settings icon
share icon
கேள்வி

இரட்சிக்கப்படுவதற்கு முந்தைய அல்லது பிந்தைய நிலையில் செய்த கடந்தகால பாவங்களைப் பற்றிய குற்ற உணர்வுகளை ஒரு கிறிஸ்தவர் எவ்வாறு கையாள வேண்டும்?

பதில்


எல்லோரும் பாவம் செய்திருக்கிறார்கள், பாவத்தின் விளைவுகளில் ஒன்று குற்ற உணர்ச்சி. குற்ற உணர்ச்சிகளுக்காக நாம் நன்றி சொல்ல வேண்டும், ஏனென்றால் அவைகள் மன்னிப்பைத் தேட நம்மைத் தூண்டுகின்றன. ஒரு நபர் பாவத்திலிருந்து இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசத்தில் திரும்பும் தருணம், அவருடைய பாவம் மன்னிக்கப்படுகிறது. மனந்திரும்புதல் என்பது இரட்சிப்பிற்கு வழிவகுக்கும் விசுவாசத்தின் ஒரு பகுதியாகும் (மத்தேயு 3:2; 4:17; அப்போஸ்தலர் 3:19).

கிறிஸ்துவில், மிகக் கொடூரமான பாவங்கள் கூட கழுவப்படுகின்றன (மன்னிக்கப்படக்கூடிய அநீதியான செயல்களின் பட்டியலுக்கு 1 கொரிந்தியர் 6: 9-11 ஐக் காண்க). இரட்சிப்பு கிருபையால் ஆகும், கிருபையானது மன்னிக்கிறது. ஒரு நபர் இரட்சிக்கப்பட்ட பிறகும் அவரால் இன்னும் பாவம் செய்யக்கூடும், அவர் அவ்வாறு பாவம் செய்யும்போது, தேவன் அவரை இன்னும் மன்னிப்பதற்கு வாக்குறுதி அளிக்கிறார். “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” (1 யோவான் 2:1).

எவ்வாறாயினும், பாவத்திலிருந்து விடுபடுவது என்பது எப்போதும் குற்ற உணர்ச்சிகளில் இருந்து விடுபடுவதைக் குறிக்காது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்போது கூட, அவற்றை நாம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம். மேலும், "தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு" (வெளிப்படுத்துதல் 12:10) என்று அழைக்கப்படும் ஒரு ஆவிக்குரிய எதிரி நமக்கு இருக்கிறான், அவன் நம்முடைய தோல்விகள், தவறுகள் மற்றும் பாவங்களை இடைவிடாமல் நினைவுபடுத்துகிறான். ஒரு கிறிஸ்தவர் குற்ற உணர்ச்சியை அனுபவிக்கும்போது, அவன் அல்லது அவள் பின்வரும் விஷயங்களைச் செய்ய வேண்டும்:

1) முன்னர் ஒப்புக்கொள்ளப்படாத அல்லது அறிக்கைப்பண்ணப்படாத எல்லா அறிந்த பாவங்களையும் அறிக்கை பண்ணவேண்டும். சில சந்தர்ப்பங்களில், ஒப்புதல் வாக்குமூலம் தேவைப்படுவதால் குற்ற உணர்வுகள் பொருத்தமானவைகளாக இருக்கின்றன. பல முறை, நாம் குற்றவாளிகளாக இருப்பதால் பலமுறை குற்ற உணர்வை உடையவர்களாக இருக்கிறோம்! (சங்கீதம் 32:3-5-ல் தாவீதின் குற்றத்தைப் பற்றிய விளக்கத்தையும் அதன் தீர்வையும் காண்க.)

2) அறிக்கப்பண்ணப்படாத பாவங்களின் அறிக்கப்பண்ணப்படுதல் அவசியமாக இருக்கிறதா என்பதை கர்த்தரிடத்தில் கேளுங்கள். கர்த்தருக்கு முன்பாக முற்றிலும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க தைரியம் கொள்ளவேண்டும். “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்கீதம் 139:23-24).

3) கிறிஸ்துவின் இரத்தத்தின் அடிப்படையில் தேவன் பாவத்தை மன்னிப்பார், குற்றத்தை நீக்குவார் என்கிற அவரது வாக்குறுதியை நம்புங்கள் (1 யோவான் 1:9; சங்கீதம் 85:2; 86: 5; ரோமர் 8:1).

4) ஏற்கெனவே ஒப்புக்கொண்ட மற்றும் கைவிடப்பட்ட பாவங்கள் மீது குற்ற உணர்ச்சிகள் எழும் சந்தர்ப்பங்களில், அதை ஒரு போலியான தவறான குற்ற உணர்ச்சி போன்ற நிலையில் கருதிக்கொண்டு அந்த உணர்வுகளை நிராகரிக்க வேண்டும். மன்னிப்பதாக அவர் அளித்த வாக்குறுதியைக் குறித்து தேவன் உண்மையுள்ளவராக நிறைவேற்றியுள்ளார். சங்கீதம் 103:8-12-ஐ வாசித்து தியானியுங்கள்.

5) உங்கள் குற்றவாளியான சாத்தானைக் கடிந்துகொள்ளும்படி கர்த்தரிடம் கேளுங்கள், குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபடும் மகிழ்ச்சியை மீட்டெடுக்க தேவனிடம் கேளுங்கள் (சங்கீதம் 51:12).

சங்கீதம் 32 மிகவும் பிரயோஜனமான ஆய்வு. தாவீது மிகவும் மோசமான பாவம் செய்திருந்தாலும், அவர் தனது பாவத்திலிருந்தும் குற்ற உணர்ச்சிகளிலிருந்தும் விடுதலையைக் கண்டார். குற்றத்திற்கான காரணத்தையும் மன்னிப்பின் யதார்த்தத்தையும் அவர் கையாண்டார். 51-ஆம் சங்கீதம் ஆய்வு செய்ய மற்றொரு நல்ல பத்தியாகும். குற்றமும் துக்கமும் நிறைந்த இருதயத்திலிருந்து தாவீது தேவனிடம் மன்றாடுவதைப் போல, இங்கு பாவத்தின் அறிக்கையிடுதல் உள்ளது. மறுசீரமைப்பு மற்றும் மகிழ்ச்சி அதன் முடிவுகள்.

இறுதியாக, பாவம் ஒப்புக்கொள்ளப்பட்டு, மனந்திரும்பி, மன்னிக்கப்பட்டிருந்தால், அது முன்னேற வேண்டிய நேரம். கிறிஸ்துவிடம் வந்த நாம் அனைவரும் புதிய சிருஷ்டியாக ஆக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் வையுங்கள். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17). கடந்த "பழைய" ஒரு பகுதி கடந்த பாவங்களை நினைவுகூருவதும் அவர்கள் உருவாக்கிய குற்ற உணர்வும் ஆகும். துரதிர்ஷ்டவசமாக, சில கிறிஸ்தவர்கள் தங்களது முந்தைய பாவமான வாழ்க்கையின் நினைவுகளில், நீண்ட காலத்திற்கு முன்பே இறந்து புதைக்கப்பட்டிருக்க வேண்டிய நினைவுகளில் மூழ்கிவிடுவார்கள். இது அர்த்தமற்றது மற்றும் தேவன் நமக்காக விரும்பும் வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கையை எதிர்க்கிறது. ஒரு அறிவுக்கூர்மையான பழமொழி “தேவன் உங்களை ஒரு சாக்கடையில் இருந்து காப்பாற்றியிருந்தால், மீண்டும் உள்ளே குதித்து நீந்த வேண்டாம்.”

English



முகப்பு பக்கம்

இரட்சிக்கப்படுவதற்கு முந்தைய அல்லது பிந்தைய நிலையில் செய்த கடந்தகால பாவங்களைப் பற்றிய குற்ற உணர்வுகளை ஒரு கிறிஸ்தவர் எவ்வாறு கையாள வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries