settings icon
share icon
கேள்வி

நீதிமானாக்கப்படுதல் என்றால் என்ன?

பதில்


வெறுமனே எளிய நிலையில் கூறவேண்டுமானால், நியாயப்படுத்துதல் என்பது நீதிமான் என்று அறிவித்தல், தேவனோடு ஒன்றாக இருக்கிற ஒரு உரிமையைக் கொள்ளுதல் ஆகும். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்களுக்கு கிறிஸ்துவின் நீதியை அடிப்படையாகக் கொண்டு, நீதியுள்ளவராக தேவன் அறிவிக்கிறார் (2 கொரிந்தியர் 5:21). வேதவாக்கியம் முழுவதுமாக நீதிமானாக்கப்படுதலை ஒரு பிரமாணம் எனக் கருதப்பட்டாலும், விசுவாசிகள் சம்பந்தமாக நியாயப்பிரமாணத்தை விவரிக்கும் பிரதான வேதபாகமானது ரோமர் 3:21-26: " இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்."

நம்முடைய இரட்சிப்பின் தருணத்தில் நீதிமானாக அறிவிக்கப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். நீதிமானாக்கப்படுதல் நம்மை நீதிமானாக்குவதில்லை, மாறாக நம்மை நீதிமான்களாக அறிவிக்கிறது. நம்முடைய நீதியானது இயேசு கிறிஸ்துவின் பூரணப்படுத்தப்பட்ட வேலையில் நம்முடைய விசுவாசத்தை வைப்பதிலிருந்து வருகிறது. அவருடைய பலி நம் பாவத்தை மூடி, தேவன் நம்மை பரிபூரணமுள்ளவர்களாகவும் பழுதற்றவர்களாவும் பார்க்க அனுமதிக்கிறது. ஏனென்றால் விசுவாசிகள் கிறிஸ்துவில் இருப்பதால், அவர் நம்மை பார்க்கும்போது கிறிஸ்துவின் சொந்த நீதியைக் காண்கிறார். பரிபூரணமாக்கப்படுதலுக்கான தேவனுடைய எதிர்பார்ப்பை இது நிறைவு செய்கிறது; இவ்வாறு அவர் நம்மை நீதிமானாக அறிவிக்கிறார் - அவர் நம்மை நீதிமானாக்குகிறார்.

ரோமர் 5:18-19 மொத்தமாக அருமையாக இவ்வாறு கூறுகிறது: " ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்." நீதிமானாக்கப்படுதல் நிமித்தமாக, தேவனுடைய சமாதானம் நம் வாழ்வில் ஆளுகை செய்யமுடியும். நீதிமானாக்கப்படுதல் நிமித்தமாக விசுவாசிகள் இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிருக்கமுடியும். நீதிமானாக்கப்படுதல் என்கிற உண்மையின் நிமித்தமாக தேவன் பரிசுத்தமாக்குதலின் செயல்பாட்டை ஆரம்பிக்க உதவுகிறது என்பதை நீதிமானாக்குவதன் நிலை என்னவென்றால், நாம் ஏற்கெனவே நிலைநாட்டியுள்ள காரியங்களை தேவன் உண்மையில் நமக்கு அளிக்கிறார். “இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1).

English



முகப்பு பக்கம்

நீதிமானாக்கப்படுதல் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries