பரிசுத்த ஆவியானவரை துக்கப்ப்டுத்துதல் / அவித்துப்போடுதல் என்பதன் அர்த்தம் என்ன?


கேள்வி: பரிசுத்த ஆவியானவரை துக்கப்ப்டுத்துதல் / அவித்துப்போடுதல் என்பதன் அர்த்தம் என்ன?

பதில்:
வேதாகமத்தில் "அவித்துப்போடுதல்" என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறபோது, அது நெருப்பை அவித்துப்போடுவதைப்பற்றி பேசுகிறது. விசுவாசிகள் தங்கள் சர்வாயுத வர்க்கத்தின் ஒரு பகுதியாக விசுவாசம் என்னும் கேடயத்தை அணிந்திருந்தால் (எபேசியர் 6:16), அவைகள் சாத்தானிடமிருந்து உமிழும் கரங்களின் வல்லமையை அணைக்கிறார்கள். நரகத்தை "அவியாத" அக்கினி (மாற்கு 9:44, 46, 48) என்கிற இடமாக கிறிஸ்து விவரித்தார். அவ்வாறே, ஒவ்வொரு விசுவாசியிலும் பரிசுத்த ஆவியானவர் நெருப்பாக வசிக்கிறார். அவர் நம்முடைய செயல்களிலும் மனப்பான்மையிலும் தம்மை வெளிப்படுத்த விரும்புகிறார். விசுவாசிகள் ஆவியானவர் நம்முடைய செயல்களில் காணப்படுவதை அனுமதிக்காதபோது, நாம் அறிந்ததைச் செய்யும்போது நாம் தவறு செய்கிறோம், அப்போது நாம் ஆவியானவரை அடக்குகிறோம் அல்லது அவித்துப்போடுகிறோம். ஆவியானவர் தாம் விரும்பும் விதத்தில் அவர் தம்மை வெளிப்படுத்துவதற்கு நாம் அனுமதிக்க மறுக்கிறோம்.

ஆவியானவரை துக்கப்படுத்துதல் என்றால் என்ன அர்த்தம் என்பதை புரிந்துகொள்ள, ஆவியானவர் ஆளுமை கொண்டிருக்கிற ஒரு நபர் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நபரை மட்டுமே துக்கப்படுத்த முடியும். ஆகையால், இந்த உணர்வை பெறுவதற்கு ஆவியானவர் ஒரு தெய்வீக நபராக இருக்க வேண்டும். இதை நாம் புரிந்து கொள்ளும்போது, அவர் துக்கப்படுவதை நாம் நன்றாக புரிந்து கொள்ளலாம், முக்கியமாக நாமும் துக்கப்படுகிறோம். ஆவியானவரை நாம் துக்கப்படுத்தக்கூடாது என்று எபேசியர் 4:30 நமக்கு சொல்லுகிறது. ஆவியானவரை பல நிலைகளில் நாம் துக்கப்படுத்துகிறோம்: அந்நிய ஜாதிகளைப்போல வாழ்வது மூலம் (4:17-19), பொய் சொல்லுவதன் மூலம் (4:25), கோபப்படுவதன் மூலம் (4:26-27), திருடுவதன் மூலம் (4:28), சபிப்பதன் மூலம் (4:29), கசப்பானவர்களாக இருப்பதன் மூலம் (4:31), மன்னிக்க மனமற்று இருப்பதன் மூலம் (4:32), மற்றும் பாலியல் ஒழுக்கக்கேடு (5:3-5) மூலம் நாம் ஆவியானவரை துக்கப்படுத்துகிறோம். ஆவியானவரை துக்கப்படுத்துதல் நாம் பாவ செயலில் செயல்படுவது என்பதாகும், அது சிந்தனை மட்டுமாக இருந்தாலும் அல்லது சிந்தனை மற்றும் செயலில் உள்ளதாக இருந்தாலும் பாவம் செய்தல் என்பதே ஆகும்.

ஆவியானவரை துக்கப்படுத்துதல் மற்றும் அவித்துப்போடுதல் இரண்டும் தங்கள் விளைவுகளில் ஒத்திருக்கின்றன. இரண்டும் ஒரு தேவபக்தியுள்ள வாழ்வை தடுக்கின்றன. ஒரு விசுவாசி தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, தன் சொந்த உலக ஆசைகளை பின்பற்றும்போது இந்த இரண்டும் நடக்கும். விசுவாசிகள் தேவனையும் பரிசுத்தத்தையும் நெருங்கி வருவதும், உலகத்தையும் பாவத்தையும் விட்டு தூரம் செல்வதிலுமே சரியான பாதை இருக்கிறது. நாம் துக்கப்படுவதை விரும்பாதது போலவும், அவித்துப்போடப்படுவதை தேடாததுபோலவும், நாம் ஆவியானவரால் வழிநடத்தப்பட மறுப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தவோ அல்லது அவித்துப்போடவோ கூடாது.

English


முகப்பு பக்கம்
பரிசுத்த ஆவியானவரை துக்கப்ப்டுத்துதல் / அவித்துப்போடுதல் என்பதன் அர்த்தம் என்ன?