settings icon
share icon
கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்


விசுவாசிகளுக்கு வழங்கப்படும் ஐந்து வகையான பரலோகக் கிரீடங்கள் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அழிவில்லாத கிரீடம், மகிழ்ச்சியின் கிரீடம், நீதியின் கிரீடம், மகிமையின் கிரீடம் மற்றும் ஜீவ கிரீடம் ஆகும். "கிரீடம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை ஸ்டெப்பானோஸ் (stephanos) (இரத்தசாட்சியாக மரித்த ஸ்தேவான் என்கிற பெயரின் ஆதாரமும் இந்த வார்த்தைதான்) மற்றும் "ராஜ்ய முத்திரை, பொது விளையாட்டுகளில் பெரும் பரிசு அல்லது பொதுவாக அளிக்கப்படும் கனத்திற்கான அடையாளம்" என்று பொருள்படும். பண்டைய கிரேக்க விளையாட்டுகளின் போது கிரீடங்கள் பயன்படுத்தப்பட்டன; தடகளப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக வெற்றியாளரின் தலையில் மாலை அல்லது இலைகளால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. இந்த தடகள கனம் புதிய ஏற்பாட்டில், உண்மையுள்ளவர்களுக்கு தேவன் வாக்குறுதியளிக்கும் பரலோக வெகுமதிகளில் அடையாளப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கிரீடங்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதை 1 கொரிந்தியர் 9:24-25 சிறப்பாக வரையறுக்கிறது.

1) அழிவில்லாத கிரீடம் - (1 கொரிந்தியர் 9:24-25) "பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்” (NKJV). இந்த பூமியில் உள்ள அனைத்தும் அழிந்து போகும். "இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்" (மத்தேயு 6:19) பூமியில் நமது பொக்கிஷங்களைச் சேமித்துவைக்க வேண்டாம் என்று இயேசு வலியுறுத்துகிறார். விளையாட்டு வீரரின் இலைகளின் மாலையைப் பற்றி பவுல் சொன்னதற்கு இது ஒப்பானது, அது விரைவில் உடையக்கூடியதாக மாறி விழுந்துபோகும். பரலோக கிரீடம் அப்படியல்ல; உண்மையுள்ள சகிப்புத்தன்மை பரலோக வெகுமதியைப் பெறுகிறது, அது "அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது" (1 பேதுரு 1:3-5).

2) மகிழ்ச்சியின் கிரீடம் - (1 தெசலோனிக்கேயர் 2:19) “எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்?” நம்முடைய கிருபையுள்ள தேவன் நம்மீது பொழிந்திருக்கும் அபரிமிதமான ஆசீர்வாதத்திற்காக, "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்" என்று பிலிப்பியர் 4:4-ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிகமாக மகிழ்ச்சியடைகிறோம். பரலோகத்தில் இப்போதும் மகிழ்ச்சி இருக்கிறது என்று லூக்கா கூறுகிறார் (லூக்கா 15:7). மகிழ்ச்சியின் கிரீடம் நம் வெகுமதியாக இருக்கும், அங்கு “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்...இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” (வெளிப்படுத்துதல் 21:4).

3) நீதியின் கிரீடம் - (2 தீமோத்தேயு 4:8) "இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.” கிறிஸ்துவின் நீதியின் மூலம் நாம் இந்த கிரீடத்தைப் பெறுகிறோம்; கிறிஸ்துவின் நீதி இல்லாமல், இந்த கிரீடத்தைப் பெற முடியாது. அது நீதியில் ஆட்கொள்ளப்பட்டதாலும், சில சமயங்களில் பூமிக்குரிய கிரீடங்களைப் போல பலத்தினாலும் வஞ்சகத்தினாலும் பெறப்படாததாலும், அது நித்திய கிரீடம், கர்த்தரை நேசிப்பவர்களுக்கும், அவர் மீண்டும் திரும்பி வருவதற்காக ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கும் வாக்களிக்கப்பட்டது. நமது நீடித்த ஊக்கமின்மை, துன்புறுத்தல், துன்பம், அல்லது மரணம் ஆகியவற்றின் மூலம், நித்தியத்தில் நமது வெகுமதி கிறிஸ்துவிடம் இருப்பதை நாம் உறுதியாக அறிவோம் (பிலிப்பியர் 3:20). இந்த கிரீடம் தங்கள் சுய நீதியை சார்ந்து இருப்பவர்களுக்கானது அல்ல. இத்தகைய மனப்பான்மை ஆணவத்தையும் பெருமையையும் மட்டுமே வளர்க்கிறது, கர்த்தருடன் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தை அல்ல.

4) மகிமையின் கிரீடம் - (1 பேதுரு 5:4) "அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்." இந்த வார்த்தை மகிமை என்பது ஒரு சுவாரஸ்யமான வார்த்தையாகும், இது தேவனுடைய தன்மையையும் அவருடைய செயல்களையும் குறிக்கிறது. அது அவருடைய மகத்தான மகிமையையும் பிரகாசத்தையும் உட்படுத்துகிறது. கல்லெறிந்து கொல்லப்படும்போது, வானத்தைப் பார்த்து தேவனுடைய மகிமையைக் காண முடிந்த ஸ்தேவானை நினைவுகூருங்கள் (அப்போஸ்தலர் 7:55-56). இந்த வார்த்தையின் அர்த்தம், நாம் தேவனுக்குச் செலுத்தும் துதியும் கனமும் அவர் யார் என்பதாலேயே அவருக்கு உரியதாக இருக்கிறது (ஏசாயா 42:8; 48:11; கலாத்தியர் 1:5). விசுவாசிகள் ராஜ்யத்தில் பிரவேசிக்கவும், மகிமையின் கிரீடத்தைப் பெறவும், கிறிஸ்துவின் சாயலைப் பெறவும் நம்பமுடியாத அளவிற்கு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். பவுல் கூறியது போல், "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறே" (ரோமர் 8:18).

5) ஜீவகிரீடம் - (வெளிப்படுத்துதல் 2:10) "நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.” இந்த கிரீடம் அனைத்து விசுவாசிகளுக்கும் உரியதாகும், ஆனால் துன்பங்களைத் தாங்குபவர்களுக்கும், இயேசுவுக்காகத் துணிச்சலாக உபத்திரவத்தை எதிர்கொள்பவர்களுக்கும், மரணம் வரைக்கும் கூட உள்ளவர்களுக்கு இது மிகவும் பிரியமானது. வேதத்தில் ஜீவன் என்ற வார்த்தை பெரும்பாலும் தேவனுடன் உள்ள சரியான உறவைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இயேசு சொன்னார், "நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (யோவான் 10:10). சரீர வாழ்க்கைக்கு காற்று, உணவு மற்றும் தண்ணீர் எவ்வளவு இன்றியமையாததோ, அதேபோல் இயேசு ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் இன்றியமையாதவர் ஆவார். அவர்தான் “ஜீவத் தண்ணீரை” வழங்குகிறார். அவர் "ஜீவ அப்பம்" (யோவான் 4:10; 6:35). நமது பூமிக்குரிய வாழ்க்கை முடிவுக்கு வரும். ஆனால் இயேசுவின் மூலம் தேவனிடத்திலிருந்து வரும் அனைவருக்கும் அற்புதமான வாக்குத்தத்தம் நம்மிடம் உள்ளது: "நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்" (1 யோவான் 2:25).

இந்த ஜீவகிரீடம் தேவனை நேசிக்கிற அனைவருக்கும் உள்ளது என்று யாக்கோபு கூறுகிறார் (யாக்கோபு 1:12). அப்படியானால், தேவன் மீதுள்ள அன்பை நாம் எப்படிக் காட்டுவது என்பதுதான் கேள்வி. இதற்கு அப்போஸ்தலனாகிய யோவான் பதிலளிக்கிறார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” (1 யோவான் 5:3). அவருடைய பிள்ளைகளாகிய நாம் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், அவருக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். ஆகவே, தவிர்க்க முடியாத சோதனைகள், வலிகள், மனவேதனைகள் மற்றும் உபத்திரவங்களைச் சகித்துக்கொண்டு—நாம் வாழும் வரை—எப்போதும் முன்னேறிச் செல்லவேண்டும், அதாவது எப்போதும் “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி” (எபிரெயர் 12:2) ஓடவேண்டும், முடிவும் ஜீவகிரீடம் நமக்கு காத்திருக்கிறது.

Englishமுகப்பு பக்கம்

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries