ஒரு கிறிஸ்தவர் மலட்டுத்தன்மையை எவ்வாறு கையாள வேண்டும்?


கேள்வி: ஒரு கிறிஸ்தவர் மலட்டுத்தன்மையை எவ்வாறு கையாள வேண்டும்?

பதில்:
மலட்டுத்தன்மையின் பிரச்சினையானது மிகவும் கடினமான ஒன்றாகும், குறிப்பாக குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் எதிர்பார்த்த்துக் கொண்டிருக்கும் ஜோடிகளுக்கு. கிறிஸ்தவ தம்பதிகள் “ஏன் ஆண்டவரே எங்களுக்கு இப்படி?” என்று கேட்டுக்கொள்வதைக் காணலாம். நிச்சயமாக, கிறிஸ்தவர்கள் குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்படுவதையும், வளர்ப்பதையும் தேவன் விரும்புகிறார். உடல் ரீதியாக ஆரோக்கியமான தம்பதிகளுக்கு, கருவுறாமைக்கு இது ஒரு தற்காலிக அல்லது நிரந்தர நிலைமை என்பதை அறியாமல் இருப்பது மிகவும் இதயத்தைத் உடைக்கும் அம்சங்களில் ஒன்று. இது தற்காலிகமானது என்றால், அவர்கள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? அது நிரந்தரமானது என்றால், அவர்கள் அதை எப்படி அறிவார்கள், அவர்களின் நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும்?

தற்காலிக மலட்டுத்தன்மையின் சிக்கலை வேதாகமம் பல கதைகளின் வழியாக சித்தரிக்கிறது:

தேவன் ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஒரு குழந்தையை வாக்களித்தார், ஆனால் அவள் 90 வயது வரை ஈசாக்கு என்ற மகனைப் பெற்றெடுக்கவில்லை (ஆதியாகமம் 11:30).

ரெபெக்காவின் கணவரான ஈசாக்கு ஆவலுடன் ஜெபித்தார், தேவன் பதிலளித்தார், இதன் விளைவாக யாக்கோபு மற்றும் ஏசா பிறந்தார் (ஆதியாகமம் 25:21).

ராகேல் ஜெபம் செய்தார், கடைசியில் தேவன் “தன் கர்ப்பத்தைத் திறந்தார்.” யோசேப்பு மற்றும் பெஞ்சமின் ஆகிய இரு மகன்களைப் பெற்றாள் (ஆதியாகமம் 30:1; 35:18).

மனோவாவின் மனைவி, ஒரு காலத்தில் மலட்டுத்தன்மையுடன் இருந்தாள், பிறகு சிம்சோனைப் பெற்றெடுத்தாள் (நியாயாதிபதிகள் 13: 2).

எலிசபெத் தனது வயதான காலத்தில் கிறிஸ்துவின் முன்னோடியான யோவான்ஸ்நானகனைப் பெற்றெடுத்தார் (லூக்கா 1:7, 36).

சாரா, ரெபெக்காள் மற்றும் ராகேல் (இஸ்ரவேல் தேசத்தின் தாய்மார்கள்) ஆகியோரின் மலட்டுத்தன்மை குறிப்பிடத்தக்கதாகும், இதில் இறுதியாக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் திறன் உண்டானது தேவனின் கிருபை மற்றும் தயவின் அடையாளமாகும். இருப்பினும், மலட்டுத்தன்மையுள்ள தம்பதிகள் தேவன் தம்முடைய கிருபையையும் தயவையும் தடுத்து நிறுத்துகிறார் என்று கருதக்கூடாது, மேலும் அவர்கள் ஏதோ ஒரு வகையில் தண்டிக்கப்படுகிறார்கள் என்றும் கருதக்கூடாது. கிறிஸ்தவ தம்பதிகள் தங்கள் பாவங்களுக்காக கிறிஸ்துவில் மன்னிக்கப்படுகிறார்கள் என்பதையும், குழந்தைகளைப் பெற இயலாமை என்பது தேவனிடமிருந்து கிடைத்த தண்டனை அல்ல என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

எனவே மலட்டுத்தன்மையுள்ள கிறிஸ்தவ தம்பதியினர் என்ன செய்வது? மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் பிற கருவுறுதல் நிபுணர்களிடமிருந்து ஆலோசனை பெறுவது நல்லது. கர்ப்பத்திற்குத் தயாராவதற்கு ஆண்களும் பெண்களும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டும். இஸ்ரவேல் தேசத்தின் தாய்மார்கள் கருத்தரிப்பதற்காக ஆவலுடன் ஜெபித்தனர், எனவே ஒரு குழந்தைக்காக தொடர்ந்து ஜெபிப்பது நிச்சயமாக வரம்புக்குட்பட்டதல்ல. முக்கியமாக, நம்முடைய வாழ்க்கைக்காக தேவனுடைய சித்தத்திற்காக ஜெபிக்க வேண்டும். இயற்கையான குழந்தையைப் பெறுவதே அவருடைய விருப்பம் என்றால், நாம் அப்படியே செய்வோம். ஒருவேளை அவருடைய விருப்பம், நாம் தத்தெடுப்பது, வளர்ப்பது என்றால் – வளர்ப்பு பெற்றோர் அல்லது குழந்தை இல்லாமல் போவது என்றால், அதை நாம் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் செய்ய உறுதியளிக்க வேண்டும். தேவன் தம்முடைய ஒவ்வொரு அன்புக்குரியவர்களுக்கும் ஒரு தெய்வீகத் திட்டம் வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். தேவன் தான் வாழ்க்கையின் ஆசான். அவர் கருத்தரிப்பை அனுமதிக்கிறார் மற்றும் கருத்தரிப்பை நிறுத்துகிறார். தேவன் இறையாண்மை உடையவர், எல்லா ஞானத்தையும் அறிவையும் கொண்டிருக்கிறார் (ரோமர் 11:33-36 ஐக் காண்க). " நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது" (யாக்கோபு 1:17). இந்த உண்மைகளை அறிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் ஒரு மலட்டுத்தன்மையுள்ள தம்பதியினரின் இதயங்களில் வலியை நிரப்ப நீண்ட தூரம் செல்லும்.

English


முகப்பு பக்கம்
ஒரு கிறிஸ்தவர் மலட்டுத்தன்மையை எவ்வாறு கையாள வேண்டும்?