settings icon
share icon
கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்


பரலோகத்தில் வெவ்வேறு நிலைகள் இருப்பதாக வேதம் சொல்லும் மிக நெருக்கமான வேதபாகம் 2 கொரிந்தியர் 12:2-ல் காணப்படுகிறது, “கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.” சிலர் இதை பரலோகத்தின் மூன்று வெவ்வேறு நிலைகள் என்று, “மிகுந்த அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவர்களுக்கு” அல்லது உயர் மட்ட ஆன்மீகத்தைப் பெற்ற கிறிஸ்தவர்கள், “சாதாரண” கிறிஸ்தவர்களுக்கு ஒரு நிலை, மற்றும் தேவனை உண்மையுடன் சேவிக்காத கிறிஸ்தவர்களுக்கு ஒரு நிலை ஆகியவற்றைக் குறிக்கிறது என்று சிலர் விளக்குகிறார்கள். இந்த பார்வைக்கு வேதத்தில் எந்த அடிப்படையும் இல்லை.

பவுல் மூன்று வானங்களோ அல்லது பரலோகத்தின் மூன்று நிலைகளோ இருப்பதாகக் கூறவில்லை. பல பண்டைய கலாச்சாரங்களில், மக்கள் மூன்று வெவ்வேறு “பகுதிகள்” விவரிக்க பரலோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் - வானம், விண்வெளி, பின்னர் ஒரு ஆவிக்குரிய பரலோகம். தேவன் அவரை "ஆவிக்குரிய" பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார் என்று பவுல் கூறுகிறார் – தேவன் வாழும் சரீரப்பிரகாரமான பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட சாம்ராஜ்யம். வானத்தின் வெவ்வேறு நிலைகளின் கருத்து ஒரு பகுதியாக டான்டேயின் “தெய்வீக நகைச்சுவை” (The Divine Comedy) என்னும் புத்தகத்திலிருந்து வந்திருக்கலாம், அதில் கவிஞர் பரலோகம் மற்றும் நரகம் இரண்டையும் ஒன்பது வெவ்வேறு நிலைகளைக் கொண்டிருப்பதாக விவரிக்கிறார். தெய்வீக நகைச்சுவையானது ஒரு கற்பனையான படைப்பு ஆகும். பரலோகத்தின் வெவ்வேறு நிலைகளின் யோசனை வேதத்திற்கு அந்நியமானது ஆகும்.

வேதம் பரலோகத்தில் இருக்கும் வெவ்வேறு வெகுமதிகளைப் பற்றி பேசுகிறது. வெகுமதிகளைப் பற்றி இயேசு இப்படியாகச் சொன்னார், “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” (வெளிப்படுத்துதல் 22:12). நாம் செய்தவற்றின் அடிப்படையில் இயேசு வெகுமதிகளை விநியோகிப்பார் என்பதால், விசுவாசிகளுக்கு வெகுமதி அளிக்கும் நேரம் இருக்கும் என்றும், வெகுமதிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன என்றும் பாதுகாப்பாக சொல்லலாம்.

தேவனின் சுத்திகரிப்பு நெருப்பைத் தக்கவைக்கும் படைப்புகள் மட்டுமே நித்திய மதிப்பைக் கொண்டுள்ளன, மேலும் அவை வெகுமதிக்கு தகுதியானவைகள் ஆகும். அந்த மதிப்புமிக்க படைப்புகள் "தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்கள்" (1 கொரிந்தியர் 3:12) என்று குறிப்பிடப்படுகின்றன, அவை கிறிஸ்துவில் விசுவாசத்தின் அஸ்திபாரத்தின் மேல் அதன் அடிப்படையில் கட்டப்பட்டவையாகும். வெகுமதி அளிக்கப்படாத படைப்புகள் "மரம், வைக்கோல் மற்றும் புல்" என்று அழைக்கப்படுகின்றன; இவை தீய செயல்கள் அல்ல, ஆனால் நித்திய மதிப்பு இல்லாத ஆழமற்ற செயல்கள் ஆகும். வெகுமதிகள் "கிறிஸ்துவின் நியாயாசனத்தில்" விநியோகிக்கப்படும், இது விசுவாசிகளின் வாழ்க்கை வெகுமதிகளின் நோக்கத்திற்காக மதிப்பீடு செய்யப்படும். விசுவாசிகளின் "நியாயத்தீர்ப்பு" ஒருபோதும் பாவத்திற்கான தண்டனையைக் குறிக்காது. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது நம்முடைய பாவத்திற்காக தண்டிக்கப்பட்டார், தேவன் நம்மைப் பற்றி இப்படியாகச் சொன்னார்: "நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எபிரெயர் 8:12). என்ன ஒரு மகத்தான சிந்தனை! கிறிஸ்தவர்கள் ஒருபோதும் தண்டனைக்கு அஞ்சத் தேவையில்லை, ஆனால் அவர்கள் இரட்சகரின் காலடியில் எறியக்கூடிய வெகுமதியின் கிரீடங்களை எதிர்நோக்கலாம். முடிவில், பரலோகத்தின் வெவ்வேறு நிலைகள் இல்லை, ஆனால் பரலோகத்தில் வெவ்வேறு அளவிலான வெகுமதிகள் உள்ளன.

English



முகப்பு பக்கம்

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries