settings icon
share icon
கேள்வி

சபை எடுத்துக்கொள்ளப்படுதலில் எடுத்துக்கொள்ளப்பட நான் எவ்வாறு ஆயத்தமாக இருக்க முடியும்?

பதில்


நீங்கள் நினைப்பதை விட இது மிகவும் எளிமையானது. சுருக்கமான பதில் என்னவென்றால், நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராகப் பெற்றிருக்க வேண்டும். இப்போது விரிவான பதில். இந்த கேள்வியை நீங்கள் கேட்கும்போது, சபை எடுத்துக்கொள்ளப்படும் போது அனைத்து கிறிஸ்தவர்களும் எடுக்கப்பட மாட்டார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று கருதுகிறோம். பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் "சூப்பர் கிறிஸ்தவர்கள்" மட்டுமே சபை எடுத்துக்கொள்ளப்படும் போது எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும், மற்ற எல்லா கிறிஸ்தவர்களும் உபத்திரவத்தால் பாதிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கலாம். இது உண்மையல்ல, இது ஏன் உண்மையல்ல என்பதை நாங்கள் வேதத்திலிருந்து உங்களுக்குக் காண்பிப்போம்.

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் உபத்திரவத்தின் நோக்கம். உபத்திரவம் பூமியில் நியாயத்தீர்ப்பு மற்றும் இஸ்ரவேலுக்கான தண்டனை நேரம். இஸ்ரவேலும் சபையும் ஒரே மக்கள் குழு அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். சபை ஒரு ஆவிக்குரிய ஜீவனுள்ளது. சபையில் உள்ள மக்கள் அவர்களின் ஆவிக்குரிய பிறப்பின் காரணமாக தொடர்புடையவர்கள் (மீண்டும் பிறப்பதன் மூலம் - யோவான் 3:3). இஸ்ரவேல் மக்கள் (யூதர்கள்) இரத்தத்துடன் தொடர்புடையவர்கள். இது பழைய ஏற்பாட்டில் தேவன் சிறப்பு வாக்குறுதிகளை வழங்கிய மக்களின் இனம். இஸ்ரவேலின் விசுவாசமின்மைக்காக தேவன் நியாயத்தீர்ப்பின் நேரத்தை அறிவித்தார். இந்த நியாயத்தீர்ப்பின் நேரம் இஸ்ரவேலுக்கு மட்டுமே என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது (தானியேல் 9:24-27).

காபிரியேல் தேவனிடமிருந்து தானியேலுக்கு ஒரு செய்தியை கொண்டு வந்தார் (9:20-21). தானியேல் 9:24 கூறுகிறது, "மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது." இந்த செய்தியில் காபிரியேல் தானியேலுக்கு "உன் ஜனத்தின்மேலும்" என்று குறிப்பிடுகிறார். தானியேலின் மக்கள் யூதர்கள், இஸ்ரவேல் தேசம். தேவன் இஸ்ரவேல் தேசத்தின்மேல் கடந்து செல்ல வேண்டிய 70 வாரங்களை அறிவித்தார். இந்த "70 வாரங்கள்" உண்மையில் எபிரேய மொழியில் "70 ஏழுகள்" ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 70 மடங்கு 7 ஆண்டுகள் அல்லது 490 ஆண்டுகள் ஆகும். அந்த ஆண்டுகளில், அவற்றில் 483 (69 முறை 7-கள்) பாபிலோனில் இஸ்ரேல் சிறைப்பிடிக்கப்பட்டதிலிருந்து மேசியா சங்கரிக்கப்படுவது வரை நிறைவேறியது (கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது). இது இன்னும் 7 வருட நியாயத்தீர்ப்பை இன்னும் நிறைவேறவில்லை என்பதையும் காண்பிக்கிறது. அந்த 7 வருடங்கள் உபத்திரவத்தின் ஆண்டுகள் ஆகும். இந்த தீர்க்கதரிசனம் முதன்மையாக இஸ்ரவேலைப் பற்றியது, மற்றும் இந்த நியாயத்தீர்ப்பின் நோக்கம் "மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும்" ஆகும்.

இப்போது, கிறிஸ்தவர்கள் உபத்திரவ காலத்தில் இருக்க மாட்டார்கள் என்பதையும் நாம் வேதத்திலிருந்து நிரூபிக்க முடியும். 1 தெசலோனிக்கேயர் 4:13 முதல் 5:9 வரையிலான ஆய்வு இதைக் காட்டுகிறது. இந்த பத்தியில் பவுல் சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் கர்த்தருடைய நாள் பற்றி எழுதுகிறார். 1 தெசலோனிக்கேயர் 5:9 கிறிஸ்தவர்களுக்கு இந்த வாக்குறுதியை அளிக்கிறது: "தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்." இந்த வசனத்தை கூர்ந்து கவனியுங்கள். தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல் என்று பவுல் கூறுகிறார் (5:2).

கிறிஸ்தவர்கள் உபத்திரவ காலத்தின் உபத்திரவத்தை அனுபவிக்க மாட்டார்கள் என்பதற்கு மேலும் சான்றுகள் 1 கொரிந்தியர் நிருபத்தில் கூறப்பட்டிருக்கிறது. அந்த நிருபத்தில் பவுல் மாம்சத்திற்குரிய கிறிஸ்தவர்கள் என்று விசுவாசிகளை கடுமையாக கண்டிக்கிறார். ஆனால் 15-ஆம் அதிகாரத்தில், பவுல் சபை எடுத்துக்கொள்ளப்படுதல் பற்றி எழுதுகிறார், மேலும் கொரிந்து சபை விசுவாசிகள், மாம்சத்திற்குரிய கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எவரும் எடுத்துக்கொள்ளப்படாமல் கைவிடப்படுவார்கள் என்று அவர் ஒருபோதும் குறிப்பிடுவதில்லை. இயேசு கிறிஸ்துவின் உண்மையான விசுவாசிகள் உபத்திரவத்தை கடந்து செல்லவேண்டியதில்லை.

நீங்கள் கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராகப் பெறவில்லை என்றால் மட்டுமே, சபை எடுத்துக்கொள்ளப்படுதலில் நீங்கள் கைவிடப்படுவதற்கான ஒரே வழி.

English



முகப்பு பக்கம்

சபை எடுத்துக்கொள்ளப்படுதலில் எடுத்துக்கொள்ளப்பட நான் எவ்வாறு ஆயத்தமாக இருக்க முடியும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries