settings icon
share icon
கேள்வி

மனித ஆத்துமா என்றால் என்ன?

பதில்


மனித ஆத்துமாவின் தன்மையைக் குறித்து வேதாகமம் முழுமையாக தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால் வேதத்தில் ஆத்துமா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தைப் படிப்பதன் மூலம், நாம் சில முடிவுகளுக்கு வரலாம். எளிமையாகச் சொன்னால், மனித ஆத்துமா என்பது சரீர ரீதியாக இல்லாத ஒரு நபரின் பகுதியாகும். ஒவ்வொரு மனிதனின் சரீரமும் மரணத்தை அனுபவித்த பிறகு நித்தியமாக நீடித்திருக்கிறது. ஆதியாகமம் 35:18 யாக்கோபின் மனைவியான ராகேலின் மரணத்தை விவரிக்கிறது, அவள் தன் மகனுக்கு "மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது" பெயரிட்டாள் என்று வாசிக்கிறோம். இதிலிருந்து ஆத்துமா என்பது உடலிலிருந்து வேறுபட்டது என்றும் அது சரீர மரணத்திற்குப் பிறகும் தொடர்ந்து வாழ்வது என்றும் அறிகிறோம்.

மனித ஆத்துமா ஒரு மனிதனின் ஆளுமையின் மையமாகும். சி.எஸ். லூயிஸ் கூறியது போல், "உங்களுக்கு ஒரு ஆத்துமா இல்லை. நீங்களே ஒரு ஆத்துமாவாக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு உடல் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆளுமை என்பது ஒரு உடலைக் கொண்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆத்துமா என்பது தேவை. வேதாகமத்தில் மீண்டும் மீண்டும், ஜனங்கள் "ஆத்துமாக்கள்" என்று குறிப்பிடப்படுகிறார்கள் (யாத்திராகமம் 31:14; நீதிமொழிகள் 11:30), குறிப்பாக மனித வாழ்க்கை மற்றும் ஆளுமையின் மதிப்பு அல்லது "முழுமை" என்ற கருத்தில் கவனம் செலுத்தும் சூழல்களில் (சங்கீதம் 16:9-10; எசேக்கியேல் 18:4; அப்போஸ்தலர் 2:41; வெளிப்படுத்துதல் 18:13).

மனித ஆத்துமா இதயத்திலிருந்து வேறுபட்டது (உபாகமம் 26:16; 30:6) மற்றும் ஆவி (1 தெசலோனிக்கேயர் 5:23; எபிரெயர் 4:12) மற்றும் மனது (மத். 22:37; மாற்கு 12:30; லூக்கா 10:27). மனித ஆத்துமா தேவனால் படைக்கப்பட்டது (எரேமியா 38:16). அது வலுவாகவோ அல்லது நிலையற்றதாகவோ இருக்கலாம் (2 பேதுரு 2:14); அது இழக்கப்படலாம் அல்லது இரட்சிக்கப்படலாம் (யாக்கோபு 1:21; எசேக்கியேல் 18:4). மனித ஆத்துமாவுக்குப் பரிகாரம் தேவை என்பதை நாம் அறிவோம் (லேவியராகமம் 17:11) மற்றும் ஆத்துமாவானது பரிசுத்த ஆவியின் சத்தியத்தாலும் செயலாலும் (1 பேதுரு 1:22) சுத்திகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் பகுதியாகும். இயேசு ஆத்துமாக்களின் பெரிய மேய்ப்பராக இருக்கிறார் (1 பேதுரு 2:25).

மத்தேயு 11:29 நம் ஆத்மாக்களுக்கு இளைப்பாறுதலைக் காண இயேசு கிறிஸ்துவிடம் திரும்பலாம் என்று கூறுகிறது. சங்கீதம் 16:9-10 என்பது ஒரு மேசியாவின் சங்கீதம், இது இயேசுவுக்கும் ஒரு ஆத்துமா இருப்பதைக் காண அனுமதிக்கிறது. தாவீது இப்படியாக எழுதினார், “ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.” இது தாவீதைப் பற்றி பேசுவதாக இருக்க முடியாது (அப்போஸ்தலர் 13:35-37 இல் பவுல் குறிப்பிடுவது போல்) ஏனெனில் தாவீதின் உடல் அவர் இறந்தபோது சிதைவையும் அழிவையும் கண்டது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் உடல் ஒருபோதும் சீர்கெட்டுப்போகவில்லை (அவர் உயிர்த்தெழுந்தார்), அவருடைய ஆத்துமா பாதாளத்துக்கு போகும்படி கைவிடப்படவில்லை. மனுஷ குமாரனாகிய இயேசுவுக்கு ஒரு ஆத்துமா இருக்கிறது.

மனித ஆவி எதிராக மனித ஆத்துமா பற்றி அடிக்கடி குழப்பம் உள்ளது. சில இடங்களில், வேதாகமம் இந்த சொற்களை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்துகிறது, ஆனால் ஒரு நுட்பமான வேறுபாடு இருக்கலாம். இல்லையெனில், தேவனுடைய வார்த்தை எப்படி "ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கிறது" (எபிரெயர் 4:12)? மனிதனின் ஆவியைப் பற்றி வேதாகமம் பேசும்போது, அது பொதுவாக ஒரு நபரை ஒரு திசையில் அல்லது இன்னொரு திசையில் உயிர்ப்பிக்கும் ஒரு உள்ளான சக்தியைப் பற்றிப் பேசுகிறது. இது மீண்டும் மீண்டும் ஒரு இயக்கமாக, ஒரு இயக்க சக்தியாக காட்டப்படுகிறது (எ.கா., எண்ணாகமம் 14:24).

தேவனுடைய வார்த்தை (மாற்கு 13:31) மற்றும் மனிதர்களின் ஆத்துமாக்கள் ஆகிய இரண்டு விஷயங்கள் மட்டுமே நித்தியமாக நீடித்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், தேவனுடைய வார்த்தையைப் போல, ஆத்துமா அழியாத ஒன்று. அந்த எண்ணம் விழிப்புணர்வு உள்ளதாயும், பிரமிப்பூட்டுவதாகவும் இருக்க வேண்டும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நித்திய ஆத்துமா. இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஆத்துமா இருக்கிறது, அந்த ஆத்துமாக்கள் அனைத்தும் இன்னும் எங்கோ உள்ளன. கேள்வி, எங்கே? தேவனுடைய அன்பை நிராகரிக்கும் ஆத்துமாக்கள் தங்கள் சொந்த பாவத்திற்கு நித்தியமாக நரகத்தில் விலைக்கிரயம் செலுத்துவதற்கு கண்டனம் செய்யப்படுகின்றன (ரோமர் 6:23). ஆனால், தங்கள் சொந்த பாவத்தையும், தேவனுடைய கிருபையும் கிருபையினால் மன்னிப்பையும் ஏற்றுக்கொள்ளும் ஆத்துமாக்கள், தங்கள் மேய்ப்பருடன் அமைதியான தண்ணீருக்கு அருகில், ஒன்றுக்கும் குறையில்லாமல் என்றென்றும் வாழ்வார்கள் (சங்கீதம் 23:2).

English



முகப்பு பக்கம்

மனித ஆத்துமா என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries