நம்மை பாதுகாக்கும் தேவதூதர்கள் இருக்கிறார்களா?


கேள்வி: நம்மை பாதுகாக்கும் தேவதூதர்கள் இருக்கிறார்களா?

பதில்:
மத்தேயு 18:10 இவ்வாறு கூறுகிறது: "இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். இந்த சூழலில், “இந்தச் சிறியரில்” என்பது அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு (வசனம் 6) அல்லது அது சிறு பிள்ளைகளைக் குறிக்கலாம் (வசனங்கள் 3-5). பாதுகாவலர்களாக இருக்கிற தேவதூதர்கள் பற்றிய முக்கிய வேதப்பகுதி இதுவேயாகும். நல்ல தேவதூதர்கள் உதவி செய்து பாதுகாக்கிறார்கள் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை (தானியேல் 6:20-23; 2 இராஜாக்கள் 6:13-17), தகவல்களை வெளிப்படுத்துதல் (அப்போஸ்தலர் 7:52-53, லூக்கா 1:11-20), வழிகாட்டல் (மத்தேயு 1:20) கொடுத்தல் (ஆதியாகமம் 21:17-20; 1 இராஜாக்கள் 19: 5-7), மற்றும் பொதுவாக விசுவாசிகளுக்கு ஊழியம் செய்தல் (எபிரெயர் 1:14).

ஒவ்வொரு நபரும் அல்லது ஒவ்வொரு விசுவாசியும் – அவர்களுக்கு ஒரு தேவதூதன் ஒதுக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேல் தேசத்தினர் பிரதான தூதனைக் கொண்டிருந்தார்கள் (தானியேல் 10:21; 12:1), ஆனால் ஒரு விசுவாசிக்கு ஒரு தேவதூதன் என நிரந்தரமாக நியமித்து ஏற்ப்படுத்தப்பட்டது பற்றி வேதாகமம் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு காலங்களுக்கு இடையில் யூதர்கள் பாதுகாவலர்களாக இருக்கும் தேவதூதர்களை முழுமையாக நம்பியிருந்தனர். சில ஆரம்பகால சபை பிதாக்கள் விசுவாசிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல தேவதூதன் மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு தீய தூதனும் அல்லது பிசாசும் நியமிக்கப்பட்டுள்ளது என்று நம்பினார்கள். பாதுகாவலர்களாக இருக்கிற தேவதூதர்கள் பற்றிய நம்பிக்கை நீண்ட காலமாக இருக்கிறது, ஆனால் அதற்கான தெளிவான வசன ஆதாரம் இல்லை.

மத்தேயு 18:10ற்கு மீண்டும் வருவோம், "அவர்களுக்குரிய" என்ற வார்த்தை கிரேக்கத்தில் ஒரு கூட்டுப் பெயர்சொல்லாகும், இது விசுவாசிகள் பொதுவாக தேவதூதர்களால் சேவை செய்யப்படுகிறார்கள் என்பதைக் குறிக்கிறது. இந்த தேவதூதர்கள் "எப்பொழுதும்" தேவனுடைய முகத்தைக் கவனித்து, ஒரு விசுவாசிக்கு தேவைப்படுவதற்கு உதவ அவர் அவர்களுக்குக் கட்டளையிடுவதைக் கேட்கிறார்கள். இந்த பத்தியில் தேவதூதர்கள் பரலோகத்திலிருக்கிற பிதாவுக்குக் கவலையில்லாத ஒருவரைக் காத்துக்கொள்வதுபோல் தெரியவில்லை. தேவதூதர்களைக் காட்டிலும், தேவனிடமிருந்து வருவதைவிட செயலில் கடமை அல்லது மேற்பார்வை தோன்றுகிறது, இது சரியான அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஏனென்றால் தேவனே எல்லாம் அறிந்த சர்வஞானியாக இருக்கிறார். ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விசுவாசியையும் அவர் காண்கிறார், நம்மில் ஒருவருக்கு தேவதூதனின் தலையீடு எப்போது தேவைப்படும் என்பதையும் அவர் அறிவார். அவர்கள் தொடர்ந்து அவருடைய முகத்தை பார்த்துக்கொண்டிருக்கையில், தேவதூதர்கள் அவருடைய "சிறியரில்" ஒருவருக்கு உதவுவதற்காக அவருடைய வசம் எப்பொழுதும் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு விசுவாசியும் ஒரு பாதுகாவலராக தேவதூதர்களைப் பெற்றிருக்கிறார்களா அல்லது நியமிக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்பதை வேதவாக்கியம் கூறுவதாக உறுதிப்படுத்த முடியாது. ஆனால் முன்பு கூறியதுபோல், தேவன் நமக்கு ஊழியம் செய்ய தேவதூதர்களை பயன்படுத்துகிறார். அவர் நம்மைப் பயன்படுத்துவதை போலவே அவர்களையும் பயன்படுத்துகிறார் என்று சொல்வதே வேதப்பூர்வமானதாகும்; அதாவது, அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவர் நாமோ அல்லது தேவதூதர்களோ அவருக்கு அவசியமில்லை, ஆனால் நம்மைப் பயன்படுத்துவதையும், அவர்களைப் பயன்படுத்துவதையும் அவர் தெரிந்துகொள்கிறார் (யோபு 4:18; 15:15). இறுதியில், நம்மை பாதுகாப்பதற்காக ஒரு தேவதூதன் நியமிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்கிற விஷயத்தில் தேவனிடமிருந்து நமக்கு இன்னும் கூடுதலான உத்தரவாதம் இருக்கிறது: கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து நாம் அவருடைய பிள்ளைகளாயிருந்தால், அவர் எல்லாவற்றையும் நமக்கு நன்மைக்காகவே செய்கிறார் (ரோமர் 8:28-30) , மற்றும் இயேசு கிறிஸ்து நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் அல்லது நம்மை விட்டுவிலகவும் மாட்டார் (எபிரெயர் 13:5-6). நமக்கு ஒரு சர்வவல்லமையுள்ளவரும், சர்வஞானியும், அன்புள்ளவருமாகிய தேவன் இருந்தால், நம்மை பாதுகாக்கும்படியாக நமக்கு ஒரு பாதுகாவலராக தேவதூதன் இருக்கிறாரா இல்லையா என்பது மெய்யாகவே ஒரு காரியமா?

English


முகப்பு பக்கம்
நம்மை பாதுகாக்கும் தேவதூதர்கள் இருக்கிறார்களா?