நோவாவின் பெருவெள்ளம் உலகளாவியளா வெள்ளமா அல்லது உள்ளுரில் மட்டுமா?


கேள்வி: நோவாவின் பெருவெள்ளம் உலகளாவியளா வெள்ளமா அல்லது உள்ளுரில் மட்டுமா?

பதில்:
இந்த பெருவெள்ளத்தை குறித்ததான வேதாகம பகுதி இதை உலகளாவியது என தெளிவாய் குறிப்பிடுகிறது. மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன, வானத்தின் மதகுகளும் திறவுண்டன என்று ஆதியாகமம் 7:11ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதியாகமம் 1:6-7 மற்றும் 2:6 சொல்லப்பட்டிருக்கிற முதல் வெள்ள சூழ்நிலை இக்காலகட்டததில் நாம் அனுபவிக்கும் வெள்ளத்தை விட மிக வித்தியாசமானது. இதன் மற்றும் பிற வேதாகம விளக்கங்களின் அடிப்படையில் பூமியானது ஒருமுறை தண்ணீரினால் மூடப்பட்டிருக்கிறது என்று ஊகிக்கப்படுகிறது. இந்த மூடுகை ஒரு நீராவி மூடுகையாக அல்லது தொடர்ச்சியான வளையங்களாக இருந்திருக்கலாம் அல்லது பனிப்படலங்களின் வளையங்களாக இருந்திருக்கலாம். இதனோடு இனைந்து ஆழத்தின் ஊற்றுக்கண்களின் தண்ணீரும் பூமியை நிறப்பி (ஆதியாகமம் 2:6) உலகளாவிய வெள்ளத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

இந்த வெள்ளம் எந்த அளவிலான வெள்ளம் என்பதை குறிக்கும் தெளிவான வசனம் ஆதியாகமம் 7:19-23 ஆகும். ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று. அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின, நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.

மேல் குறிப்பிடப்பட்ட வேத பகுதியில் “எல்லாம்” என்கிற வார்த்தையை மட்டுமல்ல வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன, மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று. அப்பொழுது மாம்சஜந்துக்கள் எல்லாம் மாண்டுபோயின என்று வாசிக்கிறோம். இந்த விளக்கம் உலகளாவிய வெள்ளம் முழு உலகத்தையும் மூடினது என்று தெளிவாக விளக்குகிறது. இந்த வெள்ளம் நோவா வாழ்ந்த பகுதிக்கு மட்டும் இருக்குமானால் தேவன் ஏன் நோவாவை பேழை கட்ட சொல்ல வேண்டும் அதற்கு பதிலாக அவனை மற்றும் விளங்குகளை வேறு இடத்திற்கு போக சொல்லியிருக்கலாமே? மற்றும் தேவன் ஏன் நோவாவை பூமியிலுள்ள எல்லா விதமான விளங்குகளும் இருக்கத்தக்கதான பேழையை கட்ட சொல்ல வேண்டும்.? இது உலகளாவிய வெள்ளமாய் இருக்காவிட்டால் இங்கு பேழைக்கு அவசியமே இல்லை.

பேதுருவும் இந்த உலகளாவிய வெள்ளத்தை 2 பேதுரு 3:6-7 ல் அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்து போனது என்பதை குறிப்பிடுகிறார். அதுபோலவே இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவ பக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடுகிறார். இந்த வசனத்தில் பேதுரு வரவிருக்கிற உலகளாவிய நியாயத்தீர்ப்பை நோவாவின் காலத்தில் பெருவெள்ளத்தால் அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததற்க்கு ஒப்பிடுகிறார். மேலும் அனேக வேதாகம ஆசிரியர்கள் வரலாற்றுப்புர்வமான இந்த உலகளாவிய வெள்ளத்தை ஏற்றுக்கொள்கின்றனர் (ஏசாயா 54:9; 1பேதுரு 3:20; 2பேதுரு2:5; எபிரேயர் 11:7). மேலும் இயேசு கிறிஸ்து இந்த உலகளாவிய வெள்ளத்தை விசுவாசிப்பதோடு இதை அவர் வரும்போது வரவிருக்கிற உலகத்தின் அழிவுக்கு ஒப்பிட்டு கூறுகிறார் (மத்தேயு 24:37-39; லூக்கா 17:26-27).

இது உலகளாவிய வெள்ளம் என்பதற்கு வேதாகமத்திற்கு அப்பாற்பட்ட அநேக ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கன்டத்திலும் புதைபடிவ புதைகுழிகள் காணப்படுகிறது பரந்த அளவிளான தாரவங்களை விரைவில் மூடுவதற்கு தேவையான அதிக அளவிளான நிலக்கரி வைக்கப்பட்டுள்ளது. உலகேங்கும் மலைகளுக்கு மேல் கடற்படிமங்களை காணப்படுகின்றன. உலகத்தின் எல்லா பகுதிகளில் உள்ள கலாச்சாரங்கள் இந்த வெள்ள புராணக்கதையின அடிப்படையிலுள்ளன. இவைகள் மற்றும் பிற உண்மைகள் உலகளாவிய வெள்ளத்திற்கு ஆதாரங்களாக உள்ளன.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
நோவாவின் பெருவெள்ளம் உலகளாவியளா வெள்ளமா அல்லது உள்ளுரில் மட்டுமா?