settings icon
share icon
கேள்வி

இதுதான் பாவம் என்று நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்?

பதில்


இந்த கேள்வியில் இரண்டு பிரச்சனைகள் அடங்கியிருக்கிறது: சிலவற்றை இது பாவம் என்று வேதம் நேரடியாக சொல்லுகிறது, சிலவற்றை வேதம் நேரடியாக பாவம் என்று கூறுவதில்லை. வேத பகுதிகள் சிலவற்றில் பாவத்தின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது: உதாரணமாக நீதிமொழிகள் 6:16-19, கலாத்தியர் 5:19-21, மற்றும் 1 கொரிந்தியர் 6:9-10. இந்த வேதப்பகுதிகள் சில செயல்களை பாவம் என்று குறிப்பிட்டு அவைகள் தேவனுக்கு பிரியமில்லாதவைகள் என்றும் சொல்லுகிறது. கொலை, வேசித்தனம், பொய், களவு போன்ற செயல்களை வேதம் பாவம் என்று குறிப்பிடுகிறது. சில காரியங்களை வேதம் பாவம் என்று நேரடியாக குறிப்பிடுகிறதில்லை; இந்த காரியங்கள் பாவமா இல்லையா என்று தீர்மானிப்பது மிக கடினமான ஒன்றாகும். குறிப்பிட்ட தலைப்பை குறித்து வேதத்தில் ஒன்றும் சொல்லாதிருந்தாலும், அவைகளின் விஷயத்தில் நம்மை வழிநடத்தும்படி வேதத்தில் சில பொதுவான கோட்பாடுகள் இருக்கின்றன.

முதலாவதாக, வேதத்தில் ஒரு காரியத்தை குறித்து குறிப்பாக ஒன்றும் சொல்லப்படவில்லை என்றால், அந்த குறிப்பிட்ட காரியம் தவறானதா என்று கேட்பதை விட அது உண்மையாக நன்மையான ஒன்று தான் என்று நாம் கேட்பது நல்லது. “காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள” வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது (கொலோசியர் 4:5). நித்தியத்தில் நாம் வாழுங் நாட்களை விட பூமியில் வாழும் நாட்கள் கொஞ்சம். இது விலையேறபெற்ற நாட்களானதால், சுயநலமான காரியங்களுக்கு நாம் நேரத்தை செலவழிக்காமல், “பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேச” வேண்டும் (எபேசியர் 4:29).

நாம் செய்யும் காரியங்களை ஆசீர்வதித்து அவைகளை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தும்படி உண்மையாக, நல் மனசாட்சியோடு, தேவனிடம் நாம் ஜெபிக்க முடியுமா என்று நம்மை நாமே சோதித்துப்பார்கக வேண்டும். “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரிந்தியர் 10:31). நாம் செய்வது தேவனுக்கு பிரியமில்லை என்கிற சந்தேகம் நமக்குள் இருகுமானால், அந்த காரியத்தை விட்டு விடுவது நலமானதாகும். “விசுவாசத்தினால் வராதது யாவும் பாவமே” (ரோமர் 14:23). நம் சரீரம் மற்றும் நம் ஆதுமாவை தேவன் மீட்டபடியினால் நாம் அவருக்கு சொந்தமானவர்கள் என்பதை நாம் மறக்க கூடாது. “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரிந்தியர் 6:19-20). நாம் என்ன செய்கிறோம் மற்றும் எங்கு போகிறோம் என்பதை பொறுத்து இந்த சத்தியம் நிர்ணயிக்க படவேண்டும்.

நமது செயல்கள் தேவனுக்கு முன்பாக எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்பது மட்டும் அல்லாமல், அவைகள் நம் குடும்பத்தார், நண்பர்கள், மற்றும் பொது ஜனங்களின் வாழ்கையை எப்படி பாதிக்கிறது என்பதயும் சோதித்துப் பார்க்க வேண்டும். நமது ஒரு சில செயல்கள் நமக்கு வேதனை உண்டாக்காமல் இருக்கலாம், ஆனால் அது மற்றவர்களை வேதனைப்படுத்தினால் அல்லது இடறல் உண்டாக்கினால், அது பாவமே. “மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்... அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்” (ரோமர் 14:21; 15:1).

இறுதியாக, இயேசு கிறிஸ்து நமது ஆண்டவர் மற்றும் இரட்சகர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சித்தத்தை செய்வதே நம் வாழ்வின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். எந்த பழக்கங்கள், பொழுதுபோக்கு, மற்றும் விருப்பம் நம் வாழ்வை கட்டுப்படுத்த நாம் விடக்கூடாது; கிறிஸ்து மட்டும் தான் நம்மை ஆளுகிறவராக இருக்க வேண்டும். “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்” (1 கொரிந்தியர் 6:12). “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” (கொலோசெயர் 3:17).

English



முகப்பு பக்கம்

இதுதான் பாவம் என்று நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries