மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?


கேள்வி: மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்:
பரலோகம் என்பது வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு உண்மையான இடமாகும். “பரலோகம்” என்ற சொல் புதிய ஏற்பாட்டில் மட்டும் 276 முறை காணப்படுகிறது. வேதாகமம் மூன்று வானங்களைக் குறிப்பிடுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் "மூன்றாவது வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்", ஆனால் அவர் அங்கு அனுபவித்ததை வெளிப்படுத்த தடை விதிக்கப்பட்டது (2 கொரிந்தியர் 12:1-9).

மூன்றாவது வானம் இருந்தால், வேறு இரண்டு வானங்களும் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. முதலாவது பழைய ஏற்பாட்டில் "வானம்" அல்லது "ஆகாயவிரிவு" என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. இது மேகங்களைக் கொண்ட வானம், பறவைகள் பறக்கும் பகுதி. இரண்டாவது வானம் விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) இருக்கிற விண்வெளி, இது நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் பிற வானப்பொருட்களின் தங்குமிடமாகும் (ஆதியாகமம் 1:14-18).

மூன்றாவது வானம், இதனுடைய சரியான இடம் வெளிப்படுத்தப்படாததாக இருக்கிறது, இதுதான் தேவனுடைய வாசஸ்தலமாகும். மெய்யான கிறிஸ்தவர்களுக்கு ஒரு இடத்தைதப் பரலோகத்தில் ஆயத்தப்படுத்தப் போவதாக இயேசு வாக்குறுதி அளித்தார் (யோவான் 14:2). தேவன் அளித்த மீட்பரின் வாக்குறுதியை நம்பி இறந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் இருக்கும் இடமும் பரலோகமாகும் (எபேசியர் 4:8). கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் அழியாமல் நித்திய ஜீவனைப் பெறுவான் (யோவான் 3:16).

அப்போஸ்தலனாகிய யோவான் பரலோக நகரத்தைப் பார்க்கவும் அறிக்கையிடவும் பாக்கியம் பெற்றார் (வெளிப்படுத்துதல் 21:10-27). “தேவனின் மகிமையைக்” கொண்டிருந்த வானத்தை (புதிய பூமியை) யோவான் சாட்சியாக அறிவிக்கிறார் (வெளிப்படுத்துதல் 21:11), அது தேவனுடைய பிரசன்னம் ஆகும். பரலோகத்தில் இரவு இல்லாததாலும், கர்த்தர் தாமே வெளிச்சம் என்பதாலும், சூரியனும் சந்திரனும் இனி அங்கு தேவையில்லை (வெளிப்படுத்துதல் 22:5).

விலை உயர்ந்த கற்கள் மற்றும் படிககங்கள் கொண்ட தெளிவான சூரியகாந்தக்கல்லின் பிரகாசத்தால் நகரம் நிரம்பியுள்ளது. பரலோகத்தில் பன்னிரண்டு வாசல்கள் உள்ளன (வெளிப்படுத்துதல் 21:12) மற்றும் பன்னிரண்டு அஸ்திபாரங்கள் (வெளிப்படுத்துதல் 21:14) இருக்கன்றன. ஏதேன் தோட்டத்தின் பரதீசு மீட்டெடுக்கப்படுகிறது: ஜீவத்தண்ணீரின் நதி சுதந்திரமாகப் பாய்கிறது, ஜீவ விருட்சம் மீண்டும் இருக்கிறது, மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். (வெளிப்படுத்துதல் 22:1-2). மிகவும் சொல்லாற்றலுடன் யோவான் பரலோகத்தைப் பற்றிய தனது விளக்கத்தில் விவரித்து கூறி இருந்தபோதிலும், பரலோகத்தின் மெய்யான யதார்த்தம் வரையறுக்கப்பட்ட மனிதனின் திறனைக்கொண்டு விவரிக்க முடியாததாய் இருக்கிறது (1 கொரிந்தியர் 2:9).

பரலோகம் என்பது “இனிமேல்” பல காரியங்கள் இல்லாத ஒரு இடமாகும். இனிமேல் கண்ணீர் இருக்காது, வேதனையும் இல்லை, துக்கமும் இருக்காது (வெளிப்படுத்துதல் 21:4). இனிமேல் பிரிவு இருக்காது, ஏனென்றால் மரணம் வெல்லப்படும் (வெளிப்படுத்துதல் 20:6). பரலோகத்தைப் பற்றிய மிகச் சிறந்த ஒரு விஷயம், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் பிரசன்னமாகும் (1 யோவான் 3:2). நம்மை நேசித்த மற்றும் தன்னைஏ தியாகமாக கொடுத்த தேவ ஆட்டுக்குட்டியுடன் நாம் நேருக்கு நேர் முகமுகமாய் காணத்தக்கதாக இருப்போம், இதனால் பரலோகத்தில் அவருடைய பிரசன்னத்தை நித்தியமாக அனுபவிக்க முடியும்.

English


முகப்பு பக்கம்
மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?