மிருகத்தின் முத்திரை (666) என்றால் என்ன?


கேள்வி: மிருகத்தின் முத்திரை (666) என்றால் என்ன?

பதில்:
"மிருகத்தின் முத்திரையைக்" குறிப்பிடுகிற வேதாகமத்தின் முக்கியமான பகுதி வெளி. 13:15-18 வரையுள்ள பகுதியாகும். வெளிப்படுத்தின விசேஷத்தில் காணப்படுகிற மற்ற குறிப்புகள் 14:9, 11, 15:2, 16:2, 19:20, 20:4 ஆகிய வசனங்களில் காணலாம். இந்த முத்திரை எதிர்க்கிறிஸ்து மற்றும் கள்ளத்தீர்க்கதரிசியின் (எதிர்க்கிறிஸ்துவின் செய்தி தொடர்பாளர்) பின்பற்றுகிறவர்களுக்கு அடையாளமான முத்திரையாக இருக்கிறது. கள்ளத்தீர்க்கதரிசி (இரண்டாவது மிருகம்) இந்த அடையாளத்தை மக்களுக்குக் கொடுப்பதற்கு காரணமாக அமைகிறது. இந்த முத்திரையானது வெறுமனே நாம் சுமந்து செல்கிற ஒரு அட்டையல்ல மாறாக கையில் அல்லது நெற்றியில் பொருத்தப்படுகிறதாக இருக்கிறது.

மருத்துவ உள்வைப்பு சில்லு தொழில்நுட்பங்களில் சமீபத்திய முன்னேற்றங்கள் வெளிப்படுத்துதல் 13-ஆம் அதிகாரத்தில் பேசிய மிருகத்தின் குறிப்பில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இன்று நாம் பார்க்கும் தொழில்நுட்பம் இறுதியில் மிருகத்தின் அடையாளமாக பயன்படுத்தப்படக்கூடிய ஆரம்ப கட்டங்களை பிரதிபலிக்கிறது. ஒரு மருத்துவ உள்வைப்பு சில்லு மிருகத்தின் முத்திரை அல்ல என்பதை உணருவது முக்கியம். மிருகத்தின் முத்திரை எதிர்க்கிறிஸ்துவை வணங்குவோருக்கு மட்டுமே கொடுக்கப்படும். உங்கள் வலது கையில் அல்லது நெற்றியில் செருகப்பட்ட ஒரு மருத்துவ அல்லது நிதி நுண்ணிய சில்லு மிருகத்தின் முத்திரை அல்ல. மிருகத்தின் முத்திரையானது எதிர்க்கிறிஸ்துவிற்கு தேவைப்படுகிற ஒரு கடைசிக்கால அடையாளமாக வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு எதிர்க்கிறிஸ்துவினால் அனுமதிக்கப்பட வேண்டும், ஆக அது எதிர்க்கிறிஸ்துவை நமஸ்கரித்து ஆராதிப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தின் பல நல்ல விளக்கவுரையாளர்கள் மிருகத்தின் முத்திரையைக் குறித்த சரியான தன்மையை கூறுவதில் பரவலாக வேறுபடுகின்றனர். உள்ளே பொருத்தப்படுகிற நுண் சில்லுவை அல்லாமல், மற்ற ஊகங்களாகிய ஒரு அடையாள அட்டை, தோல் மீது போட்டுக்கொள்ளுகிற பச்சை, பட்டைக் குறியீடு, அல்லது எதிர்க்கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு விசுவாசமாக இருக்கும் ஒருவர் அடையாளம் ஆகியவை அடங்கும். இந்த கடைசி பார்வையில் குறைந்தபட்ச ஊகம் தேவை, ஏனென்றால் அதைக்குறித்து வேதாகமம் நமக்கு எந்த தகவலையும் கொடுக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த விஷயங்கள் சாத்தியம், ஆனால் அதே நேரத்தில் அவைகள் அனைத்தும் ஊகங்களாகவே இருக்கின்றன. ஊகங்களான விவரங்கள் குறித்து நாம் நிறைய நேரம் செலவழிக்கக்கூடாது.

666 என்கிற எண்ணின் அர்த்தம் ஒரு மர்மமாகவே இருக்கிறது. ஜூன் 6, 2006-06/06/06 க்கு தொடர்பு இருப்பதாக சிலர் ஊகிக்கின்றனர். எனினும், வெளிப்படுத்துதல் 13-ஆம் அதிகாரத்தில், 666 என்கிற எண் ஒரு தேதியை குறிக்காமல் ஒரு நபரை அடையாளம் காட்டுகிறது. வெளி. 13:18 நமக்கு சொல்லுகிறது, “இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.” எது எப்படியோ, எண் 666 எதிர்க்கிறிஸ்துவை அடையாளப் படுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் 666-உடன் சில நபர்களை அடையாளம் காண முயற்சித்திருக்கிறார்கள். அவைகளில் ஒன்றும் உறுதியாக இல்லை. அதனால்தான் வெளி. 13:18-ல், இந்த எண்ணிற்கு ஞானம் தேவைப்படுகிறது என்று கூறுகிறது. எதிர்க்கிறிஸ்து வெளிப்படுத்திய போது (2 தெசலோனிக்கேயர் 2: 3-4), அவன் யார் மற்றும் இந்த எண் 666 அவனோடு எப்படி தொடர்புடையதாக இருக்கிறது போன்றவற்றை தெளிவு படுத்தும்.

English


முகப்பு பக்கம்
மிருகத்தின் முத்திரை (666) என்றால் என்ன?