settings icon
share icon
கேள்வி

மனித ஆத்துமா அழியக்கூடியதா அல்லது அழியாததா?

பதில்


எந்தவிதமான சந்தேகமின்றி மனித ஆத்துமா அழியாததுதான். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் பல வேதவாக்கியங்களில் இது தெளிவாகக் காணப்படுகிறது: சங்கீதம் 22:26; 23:6; 49:7-9; பிரசங்கி 12:7; தானியேல் 12:2-3; மத்தேயு 25:46; மற்றும் 1 கொரிந்தியர் 15:12-19. “பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்” என்று தானியேல் 12:2 கூறுகிறது. இதேபோல், துன்மார்க்கர் அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார் (மத்தேயு 25:46). "தண்டனை" மற்றும் "ஜீவன்" இரண்டையும் குறிக்க ஒரே கிரேக்க வார்த்தையுடன், ஆகவே துன்மார்க்கன் மற்றும் நீதிமான்கள் இருவரும் நித்திய / அழியாத ஆத்துமாவைக் கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

வேதாகமத்தின் தெளிவான போதனை என்னவென்றால், எல்லா ஜனங்களும், அவர்கள் இரட்சிக்கப்பட்டாலும், இழந்துபோனாலும், பரலோகத்திலோ அல்லது நரகத்திலோ நித்தியமாக இருப்பார்கள். நம்முடைய மாம்ச உடல்கள் மரணத்தில் காலமானால் உண்மையான வாழ்க்கை அல்லது ஆவிக்குரிய வாழ்க்கை நின்றுவிடாது. நாம் இரட்சிக்கப்பட்டால் பரலோகத்தில் தேவனின் முன்னிலையிலோ அல்லது தேவனின் இரட்சிப்பின் பரிசை நிராகரித்தால் நரகத்தில் தண்டனையிலோ நம் ஆத்துமாக்கள் என்றென்றும் வாழும். உண்மையில், வேதாகமத்தின் வாக்குறுதி என்னவென்றால், நம்முடைய ஆத்துமாக்கள் என்றென்றும் வாழும் என்பது மட்டுமல்லாமல், நம் உடல்கள் உயிர்த்தெழுப்பப்படும் என்பதும் ஆகும். சரீர உயிர்த்தெழுதலின் இந்த நம்பிக்கை கிறிஸ்தவ விசுவாசத்தின் இருதயமாக உள்ளது (1 கொரிந்தியர் 15:12-19).

எல்லா ஆத்மாக்களும் அழியாதவை என்றாலும், தேவன் இருப்பது போலவே நாம் நித்தியமானவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். தேவன் ஒருவர் மட்டுமே மெய்யான நித்திய ஜீவன், அவர் மட்டுமே ஆரம்பம் அல்லது முடிவு இல்லாமல் இருக்கிறார். தேவன் எப்போதும் இருக்கிறார், எப்போதும் இருப்பார். மற்ற அனைத்து உணர்வுள்ள உயிரினங்களும், அவை மனிதர்களாக இருந்தாலும், தேவதூதர்களாக இருந்தாலும் சரி, அவைகள் யாவும் ஒரு தொடக்கத்தைக் கொண்டிருகின்றன. நாம் ஜீவன் பெற்று வாழ தோன்றியவுடன் நம் ஆத்மாக்கள் என்றென்றும் வாழ்கிறதாக மாறுகிறது, நம்முடைய ஆத்மாக்கள் எப்போதும் முன்பே இருந்தன என்ற கருத்தை வேதாகமம் ஆதரிக்கவில்லை. நம்முடைய ஆத்மாக்கள் அழியாதவை, தேவன் அவைகளை இப்படித்தான் படைத்தார், ஆனால் அவைகளுக்கு ஒரு ஆரம்பம் இருந்தது; அவைகள் இல்லாத ஒரு காலமும் இருந்தது.

English



முகப்பு பக்கம்

மனித ஆத்துமா அழியக்கூடியதா அல்லது அழியாததா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries