settings icon
share icon
கேள்வி

வேதாகமத்திற்கு முன்பதாக தேவனைப் பற்றி மக்களுக்கு எப்படித் தெரியும்?

பதில்


எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தை மக்களிடம் இல்லாவிட்டாலும், அவர்கள் தேவனைப் பற்றிய அறிவைப் பெறும், புரிந்துகொள்ளும் மற்றும் கீழ்ப்படிவதற்கான திறன் இல்லாமல் இல்லை. உண்மையில், இன்று உலகின் பல பகுதிகளில் வேதாகமங்கள் கிடைக்கவில்லை, ஆனால் மக்கள் தேவனைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இந்த பிரச்சினை தேவனுடைய வெளிப்பாட்டின் ஒன்றாகும்—தேவன் தம்மைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள விரும்புவதை மனிதனுக்கு வெளிப்படுத்துகிறார். எப்போதும் ஒரு வேதாகமம் இல்லை என்றாலும், தேவனுடைய வெளிப்பாட்டைப் பெறவும் புரிந்துகொள்ளவும் மனிதனுக்கு எப்போதும் வழி இருக்கிறது. தேவனுடைய வெளிப்பாடு இரண்டு வகைகளில் உள்ளன, அதாவது பொதுவான வெளிப்பாடு மற்றும் சிறப்பு வெளிப்பாடு.

பொதுவான வெளிப்பாடு என்பது தேவன் அனைத்து மனிதகுலத்திற்கும் உலகளாவிய நிலையில் தொடர்பு கொள்ளும் ஒரு தொடர்பு ஆகும். பொதுவான வெளிப்பாட்டின் வெளிப்புற அம்சத்திற்கு தேவனே காரணம் அல்லது ஆதாரமாக இருக்க வேண்டும். இந்த காரியங்கள் இருப்பதால், அவ்வாறு இருப்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும், அதற்கு தேவனும் இருக்க வேண்டும். ரோமர் 1:20 கூறுகிறது, "காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை." எல்லா இடங்களிலும் எல்லா ஆண்களும் பெண்களும் சிருஷ்டிப்பைப் பார்த்து தேவன் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும். சங்கீதம் 19:1-4 மேலும் சிருஷ்டிப்பு தேவனைப் பற்றி அனைவருக்கும் புரியும் மொழியில் தெளிவாகப் பேசுகிறது என்பதை விளக்குகிறது. "அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை" (வசனம் 3). இயற்கையிலிருந்து பெறும் வெளிப்பாடு மிகத்தெளிவாக உள்ளது. அறியாமையால் யாரும் தன்னை மன்னிக்க முடியாது. நாத்திகருக்கு அயலிடச் சான்று இல்லை, அஞ்ஞானிக்கு எந்தவிதமான சாக்குபோக்கும் இல்லை.

பொதுவான வெளிப்பாட்டின் மற்றொரு அம்சம்—தேவன் அனைவருக்கும் வெளிப்படுத்தியவை—நம் மனசாட்சியின் முன்னிலையில் உள்ளது. இது உள்ளானது. "தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது" (ரோமர் 1:19). மக்கள், அவர்கள் ஒரு உள்ளான பகுதியை கொண்டிருப்பதால், தேவன் இருக்கிறார் என்பதை தங்கள் மனசாட்சியில் உணர்ந்திருக்கிறார்கள். பொதுவான வெளிப்பாட்டின் இந்த இரண்டு அம்சங்களும் மிஷனரிகள் வேதாகமத்தைப் பார்க்காத அல்லது இயேசுவைக் கேள்விப்படாத பழங்குடியினரை சந்தித்த பல கதைகளில் விளக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இரட்சிப்பின் திட்டம் அவர்களுக்கு முன்வைக்கப்படும் போது, தேவன் இயற்கையில் இருப்பதற்கான சான்றுகளைக் காண்பதால் தேவன் இருக்கிறார் என்பதை அவர்கள் அறிவார்கள், மேலும் அவர்களுடைய மனசாட்சி அவர்களுடைய பாவத்தையும் அவற்றிற்கான தேவையையும் உணர்த்துவதால் அவர்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

பொது வெளிப்பாட்டிற்கு கூடுதலாக, கடவுள் தன்னைப் பற்றியும் அவருடைய சித்தத்தைப் பற்றியும் மனிதகுலத்திற்குக் காட்டும் சிறப்பு வெளிப்பாடு உள்ளது. சிறப்பு வெளிப்பாடு எல்லா மக்களுக்கும் வராது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அது வருகிறதாய் இருந்தது. சிறப்பு வெளிப்பாட்டிற்கு வேதத்திலிருந்து பல எடுத்துக்காட்டுகள் உள்ளன (அப். 1:21-26, நீதிமொழிகள் 16:33), ஊரிம் மற்றும் தும்மிம் (பிரதான ஆசாரியன் பயன்படுத்தும் ஒரு சிறப்பு வகை தெரிந்தெடுத்தல்—யாத்திராகமம் 28:30; எண்கள் 27:21 ; உபாகமம் 33:8; 1 சாமுவேல் 28:6; மற்றும் எஸ்றா 2:63 ஆகிய வேதப்பகுதிகளை காணவும்), சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் (ஆதியாகமம் 20:3,6; ஆதியாகமம் 31:11-13,24; யோவேல் 2:28), கர்த்தருடைய தேவதூதனின் தோற்றங்கள் (ஆதியாகமம் 16:7-14; யாத்திராகமம் 3:2; 2 சாமுவேல் 24:16; சகரியா 1:12), மற்றும் தீர்க்கதரிசிகளின் ஊழியம் (2 சாமுவேல் 23:2; சகரியா 1:1). இந்த குறிப்புகள் ஒவ்வொரு நிகழ்வின் முழுமையான பட்டியல் அல்ல, ஆனால் இந்த வகையான வெளிப்பாட்டிற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக இவைகள் இருக்கின்றன.

வேதாகமம் நமக்குத் தெரிந்தபடி அது ஒரு சிறப்பு வெளிப்பாட்டின் வடிவமாகும். இருப்பினும், இது தனியே ஒரு பிரிவில் உள்ளது, ஏனென்றால், இது சிறப்பு வெளிப்பாட்டின் மற்ற வடிவங்களை இன்றைக்கு தேவையற்றதாக ஆக்குகிறது. பேதுரு கூட, யோவானுடன் சேர்ந்து இயேசு மோசே மற்றும் எலியாவுடன் மறுரூப மலையில் பேசுவதை நேரில் கண்டார் (மத்தேயு 17; லூக்கா 9), இந்த சிறப்பு அனுபவத்தை "அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு" என்று அறிவித்தார் (2 பேதுரு 1:19). ஏனென்றால், அவரைப் பற்றியும் அவருடைய திட்டத்தைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பும் அனைத்து தகவல்களின் எழுதப்பட்ட வடிவமாக வேதாகமம் உள்ளது. உண்மையில், தேவனுடன் உறவு கொள்வதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் வேதாகமத்தில் உள்ளன.

எனவே, வேதாகமம் நமக்குத் தெரிந்தபடி, அது கிடைப்பதற்கு முன்பே, தேவன் தன்னைப் பற்றியும் மனிதகுலத்திற்கு அவருடைய விருப்பத்தை வெளிப்படுத்தவும் பல வழிகளைப் பயன்படுத்தினார். தேவன் ஒரு வடிவத்தை மட்டும் பயன்படுத்தவில்லை, ஆனால் பலவற்றை பயன்படுத்தினார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. தேவன் தனது எழுதப்பட்ட வார்த்தையை நமக்கு அளித்து இன்று அதை நமக்காக பாதுகாத்ததற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். தேவன் சொன்னதை வேறொருவர் சொல்லும் தயவில் நாம் இல்லை; நமக்காக அவர் சொன்னதை நாம் நேரடியாக படிக்கலாம்!

நிச்சயமாக, தேவனுடைய தெளிவான வெளிப்பாடு அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து (யோவான் 1:14; எபிரெயர் 1:3). இயேசு இந்த பூமியில் நம்மிடையே நடப்பதற்கு மனித உருவம் எடுத்தபோது, அது மட்டுமே நிறைய காரியங்களைப் பேசுகிறது. சிலுவையில் நம் பாவங்களுக்காக அவர் மரித்தபோது, தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை (1 யோவான் 4:10).

English



முகப்பு பக்கம்

வேதாகமத்திற்கு முன்பதாக தேவனைப் பற்றி மக்களுக்கு எப்படித் தெரியும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries