பரலோகத்தில் இருப்பவர்கள் கீழே நம்மை பார்க்க முடியுமா?


கேள்வி: பரலோகத்தில் இருப்பவர்கள் கீழே நம்மை பார்க்க முடியுமா?

பதில்:
“மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்திருக்க…” என்று எபிரேயர் 12:1 சொல்லுகிறது. சிலர் இந்த “மேகம்போன்ற திரளான சாட்சிகள்” என்பவர்கள் பரலோகத்தில் இருந்து நம்மை பார்க்கும் ஜனங்கள் என்று புரிந்துகொள்கின்றார்கள். ஆனால் இது சரியான விளக்கம் அல்ல. விசுவாச வீரர்களின் பட்டியலை எபிரேயர் 11-ல் நாம் பார்க்கிறோம். இவர்கள் தான் இந்த “மேகம்போன்ற திரளான சாட்சிகள்.” அவர்கள் நம்மை பார்ப்பதினால் சாட்சிகள் என்று என்னபடவில்லை, ஆனால் அவர்கள் நமக்கு மாதிரியை வைத்து போனதினால் தான் சாட்சிகள் என்றென்னப்படுகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவுக்கும், தேவனுக்கும், சத்தியத்திர்கும் சாட்சிகளாய் இருக்கிறார்கள். எபிரேயர் 12:1 தொடர்கிறது, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” நமக்கு முன் இருந்த கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை பார்த்து, அவர்கள் மாதிரியை பின்பற்ற வேண்டும்.

பூமியில் இருக்கும் நம்மை பரலோகத்தில் இருக்கும் ஜனங்கள் நோக்கிபார்க்கிறார்களா இல்லையா என்பதை பற்றி வேதம் குறிப்பாக சொல்லுகிறதில்லை. ஆனால், அவர்கள் நம்மை பார்க்க முடயும் என்பது சந்தேகம்தான். ஏன்? முதலாவதாக, அவர்கள் உலகத்தை பார்க்கும்போது அவர்களுக்கு வேதனையும் வருத்தமும் உண்டாகும் ஏனென்றால் இங்கு பாவமும் தீமயுமான காரியங்கள் இருக்கிறது. பரலோகத்தில் எந்த துக்கவும், கண்னீரும், வருத்தமும் இல்லை (வெளிப்படுத்தல் 21:4), ஆகையால் அவர்கள் பூமியை பார்க்க முடியாது என்று என்னுகிறோம். இரண்டாவதாக, பரலோகத்தில் இருப்பவர்கள் தேவனை ஆராதிப்பதிலும், பரலோகத்தின் மகிமையில் களிக்கூருவதிலும் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாயிருப்பதினால், பூமியில் நடக்கும் காரியங்களில் அவர்களுக்கு அதிக நாட்டம் இருப்பதில்லை. அவர்கள் பாவத்திலிருந்து விடுவிக்கபட்டு, பரலோகத்தில் தேவ பிரசன்னத்தில் அனுபவிப்பது உண்மையாக அவர்கள் கவனத்தை முற்றும் கவர்ந்திருக்கும். பூமியில் இருக்கும் தங்கள் பிரியமானவர்களை பார்க்க பரலோகத்தில் இருப்பவர்களுக்கு தேவன் அனுமதி கொடுக்க முடியும், ஆனால் இது உண்மையாக நடக்கிறது என்று விசுவாசிக்க வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
பரலோகத்தில் இருப்பவர்கள் கீழே நம்மை பார்க்க முடியுமா?