settings icon
share icon
கேள்வி

நான் எப்படி இரட்சிக்கப்பட முடியும்?

பதில்


இந்த எளிமையான, இருப்பினும் ஆழ்ந்த கேள்வியாகிய கேட்கப்படும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால்: "நான் எப்படி இரட்சிக்கப்பட முடியும்?", இந்த உலகில் நம் வாழ்வு முடிந்தபின் நித்தியத்தை நாம் எங்கே செலவிடுவோம் என்பதைக் குறித்ததாகும். நம்முடைய நித்தியத்தை விட வேறே முக்கியமான விடயம் எதுவும் இல்லை. அதிர்ஷ்டவசமாக, ஒரு நபர் எப்படி இரட்சிக்கப்படுகிறார் என்பதைப் பற்றி வேதாகமம் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறது. பிலிப்பு நகரத்து சிறைச்சாலைக்காரன் பவுலையும் சீலாவையும் நோக்கி, “ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்” (அப்போஸ்தலர் 16:30). பவுலும் சீலாவும், “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று பதிலுரைத்தார்கள் (அப்போஸ்தலர் 16:31).

நான் எப்படி இரட்சிக்கப்பட முடியும்? நான் ஏன் இரட்சிக்கப்பட வேண்டும்?

நாம் எல்லோருமே பாவம் செய்திருக்கிறோம் (ரோமர் 3:23). நாம் பாவத்தில் பிறக்கிறோம் (சங்கீதம் 51:5), மற்றும் நாம் எல்லோருமே தனிப்பட்ட முறையில் பாவம் செய்வதை தெரிந்து கொள்கிறோம் (பிரசங்கி 7:20; 1 யோவான் 1:8). பாவம் தான் நம்மை இரட்சிக்கப்படாதவர்களாக மாற்றியிருக்கிறது. பாவந்தான் நம்மை தேவனிடத்திலிருந்து பிரித்து வைத்திருக்கிறது. பாவந்தான் நித்திய அழிவுக்கு வழிநடத்தி செல்லுகிறதாய் இருக்கிறது.

நான் எப்படி இரட்சிக்கப்பட முடியும்? எதிலிருந்து இரட்சிக்கப்படுவது?

நம்முடைய பாவத்தின் காரணமாக நாம் அனைவரும் மரணத்திற்குத் தகுதியானவர்களாக இருக்கிறோம் (ரோமர் 6:23). பாவத்தின் சரீரப்பிரகாரமான விளைவு சரீரப்பிரகாரமான மரணமாக இருந்தாலும், அது மட்டுமே பாவத்தின் விளைவாக இல்லை. முடிவான நிலையில் எல்லா பாவங்களும் ஒரு நித்தியமான மற்றும் முடிவற்ற தேவனுக்கு எதிராக செய்யப்படுகிறது (சங்கீதம் 51: 4). அதனால்தான், நம்முடைய பாவத்திற்கான தண்டனையானது நித்தியமானதும் முடிவற்றதுமாக இருக்கிறது. ஆக நித்திய அழிவிலிருந்து நாம் இரட்சிக்கப்பட வேண்டும் (மத்தேயு 25:46; வெளிப்படுத்துதல் 20:15).

நான் எப்படி இரட்சிக்கப்பட முடியும்? தேவன் எவ்வாறு இரட்சிப்பை அளித்தார்?

ஏனென்றால் பாவத்திற்கான தண்டனையானது எல்லையற்றதாகவும் நித்தியமானதாகவும் இருக்கிறது, தேவன் மட்டுமே அந்த தண்டனையின் விலையைக் கொடுக்க முடியும், ஏனென்றால் அவரே எல்லையற்றவர் மற்றும் நித்தியமானவராக இருக்கிறார். ஆனால் தேவன் அவரது தெய்வீக சுபாவத்தின்படி அவரால் மரிக்க முடியாது. ஆகையால்தான், தேவன் இயேசு கிறிஸ்துவில் மனிதனாக ஆனார். தேவன் மனித சரீரத்தை எடுத்தார், நம் மத்தியில் வாழ்ந்தார், நமக்கு கற்ப்பித்தார். ஜனங்கள் அவரையும் அவரது செய்தியையும் நிராகரித்து அவரைக் கொல்ல முயன்றபோது, அவர் தம்மைத்தாமே தியாகம் செய்தார், தன்னைச் சிலுவையில் அறையும்படி அனுமதித்தார் (யோவான் 10:15). இயேசு கிறிஸ்து மனிதனாக இருந்ததால், அவரால் மரிக்க முடிந்தது; மற்றும் இயேசு கிறிஸ்து தேவனாக இருப்பதால் அவரது மரணத்திற்கு ஒரு நித்திய மற்றும் எல்லையற்ற மதிப்பு இருந்தது. சிலுவையில் இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திற்கு பரிபூரணமானதும் முழுமையானதுமான விலைக்கிரயமாக இருந்தது (1 யோவான் 2:2). நாம் அடையவேண்டிய பாவத்தின் விளைவான தண்டனையை அவர் தம்மேல் எடுத்துக்கொண்டார். மரித்தோரிலிருந்து இயேசுவின் உயிர்த்தெழுதல், அவருடைய மரணம் உண்மையிலேயே பாவத்திற்கு பரிபூரணமான பலியாக இருந்தது என்பதை நிரூபித்தது.

நான் எப்படி இரட்சிக்கப்பட முடியும்? நான் என்ன செய்ய வேண்டும்?

“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்” (அப்போஸ்தலர் 16:31). தேவன் ஏற்கனவே எல்லா வேலைகளையும் செய்துவிட்டார். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், விசுவாசத்தோடு தேவன் அளிக்கிற இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள் (எபேசியர் 2:8-9). உங்கள் பாவங்களுக்கான பரிகாரத்திற்கு இயேசுவை மட்டுமே முழுமையாக நம்புங்கள். அவரில் நீங்கள் விசுவாசித்தால் அழிந்து போகமாட்டீர்கள் (யோவான் 3:16). தேவன் இரட்சிப்பை உங்களுக்கு ஒரு பரிசாக கொடுக்கிறார். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அதை ஏற்றுக்கொள்ளுதல் மட்டுமேயாகும். இயேசுவே இரட்சிப்பின் வழியாக இருக்கிறார் (யோவான் 14:6).

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

நான் எப்படி இரட்சிக்கப்பட முடியும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries