என்னுடைய வாழ்விற்கான தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளுதல் எப்படி?


கேள்வி: என்னுடைய வாழ்விற்கான தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளுதல் எப்படி?

பதில்:
தேவனுடைய சித்தத்தை தெரிந்துகொள்கிற காரியம் முக்கியமானதாக இருக்கிறது. தேவனை அறிந்து அவர் சித்தத்தின்படி செய்கிறவர்களே தம்முடைய மெய்யான உறவுகள் என இயேசு கூறினார்: “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்” (மாற்கு 3:35). இரண்டு குமாரர்களைக் குறித்த உவமையில், பிதாவினுடைய சித்தத்தை செய்ய தவறிய பிரதான ஆசாரியர்களையும் மூப்பர்களையும் இயேசு கடிந்து கொள்ளுகிறார்; குறிப்பாக “விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை” (மத்தேயு 21:32). பாவத்திலிருந்து மனந்திரும்பி இயேசுவை நம்புவதே தேவனுடைய சித்தமாக இருக்கிறது. நாம் இந்த பிரதான படியில் அடியெடுத்து வைக்கவில்லையென்றால், நாம் தேவனுடைய சித்தத்தை செய்வதற்கு ஒப்புக்கொடுக்காமல் இருக்கிறோம்.

விசுவாசத்தினால் கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறோம் (யோவான் 1:12), பிறகு அவர் நம்மை அவர் வழியில் நடத்த பிரியப்படுகிறார் (சங்கீதம் 143:10). நம்மிடம் காண்பிக்கக் கூடாதபடிக்கு தேவன் தமது சித்தத்தை மறைத்து வைத்திருக்கவில்லை; அவர் அதை வெளிப்படுத்தவே விரும்புகிறார். அதைக்குறித்து ஏற்கனவே அவருடைய வார்த்தையில் எண்ணற்ற முறை வழி நடத்துதல்களை நல்கியிருக்கிறார். “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெசலோனிக்கேயர் 5:18). நாம் நற்கிரியைகளை செய்யவேண்டும் (1 பேதுரு 2:15). “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது: அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து” (1 தெசலோனிக்கேயர் 4:3).

தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளவும் முடியும் அதை நிரூபிக்கவும் முடியும். ரோமர் 12:2ல், “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்று வாசிக்கிறோம். இந்த வசனத்தில் நமக்கு ஒரு முக்கிய வரிசை கொடுக்கப்பட்டிருக்கிறது: ஒரு தேவனுடைய பிள்ளை இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் இருக்கவேண்டும் மற்றும் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக அவர்களுடைய மனம் ஆவியானவராலே புதிதாக்கப்பட்டு மறுரூபமாகவேண்டும். அவர்களுடைய மனது தேவனுடைய காரியங்களின் பிரகாரம் புதுப்பிக்கப்படும்போது அவர்கள் தேவனுடைய சித்தம் இன்னதென்று அறிந்துகொள்ள முடியும்.

நாம் தேவனுடைய சித்தம் இன்னதென்று அறிந்துகொள்ள நாடும்போது, நாம் சிந்திக்கிறபடி வேதாகமம் வேண்டாம் செய்யக்கூடாது என தடைசெய்கிற காரியங்கள் என்ன என்பதை தேடி கண்டு பிடிப்பதல்ல. உதாரணமாக, வேதாகமத்தில் திருடுவது தடைசெய்யப்பட்டுள்ளது; இதஈகுரித்து தேவன் மிகத்தெளிவாக கூறியிருக்கிறபடியினால் நமக்கு தெரியும் நாம் வங்கியில் கொள்ளையடிப்பது தேவனுடைய சித்தம் அல்ல. இதற்காக நாம் ஜெபிக்கவேண்டிய அவசியமும் இல்லை. அதேவேளையில், நாம் என்னென்ன காரியங்களை செய்தால் தேவனுடைய நாம் மகிமைப்படும் மற்றும் பிறரும் அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் வளருவதற்கு ஊக்குவிக்கும் எனவும் நிதானித்துப்பார்க்கவேண்டும்.

தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதற்கு பொறுமை தேவை என்பதால் சிலவேளைகளில் கடினமாக இருக்கிறது. நமக்கு இருக்கிற ஒரு பிரச்னை என்னவென்றால், தேவனுடைய சித்தம் அனைத்தையும் ஒரே சமயத்தில் தெரிந்துகொள்ள விரும்புவது ஆகும், ஆனால் தேவன் அவ்வாறு செயல்படுவதில்லை, அவர் விரும்புகிறபடி அவர் விரும்புகிற காரியங்களில் அவருடைய சித்தத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு தடவை நமக்கு ஒரு படி எடுத்து வைக்க அனுமதிக்கிறார், அதுபோலவே ஒவ்வொரு படியாக விசுவாசத்தின் மூலமாக அவரையே நம்பி நாம் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் மேலும் வழிநடத்துதலுக்காக காத்திருக்கையில், நமக்கு தெரிந்திருக்கிற நன்மையான காரியங்களை செய்வதில் நாம் மும்முரமாக இருந்துவிடுகிறோம் (யாக்கோபு 4:17).

நாம் எப்போதும் தேவன் நமக்கு நாம் விரும்புகிற குறிப்பிட்ட காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும் என வாஞ்சிக்கிறோம். உதாரணமாக, எங்கே வேலை வேண்டும், என்ன வேலை வேண்டும், எங்கு வசிக்கவேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும், எந்த மகிழுந்து வாங்க வேண்டும் முதலியவற்றை தேவன் நமக்குத் தருவார் அல்லது தரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். தேவன் நம்மைத் தேர்ந்தெடுப்பதற்கு அனுமதிக்கிறார், அதேவேளை நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து அவர் விரும்புகிறபடி இருப்போமானால் தவறான தெரிவுகளை தேர்ந்தெடுப்பதில் இருந்து நம்மை பாதுகாக்கிறார் (அப்போஸ்தலர் 16:6-7 பார்க்கவும்).

ஒரு நபரை நாம் அதிகமதிகமாக தெரிந்துகொள்ளும்போது, அவருக்கு என்னென்ன காரியங்கள் பிடிக்கும் என்பதை சுலபமாக அறிந்து கொள்கிறோம். உதாரணமாக, ஒரு சிறுவன் மிகவும் பரபரப்பாக இருக்கும் ஒரு தெருவில், ஒரு பந்து எழும்பி போவதை காநல்லம், உடனே அதன் பின்னால் போகவேண்டிய அவசியமில்லை.ஏனென்றால் "என் அப்பா அதை செய்ய விரும்பவில்லை" என்று அவன் அறிந்திருக்கிறான். ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் அறிவுரைக்காக அவனது தந்தையிடம் அவன் கேட்க வேண்டிய அவசியம் இல்லை; அவன் தனது தந்தையை அறிந்திருப்பதால் அவர் என்ன சொல்லுவார் என்பது அவனுக்குத் தெரியும். நமக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள உறவில் இந்த காரியம் மெய்யாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, ஆவியானவரில் சார்ந்து தேவனோடு நடக்கும்போது, நமக்கு கிறிஸ்துவின் சிந்தையை தேவன் கொடுக்கிறார் (1 கொரிந்தியர் 2:16). நாம் அவரை அறிந்திருக்கிறோம், அவரும் அவருடைய சித்தத்தை அறிய நமக்கு உதவி செய்கிறார். தேவனுடைய வழிநடத்துதல் நமக்கு துரிதமாக கிடைக்கிறதாய் இருக்கிறது. “உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்” (நீதிமொழிகள் 11:5).

நாம் கர்த்தருடன் நெருக்கமாக நடந்துகொண்டு உண்மையிலேயே நம் வாழ்வில் அவருடைய சித்தத்தை செய்ய விரும்புகிறோமானால், தேவன் நம் இருதயங்களில் அவர் விருப்பங்களை வைப்பார். இதில் முக்கியமானது என்னவென்றால், தேவனுடைய சித்தத்தை மட்டுமே விரும்பவேண்டும், நம் சொந்த விருப்பங்களையல்ல. “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4).

English
முகப்பு பக்கம்
என்னுடைய வாழ்விற்கான தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளுதல் எப்படி?