settings icon
share icon
கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்


பரலோகம் மெய்யாகவே ஒரு உண்மையான இடம். பரலோகம் தேவனின் சிங்காசனம் என்று வேதாகமம் சொல்லுகிறது (ஏசாயா 66:1; அப்போஸ்தலர் 7:48-49; மத்தேயு 5:34-35). இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் பூமியில் அவருடைய சீஷர்களுக்கு அவர் தோன்றிய பிறகு, “இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்” (மாற்கு 16:19; அப்போஸ்தலர் 7:55-56). “அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்” (எபிரெயர் 9:24). இயேசு நமக்கு முன்னால் சென்று, நம் சார்பாக நுழைந்தார், அவர் உயிருடன் இருக்கிறார், பரலோகத்தில் தற்போது ஊழியம் செய்கிறார், தேவனால் உருவாக்கப்பட்ட உண்மையான கூடாரத்தில் நம்முடைய பிரதான ஆசாரியராக சேவை செய்கிறார் (எபிரெயர் 6:19-20; 8:1-2) .

தேவனுடைய வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உள்ளன என்றும், நமக்காக ஒரு இடத்தைத் ஆயத்தப்படுத்த அவர் நமக்கு முன்பாக சென்றிருக்கிறார் என்று இயேசுவினால் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறோம். அவர் ஒரு நாள் மீண்டும் பூமிக்கு வந்து அவர் பரலோகத்தில் இருக்கும் இடத்திற்கு நம்மையும் அழைத்துச் செல்வார் என்கிற அவருடைய வார்த்தையின் உறுதி நமக்கு இருக்கிறது (யோவான் 14:1-4). பரலோகத்தில் ஒரு நித்திய இல்லம் இருக்கிறது என்பதில் நம்முடைய நம்பிக்கையானது இயேசுவின் வெளிப்படையான வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டது ஆகும். பரலோகம் நிச்சயமாகவே ஒரு உண்மையான இடம். ஆம், பரலோகம் உண்மையிலேயே உள்ளது.

மக்கள் பரலோகம் இருக்கிறது என்பதை மறுக்கும்போது, அவர்கள் தேவனுடைய வார்த்தையில் எழுதப்பட்ட வார்த்தையை மட்டுமல்ல, தங்கள் இருதயத்தின் உள்ளார்ந்த ஏக்கங்களையும் மறுக்கிறார்கள். பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் இந்த விஷயத்தை குறிப்பிட்டுள்ளார், அவர்கள் இருதயத்தை கலங்காதபடிக்கு பரலோக நம்பிக்கையில் உறுதியாக பற்றிக்கொண்டு இருக்க அவர்களை ஊக்குவித்தார். நம்முடைய பூமிக்குரிய நிலையில் நாம் தவித்து “கூக்குரலிட்டு பெருமூச்சு விடுகிறோம்” என்றாலும், நமக்கு முன்பாக எப்போதும் பரலோகத்தின் நம்பிக்கை இருக்கிறது, அங்கு செல்ல ஆர்வமாக இருக்கிறோம் (2 கொரிந்தியர் 5:1-4). இந்த வாழ்க்கையில் கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் தாங்கிக்கொள்ள உதவும் ஒரு முன்னோக்கு, பரலோகத்திலுள்ள தங்கள் நித்திய வீட்டை எதிர்நோக்குமாறு கொரிந்தியர்களை பவுல் கேட்டுக்கொண்டார். “மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரிந்தியர் 4:17-18).

தேவன் இருக்கிறார் என்கிற அறிவை மனிதர்களின் இதயங்களில் வைத்திருப்பதைப் போலவே (ரோமர் 1:19-20), நாம் பரலோகத்தை வாஞ்சித்து விரும்புவதற்காக “திட்டமிடப்பட்டிருக்கிறோம்”. இது எண்ணற்ற புத்தகங்கள், பாடல்கள் மற்றும் கலைப் படைப்புகளின் கருப்பொருளாக விளங்கிவருகிறது. துரதிர்ஷ்டவசமாக, நம்முடைய பாவம் பரலோகத்திற்கு செல்லும் வழியைத் தடுத்துள்ளது. பரலோகம் ஒரு பரிசுத்த மற்றும் பரிபூரண தேவனுடைய தங்குமிடம் என்பதால், பாவத்திற்கு அங்கே இடமில்லை, அதை அவரால் பொறுத்துக்கொள்ளவும் முடியாது. அதிர்ஷ்டவசமாக, வானத்தின் கதவுகளைத் திறப்பதற்கான சாவியை தேவன் நமக்கு வழங்கியுள்ளார் – அந்த சாவிதான் இயேசு கிறிஸ்து (யோவான் 14:6). அவரை நம்பி பாவத்திற்கு மன்னிப்பு கோருபவர்கள் அனைவருக்கும் பரலோகத்தின் கதவுகள் அவர்களுக்காக திறந்து இருப்பதைக் காண்பார்கள். நம்முடைய நித்திய வீட்டின் எதிர்கால மகிமை தேவனையும் உண்மையுடனும் முழு மனதுடனும் சேவை செய்ய நம் அனைவரையும் ஊக்குவிக்கட்டும். “ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்” (எபிரெயர் 10:19-22).

English



முகப்பு பக்கம்

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries