொழுதெல்லாம் தேவனுடைய மகிமையை நமது மகிமையால் மாற்றுகிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் நமது வாழ்கையின் அர்த்தத்தை இழந்து விடுகிறோம். “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்” (மத்தேயு 16:24-25). “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4).

Englishமுகப்பு பக்கம்

வாழ்க்கையின் அர்த்தமென்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries