கிறிஸ்துவின் நியாயாசனம் என்றால் என்ன?


கேள்வி: கிறிஸ்துவின் நியாயாசனம் என்றால் என்ன?

பதில்:
ரோமர் 14:10-12 சொல்லுகிறது, “இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்..” 2 கொரிந்தியர் 5:10 சொல்லுகிறது, “ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.” இந்த வாசனங்களின் பின்னணியை பார்க்கும்போது, இது கிறிஸ்தவர்களை குறித்து தான் பேசுகிறது, "அவிசுவாசிகளை குறித்து அல்ல” என்று தெளிவாய் அறிய முடியும்.

கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன் விசுவாசிகள் தங்கள் வாழ்க்கைகளை குறித்த கணக்கை கிறிஸ்துவுக்கு ஒப்புவிப்பார்கள். கிறிஸ்துவின் நியாயாசனம் இரட்சிப்பை தீர்மானிப்பதில்லை; இரட்சிப்பு என்பது கிறிஸ்து நமக்காக மரித்தார் (1 யோவான் 2:2) என்று நம்பி அவ்ர் மேல் நம் விசுவாசத்தை வைப்பதினால் உண்டாகும் (யோவான் 3:16). நம் எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டிருக்கிறது, மற்றும் அவைகளால் நாம் ஆக்கினை தீர்ப்படையமாட்டோம் (ரோமர் 8:1). கிறிஸ்துவின் நியாயாசனம் என்பது தேவன் நம் பாவங்களை நியாயத்தீர்க்கும் ஒன்றாக பார்க்க கூடாது, மாறாக தேவன் நம் வாழ்நாளில் செய்த கிரியைகளுக்காக பரிசு அளிக்கும் ஒன்று. ஆம், வேதம் சொல்லுகிறது போல நாம் நம்மை குறித்த கணக்கு கொடுப்போம். நாம் செய்த பாவங்களை குறித்தும் இங்கு பதில் அளிக்கவேண்டியதாயிருந்தாலும், அது கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முக்கிய நோக்கம் அல்ல.

கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன், தாங்கள் தேவனுக்கு உண்மையாய் செய்த ஊழியத்தின் அடிபடையில் விசுவாசிகள் பலனளிக்கப்படுவார்கள் (1 கொரிந்தியர் 9:4-27; 2 தீமோத்தேயு 2:5). இங்கு நாம் எந்த அளவிற்கு இறுதி கட்டளையை கீழ்ப்படிந்தோம் (மத்தேயு 28:18-20), எப்படி நாம் பாவத்தின் மேல் வெற்றிக்கொண்டோம் (ரோமர் 6:1-4), மற்றும் எந்த அளவிற்கு நம் நாவுகளை கட்டுபடுத்தினோம் (யாக்கோபு 3:1-9) என்று நியாயந்தீர்க்கப்படுவோம். விசுவாசிகள் உண்மையாக கிறிஸ்துவை சேவித்ததினால் கிரீடங்கள் பெறுவார்கள் என்று வேதம் சொல்லுகிறது (1 கொரிந்தியர் 9:4-27; 2 தீமோத்தேயு 2:5). வெவ்வேரு கிரீடங்களை குறித்து இந்த வசனங்களில் வாசிக்கிறோம்: 2 தீமோத்தேயு 2:5, 2 தீமோத்தேயு 4:8, யாக்கோபு 1:12, 1 பேதுரு 5:4, மற்றும் வெளிப்படுத்தல் 2:10. கிறிஸ்துவின் நியாயாசனத்தை குறித்த ஒரு நல்ல சாரம்சத்தை யாக்கோபு 1:12-ல் பார்க்கிறோம்: “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.”

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
கிறிஸ்துவின் நியாயாசனம் என்றால் என்ன?