ஒரு கிறிஸ்தவர் (ஆணோ பெண்ணோ) அவிசுவாசியை மணந்தால் என்ன செய்ய வேண்டும்?


கேள்வி: ஒரு கிறிஸ்தவர் (ஆணோ பெண்ணோ) அவிசுவாசியை மணந்தால் என்ன செய்ய வேண்டும்?

பதில்:
ஒரு அவிசுவாசியை திருமணம் செய்து கொள்வது என்பது ஒரு கிறிஸ்தவ விசுவாசிக்கு தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சவால்களில் ஒன்றாகும். திருமணம் என்பது ஒரு சரீரத்தில் இரண்டு பேரை ஒன்றாக இணைக்கும் ஒரு புனித உடன்படிக்கையாகும் (மத்தேயு 19:5). ஒரு விசுவாசியும் அவிசுவாசியும் அமைதியான ஒற்றுமையுடன் வாழ்வது என்பது மிகவும் கடினம் (2 கொரிந்தியர் 6:14-15). திருமணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கைத்துணையாளர் கிறிஸ்தவராக மாறினால், இரண்டு வெவ்வேறு அதிகாரங்களின் கீழ் வாழ்வதற்கான உள்ளார்ந்த போராட்டங்கள் விரைவில் வெளிப்படும்.

பெரும்பாலும் இந்த சூழ்நிலையிலுள்ள கிறிஸ்தவர்கள் திருமணத்திற்கு வெளியே செல்லும் ஒரு வழியைத் தேடுவார்கள், தேவனுக்கு உண்மையிலேயே மரியாதை செலுத்துவதற்கான ஒரே வழி இதுதான் என்று நம்புகிறார்கள். ஆயினும், அவருடைய வார்த்தை இதற்கு மாறாக கூறுகிறது. நம்முடைய சூழ்நிலையில் திருப்தி அடைவது மட்டுமல்லாமல், நம்முடைய சவாலான சூழ்நிலைகளில் இருந்து அவருக்கு மகிமையைக் கொண்டுவருவதற்கான வழிகளைத் தேடுவதும் மிக முக்கியம் (1 கொரிந்தியர் 7:17). 1 கொரிந்தியர் 7:12-14-ல் அவிசுவாசிகளுடன் திருமணமானவர்களைக் குறித்து வேதாகமம் குறிப்பாக உரையாற்றுகிறது: “மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள். என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.”

அவிசுவாசிகளை மணந்த கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமைக்காக கிறிஸ்துவை சாட்சிப்படுத்தவும், தேவனுடைய பிரசன்னத்தின் வெளிச்சத்தில் வாழவும் ஜெபிக்க வேண்டும் (1 யோவான் 1:7). அவர்கள் தங்கள் இருதயங்களை மாற்றி புதுப்பித்து பரிசுத்த ஆவியின் கனியை உற்பத்தி செய்ய தேவனின் மாற்றும் வல்லமையை நாட வேண்டும் (கலாத்தியர் 5:22-23). ஒரு கிறிஸ்தவ மனைவி தன் அவிசுவாசியான கணவனிடம் கூட (1 பேதுரு 3:1) அடிபணிந்த இருதயத்தைக் கொண்டிருக்க கடமைப்பட்டிருக்கிறாள், மேலும் அவள் தேவனோடு நெருக்கமாக இருக்க வேண்டும், அவ்வாறு செய்ய அவளுக்கு உதவ தேவனுடைய கிருபையை அவள் நம்ப வேண்டும்.

கிறிஸ்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழவேண்டுமென்பதில்லை; சபை மற்றும் வேதாகமப் படிப்புக் குழுக்கள் போன்ற வெளி மூலங்களிலிருந்து அவர்கள் ஆதரவைப் பெற வேண்டும். ஒரு அவிசுவாசியை திருமணம் செய்து கொள்வது உறவின் புனிதத்தன்மையை மாற்றாது, எனவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் தனது மனைவிக்காக ஜெபிப்பதும், ஒரு நல்ல முன்மாதிரியை அவர்கள் முன்பாக வைப்பதும் முன்னுரிமையாக இருக்க வேண்டும், இதுவே கிறிஸ்துவின் ஒளியை பிரகாசமாக பிரகாசிக்க அனுமதிக்கிறது (பிலிப்பியர் 2:14). 1 பேதுரு 3: 1-ல் உள்ள உண்மை, ஒரு நம்பிக்கையற்ற வாழ்க்கைத் துணை “வென்றது” - ஒரு அவிசுவாசியை மணந்த ஒவ்வொரு கிறிஸ்தவரின் நம்பிக்கையும் குறிக்கோளும் ஆகும்.

English


முகப்பு பக்கம்
ஒரு கிறிஸ்தவர் (ஆணோ பெண்ணோ) அவிசுவாசியை மணந்தால் என்ன செய்ய வேண்டும்?