settings icon
share icon
கேள்வி

பிரதான ஆணை என்றால் என்ன?

பதில்


மத்தேயு 28:19-20ல் கூறப்பட்டுள்ளவைகள் பொதுவாக பிரதான ஆணை/கட்டளை என்று அழைக்கப்படுகிறது: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.” இயேசு இந்த கட்டளையை அவர் பரமேறிப்போவதற்கு சற்று முன்பு அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தார், மேலும் அப்போஸ்தலர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அவர் இப்பூமியில் இல்லாத நிலையில் அவர்கள் இதைச்செய்ய இயேசு எதிர்பார்த்ததையும் இது கோடிட்டுக் காட்டுகிறது.

மூல கிரேக்க மொழியில், மத்தேயு 28:19-20-ல் உள்ள ஒரே நேரடி கட்டளை “சீஷர்களை உருவாக்குங்கள்” என்பது சுவாரஸ்யமானது. நாம் உலகம் முழுவதும் செல்லும்போது சீஷராக்கும்படி பிரதான ஆணை அறிவுறுத்துகிறது. “போங்கள்,” “ஞானஸ்நானம் கொடுங்கள்” மற்றும் “கற்பியுங்கள்” என்பதற்கான வழிமுறைகள் மறைமுக கட்டளைகள் ஆகும் – அதாவது மூல மொழியில் இவைகள் யாவும் பெயரெச்சங்கள் ஆகும். நாம் எவ்வாறு சீஷராக்குவது? ஞானஸ்நானம் அளிப்பதன் மூலமும், இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் அவர்களுக்குக் கற்பிப்பதன் மூலமும். "சீடர்களை உருவாக்கு" என்பது பிரதான ஆணையத்தின் முதன்மை கட்டளையாகும். "செல்வது," "ஞானஸ்நானம் கொடுப்பது" மற்றும் "கற்பித்தல்" ஆகியவை "சீஷராக்குவது" என்கிற கட்டளையை நிறைவேற்றுவதற்கான வழிமுறையாகும்.

சீஷன் என்பவன் மற்றொரு நபரிடமிருந்து அறிவுறுத்தலைப் பெறுபவன் ஆகும்; ஒரு கிறிஸ்தவ சீஷன் கிறிஸ்துவின் ஞானஸ்நானம் பெற்றவன், கிறிஸ்துவின் போதனையை நம்புபவன் ஆகும். கிறிஸ்துவின் சீஷன் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறான், அவருடைய பலியை உறுதியாக பிடித்துக்கொள்கிறார், அவருடைய உயிர்த்தெழுதலை முழுமனதோடு நம்புகிறார், பரிசுத்த ஆவியானவரை தன்னுள் கொண்டிருக்கிறார், அவருடைய வேலையைச் செய்ய வாழ்கிறார். "சீஷர்களை உருவாக்குங்கள்" என்ற பிரதான ஆணையத்தின் கட்டளை என்பது கிறிஸ்துவைப் பின்பற்றவும் கீழ்ப்படியவும் மக்களுக்கு கற்பித்தல் அல்லது பயிற்சியளித்தல் ஆகும்.

பிரதான ஆணையின் ஒரு பகுதியாக அப்போஸ்தலர் 1:8 ஐ பலர் புரிந்துகொள்கிறார்கள்: “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிரதான ஆணையானது செயல்படுத்தப்படுகிறது. நாம் கிறிஸ்துவின் சாட்சிகளாக இருக்க வேண்டும், நம்முடைய நகரங்களிலும் (ஜெருசலேம்), நமது மாநிலங்களிலும், நாடுகளிலும் (யூதேயா மற்றும் சமாரியா) பிரதான ஆணையை நிறைவேற்றுகிறோம், அதுபோலவே உலகமெங்கும் தேவன் நம்மை (பூமியின் அனைத்து முனைகளுக்கும்) அனுப்புகிறார்.

அப்போஸ்தலர் 1:8-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, அப்போஸ்தலர்கள் எவ்வாறு பிரதான ஆணையை நிறைவேற்றத் தொடங்கினார்கள் என்பதை அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் முழுவதும் காண்கிறோம். முதலாவதாக, எருசலேமில் சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது (அப்போஸ்தலர் 1 - 7); பின்னர் ஆவியானவர் யூதேயா மற்றும் சமாரியா தேசங்களிலும் திருச்சபையை விரிவுபடுத்துகிறார் (அப்போஸ்தலர் 8 - 12); இறுதியாக, சுவிசேஷம் “பூமியின் எல்லா முனைகளில்” அடையும்படியானது (அப்போஸ்தலர் 13 - 28). இன்று, நாம் தொடர்ந்து கிறிஸ்துவின் தூதுவர்களாக / நற்செய்தியாளர்களாக செயல்படுகிறோம், மேலும் “நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்’” (2 கொரிந்தியர் 5:20).

நாம் ஒரு அருமையான விலையேறப்பெற்ற பரிசைப் பெற்றுள்ளோம்: “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசம்” (யூதா 1:3). பிரதான ஆணையில் இயேசுவின் வார்த்தைகள் தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்துகின்றன, அவர் "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் (தேவன்) சித்தமுள்ளவராயிருக்கிறார்" (1 தீமோத்தேயு 2:4). எல்லோருக்கும் சுவிசேஷம் கேட்கும் வரை நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள பிரதான ஆணை நம்மை கட்டாயப்படுத்துகிறது. இயேசுவின் உவமையில் உள்ள ஊழியர்களைப் போலவே, நாம் ராஜ்யத்தின் வியாபாரத்தைப் பற்றி இருக்க வேண்டும், எல்லா தேசங்களையும் சீஷராக்குகிறோம்: “அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்” (லூக்கா 19:13).

English



முகப்பு பக்கம்

பிரதான ஆணை என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries