settings icon
share icon
கேள்வி

ஓரினச்சேர்க்கையைக் குறித்து வேதாகம்ம் என்ன சொல்லுகிறது? ஓரினச்சேர்க்கை பாவமா?

பதில்


சிலர் மனங்களில், ஓரினச்சேர்க்கையுள்ளவர்களாக இருப்பது என்பது உங்கள் சருமத்தின் நிறம் மற்றும் உங்கள் உயரம் போன்ற ஒரு கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளதாக இருக்கிறது. மறுபுறம், ஓரினச்சேர்க்கை என்பது ஒரு பாவமாக இருப்பதாக வேதாகமம் தெளிவாகவும் உறுதியாகவும் அறிவிக்கிறது (ஆதியாகமம் 19:1-13; லேவியராகமம் 18:22, 20:13; ரோமர் 1:26-27; 1 கொரிந்தியர் 6:9). இந்த இணைப்புநீக்கல் மிகவும் சர்ச்சைக்குரிய, விவாதத்திற்கும் விரோதத்திற்கும் வழிவகுக்கிறது.

ஓரினச்சேர்க்கை பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை ஆராயும்போது, ஓரின நடத்தை மற்றும் ஓரின நாட்டங்கள் அல்லது கவர்ச்சிகளுக்கு ஆவியவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிந்துகொள்வது முக்கியம். இது செய்வினை பாவம் மற்றும் ஆசைப்படுவதற்கான செயலற்ற நிலை ஆகியவற்றிற்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும். ஓரினச்சேர்க்கை நடத்தை பாவம் ஆகும், அதேவேளையில் வேதாகமம் அப்படிப்பட்ட ஆசைக்கு ஈர்க்கப்படுவது மற்றும் சோதிக்கப்படுவதை பாவம் என்று ஒருபோதும் கூறவில்லை. அதாவது சோதனையோடுள்ள போராட்டம் பாவத்திற்கு நேராய் வழிநடத்தும், ஆனால் அந்த போராட்டம் ஒரு பாவம் அல்ல.

ரோமர் 1:26-27 ஓரினச்சேர்க்கையானது தேவனை மறுதலித்து அவருக்கு கீழ்ப்படியாததன் விளைவு என்று போதிக்கிறது. பாவத்திலும் அவிசுவாசத்திலும் மக்கள் தொடர்ந்திருந்தால், தேவனை அல்லாத ஒரு வாழ்க்கை எவ்வளவு சீர்கெட்ட, நம்பிக்கையற்ற மற்றும் பரிதபிக்கப்படதக்க நிலை என்று அவர்களுக்கு காண்பிக்கும்பொருட்டு அவர்களை இன்னும் அதிகமான அசுத்தங்களுக்கும் துன்மார்க்கத்திற்கு “ஒப்புக்கொடுக்கிறார்”. தேவனுக்கு எதிராக கிளர்ச்சியை விளைவிக்கும் பழக்கங்களில் ஒன்று ஓரினச்சேர்க்கை ஆகும். ஓரினச்சேர்க்கையை கடைப்பிடித்து, தேவனுடைய சிருஷ்டிப்பின் ஒழுங்கை மீறுகிறவர்கள், இரட்சிக்கப்பட்டவர்கள் இல்லை என்று 1 கொரிந்தியர் 6:9 கூறுகிறது.

சிலர் வன்முறை மற்றும் பிற பாவங்களை செய்கிறவர்களாக பிறந்திருக்கிறதுபோல, ஓரினச்சேர்க்கைக்கு அதிகமா பீடிக்கப்பட்ட நிலையில் ஒரு நபர் பிறந்திருக்கலாம். அதற்காக பாவ இச்சைகளுக்கு இடங்கொடுத்து, அதன்மூலம் பாவத்தைத் தேர்ந்தெடுப்பது பொறுத்துக்கொள்ள முடியாது. ஒருவர் ஒரு குறிப்பீட்ட தீய காரியங்களில் அதிகமா பீடிக்கப்பட்டவராக பிறந்திருக்கிறார் மற்றும் அதினால் மிகவும் சிரமம்படுகிறார் என்பதற்காக அந்த ஆசைகளுக்குத் தேவையான எல்லா செயல்களிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு செய்வது சரியானது அல்ல. அதேபோல் ஓரினச்சேர்க்கைக்கு ஏற்பட்டுள்ள சகிப்புத்தன்மையும் இதுதான்.

நம்முடைய கவர்ச்சிகரமான விஷயங்கள் அல்லது அது சார்ந்த நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும், இயேசுவையே சிலுவையில் அறையப்பட காரணமாக இருந்த பாவங்களினால் நம்மைத் தொடர்ந்து நல்லவர்களாக வரையறுக்க முடியாது, அதே சமயத்தில் நாம் தேவனோடு சரியான உறவில்தான் தான் இருக்கிறோம் என கருதுகிறோம். கொரிந்தியர்கள் செய்துவந்த பாவங்களை பவுல் பட்டியலிடுகிறார் அந்த பட்டியலில் ஓரினச்சேர்க்கையும் உள்ளது. ஆனால் 1 கொரிந்தியர் 6:11-ல், பவுல் அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார், "உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்." வேறு விதத்தில் கூறுவோமானால், கொரிந்தியர்களில் சிலர், அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு முன்னர், ஓரினச்சேர்க்கை வாழ்க்கை வாழ்ந்தார்கள்; ஆனால் இயேசுவின் சுத்திகரிக்கும் வல்லமைக்கு முன்னாள் எந்த பாவம் மிகவும் பெரிதானது இல்லை. ஒருமுறை சுத்திகரிக்கப்பட்ட நாம் இனி பாவம் மூலம் ஒருபோதும் வரையறுக்கப்பதுவதில்லை.

ஓரினச்சேர்க்கையின் பிரச்சனை என்னவென்றால், தேவன் தடைசெய்த காரியங்களுடன் அதன் ஈர்ப்பு இருப்பதுதான், மேலும் பாவம் நிறைந்த எந்தவொரு செயலுக்கு பின்னால் நிச்சயமாகவே அதனுடைய வேறாக அந்த பாவம் இருக்கிறது. பாவத்தின் பரவலான இந்த இயல்பு நம்மை உலகத்தையும் நம்முடைய செயல்களையும் திசைதிருப்ப பார்க்கிறது. நம் எண்ணங்கள், ஆசைகள், மற்றும் மனப்போக்குகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, ஓரினச்சேர்க்கை கவர்சிகள் எப்போதும் சுறுசுறுப்பாக பாவத்தில் செயல்படுத்தாது, மனப்பூர்வமாக பாவம் செய்ய தெரிந்துகொள்ளக்கூடாது – மேலும் இது பாவ தன்மையுள்ள ஊற்றிலிருந்தே வருகிறதாய் இருக்கிறது. ஒரே பாலின ஈர்ப்பு எப்பொழுதும், அடிப்படை மட்டத்தில், விழுந்துபோன பாவஇயல்பின் வெளிப்பாடு ஆகும்.

பாவமுள்ள மனிதர்கள் பாவம் நிறைந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் (ரோமர் 3:23), நாம் பலவீனங்களாலும், சோதனைகளாலும், பாவத்திற்கு ஏதுவான தூண்டுதல்களாலும் சுற்றி நெருக்கப்பட்டு இருக்கிறோம். ஓரினப்புணர்ச்சியைப் பழக்கப்படுத்திக்கொள்ளுதல் உட்பட நமது உலகம் ஏராளமான அபாயங்கள் மற்றும் ஆக்கிரோஷங்களால் நிறைந்துள்ளன.

ஓரின நடத்தையில் ஈடுபடுவதற்கான சோதனையானது பலருக்கும் முற்றிலும் உண்மையான காரியமாகும். ஓரினச்சேர்க்கைகளோடு போராடுபவர்கள் பெரும்பாலும் பல வருடங்களாக மாறவேண்டும் என்று விரும்பியும் விடமுடியாமல் கஷ்டப்படுகிறேன் என தெரிவிக்கிறார்கள். எப்படி உணருகிறார்கள் அல்லது என்ன உணர்கிறார்கள் என்பதை மக்கள் எப்போதுமே கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருக்கலாம், ஆனால் அந்த உணர்ச்சிகளை என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களால் கட்டுப்படுத்த முடியும் (1 பேதுரு 1:5-8). சோதனைக்கு எதிர்த்து நிற்கவேண்டும் என்கிற பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு (எபேசியர் 6:13). நம்முடைய மனதை புதுப்பிப்பதன் மூலம் நாம் அனைவரும் மறுரூபமாக வேண்டும் (ரோமர் 12:2). நாம் அனைவரும் "மாம்சத்தின் இச்சைகளைத் திருப்திப்படுத்தாமல்" "ஆவியினாலே நடக்கவேண்டும்” (கலாத்தியர் 5:16).

இறுதியாக, வேதாகமம் ஓரினச்சேர்க்கையை வேறெந்த பாவத்தைக் காட்டிலும் “பெரிய” பாவமாக விவரிக்கவில்லை. எல்லா பாவங்களும் தேவனுக்கு முன்பாக குற்றமுள்ளதுதான். எந்தவகையான பாவத்தில் நாம் சிக்கியிருந்தாலும் கிறிஸ்து இல்லாமல், நாம் இழந்துபோனவர்களாகத்தான் இருக்க வைக்கிறது. வேதாகமத்தின்படி, விபசாரக்காரர், விக்கிரக ஆராதனைக்காரர், கொலைகாரர் மற்றும் திருடர்களுக்கு இருக்கிறதுபோலவே, தேவனுடைய மன்னிப்பு ஓரினச்சேர்க்கைகாரர்களுக்கும் இருக்கிறது. இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும், ஓரினச்சேர்க்கை உட்பட, பாவத்தின் மேல் வெற்றிக்கொள்ளும் வல்லமையை தேவன் வாக்குபண்ணியிருக்கிறார் (1 கொரிந்தியர் 6:11; 2 கொரிந்தியர் 5:17; பிலிப்பியர் 4:13).

Englishமுகப்பு பக்கம்

ஓரினச்சேர்க்கையைக் குறித்து வேதாகம்ம் என்ன சொல்லுகிறது? ஓரினச்சேர்க்கை பாவமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries