settings icon
share icon
கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்


இரண்டு தனித்தனி நியாயத்தீர்ப்புகள் உள்ளன. விசுவாசிகள் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நியாயந்தீர்க்கப்படுகிறார்கள் (ரோமர் 14:10-12). ஒவ்வொரு விசுவாசியும் தன்னைக் குறித்து ஒரு கணக்கைக் கொடுப்பார்கள், மேலும் மனசாட்சியின் பிரச்சினைகள் உட்பட அவர்கள் எடுத்த முடிவுகளை கர்த்தர் நியாயந்தீர்ப்பார். இந்த நியாயத்தீர்ப்பு இரட்சிப்பை தீர்மானிக்கவில்லை, அது விசுவாசத்தினால் மட்டுமே (எபேசியர் 2:8-9), மாறாக விசுவாசிகள் கிறிஸ்துவுக்கு சேவை செய்வதில் தங்கள் வாழ்க்கையின் கணக்கைக் கொடுக்க வேண்டிய நேரமாகும். கிறிஸ்துவில் நம்முடைய நிலைப்பாடு 1 கொரிந்தியர் 3:11-15 இல் பேசப்பட்ட "அஸ்திபாரத்தின் மேல்" ஆகும். அஸ்திபாரத்தின் மீது நாம் கட்டியெழுப்புவது, கிறிஸ்துவின் நாமத்தில் நற்கிரியைகள், கீழ்ப்படிதல் மற்றும் பலனாகிய "பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல்" — தேவனை மகிமைப்படுத்தவும் திருச்சபையை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஆவிக்குரிய சேவையாகும். அல்லது அஸ்திபாரத்தின் மீது நாம் கட்டியெழுப்புவது மதிப்பு இல்லாத, அற்பமான, ஆவிக்குரிய மதிப்பு இல்லாத ஆழமற்ற செயல்களின் “மரம், புல், மற்றும் வைக்கோல்” ஆக இருக்கலாம். கிறிஸ்துவின் நியாயாசனம் இதை வெளிப்படுத்தும்.

விசுவாசிகளின் வாழ்க்கையில் பொன், வெள்ளி மற்றும் விலையேறப்பெற்ற கல் தேவனுடைய சுத்திகரிப்பு நெருப்பிலிருந்து தப்பிக்கும் (வசனம் 13), மற்றும் விசுவாசிகள் அந்த நற்கிரியைகளின் அடிப்படையில் வெகுமதியைப் பெறுவார்கள் – அதில் நாம் கிறிஸ்துவுக்கு எவ்வளவு உண்மையாக சேவை செய்தோம் (1 கொரிந்தியர் 9:4-27), எப்படி நாம் பெரிய ஆணைக்குக் கீழ்ப்படிந்தோம் (மத்தேயு 28:18-20), பாவத்தின் மீது நாம் எவ்வளவு வெற்றி பெற்றோம் (ரோமர் 6:1-4), நம் நாவை எவ்வளவு நன்றாகக் கட்டுப்படுத்தினோம் (யாக்கோபு 3:1-9) போன்றவை அடங்கும். நம்முடைய செயல்களுக்குக் கணக்குக் கொடுக்க, அவை உண்மையில் கிறிஸ்துவில் நம்முடைய நிலைப்பாட்டைக் குறிக்கின்றன. தேவனுடைய நியாயத்தீர்ப்பு நெருப்பு நாம் பேசும் வார்த்தைகள் மற்றும் நித்திய மதிப்பு இல்லாத செயல்களின் "மரம், வைக்கோல் மற்றும் புல்" ஆகியவை முற்றிலும் எரிந்துவிடும். “ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்” (ரோமர் 14:12).

இரண்டாவது நியாயத்தீர்ப்பு, பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் நியாயந்தீர்க்கப்படும் அவிசுவாசிகளுக்கான நியாயத்தீர்ப்பு ஆகும் (வெளிப்படுத்துதல் 20:11-15). இந்தத் நியாயத்தீர்ப்பும் இரட்சிப்பைத் தீர்மானிக்கவில்லை. பெரிய வெள்ளை சிங்காசனத்திற்கு முன்பாக உள்ள அனைவரும் அவிசுவாசிகள், அவர்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவை நிராகரித்துள்ளனர், எனவே ஏற்கனவே அக்கினிக்கடலிலே எறியப்பட்டு வாதிக்கப்படுவதற்காக விதிக்கப்பட்டுவிட்டனர். வெளிப்படுத்துதல் 20:12, அவிசுவாசிகள் “புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்க” என்று கூறுகிறது. கிறிஸ்துவை கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தவர்கள் அவர்களுடைய கிரியைகளின் அடிப்படையில் மட்டுமே நியாயந்தீர்க்கப்படுவார்கள், மேலும் “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை” (கலாத்தியர் 2:16) என்று வேதாகமம் நமக்குச் சொல்வதால், அவர்கள் கண்டனம் செய்யப்படுவார்கள். எந்த நற்கிரியைகளும் தேவனுடைய நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிப்பதும் பாவத்திற்குப் பரிகாரம் செய்யப் போதுமானதாக இருக்காது. அவர்களின் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் அனைத்தும் தேவனுடைய பரிபூரண தரத்திற்கு எதிராக தீர்மானிக்கப்படும் மற்றும் தேவையற்றதாகக் காணப்படும். அவர்களுக்கு எந்த வெகுமதியும் இருக்காது, நித்திய கண்டனம் மற்றும் தண்டனை மட்டுமே உண்டாயிருக்கும்.

English



முகப்பு பக்கம்

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries