settings icon
share icon
கேள்வி

தேவனிடத்தில் நான் எப்படி சரியான நிலையைப் பெறமுடியும்?

பதில்


தேவனுடன் "சரியான" நிலையைப் பெறுவதற்கு, நாம் முதலில் "தவறு" என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பதில் பாவம். "நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை" (சங்கீதம் 14:3). நாம் தேவனுடைய கட்டளைகளுக்கு எதிராக கலகம் செய்தோம்; "நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (ஏசாயா 53:6).

இதில் கெட்ட செய்தி என்னவென்றால், பாவத்தின் தண்டனை மரணம் என்பதுதான். "பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்" (எசேக்கியேல் 18:4). இதில் நமக்குள்ள ஒரு நற்செய்தியை என்னவெனில், அன்புள்ள தேவன் நமக்கு இரட்சிப்பை அளிக்க அவர் நம்மைப் பின்தொடர்ந்தார் என்பதுதான். “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” என்று இயேசு தாம் இந்த உலகிற்கு வந்த நோக்கத்தை எடுத்துரைக்கிறார் (லூக்கா 19:10). மேலும் அவர் சிலுவையில் மரித்தபோது “முடிந்தது” என்று சொல்லி இயேசு தாம் எதற்காக இந்த உலகிற்கு வந்தாரோ அதனுடைய நோக்கம் நிறைவேறியாயிற்று என்பதையும் அறிவித்திருக்கிறார் (யோவான் 19:30).

தேவனுடன் சரியான உறவு வைத்திருக்கிறேன் என்னும் காரியம் நீங்கள் உங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வதில் ஆரம்பிக்கிறது. அடுத்தபடியாக நீங்கள் உங்கள் பாவத்தை மனத்தாழ்மையோடு தேவனிடத்தில் அறிக்கையிடுவதில் அடங்கியிருக்கிறது (ஏசாயா 57:15). "நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்" (ரோமர் 10:10).

விசுவாசத்தினால் இந்த மனந்திரும்புதல் வருகிறதாய் இருக்கவேண்டும் - குறிப்பாக இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் அற்புதமான அவரது உயிர்த்தெழுதல் ஆகியவைகளின் மேலுள்ள விசுவாசம். “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோமர் 10:9). இன்னும் அநேக வேத பகுதிகள் இந்த விசுவாசத்தின் தேவையைக் குறித்து கூறுகிறது. உதாரணமாக, யோவான் 20:27; அப்போஸ்தலர் 16:31; கலாத்தியர் 2:16; 3:11, 26; மற்றும் எபேசியர் 2: 8.

தேவனோடு சரியான நிலையில் இருக்கிறேன் என்று கூறுகிற காரியம் தேவன் உங்களுக்காக செய்த காரியத்திற்கு உங்களுடைய மறுபடியாக இருக்கிறது. அவர் உங்களுக்காக இரட்சகரை அனுப்பினார், அவர் உங்கள் பாவங்களை உங்களில் இருந்து நீக்கிப்போட சிலுவையில் பலியானார் (யோவான் 1:29). அவர் உங்களுக்கு வாக்குறுதியை அளிக்கிறார்: "கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்" (அப்போஸ்தலர் 2:21).

மனந்திரும்புதலுக்கும் மன்னிப்பை பெற்றதற்கும் ஒரு அழகான உதாரணம், கெட்ட குமாரனின் உவமையாகும் (லூக்கா 15:11-32). இளைய மகன் அவனது தந்தை அவனுக்கு அளித்த பங்கை வெட்கக்கேடான பாவத்தில் வீணடித்தான் (வசனம் 13). அவன் தான் தவறு செய்ததை ஒப்புக்கொண்டபோது, அவன் தன் வீட்டுக்குத் திரும்ப தீர்மானித்தான் (வசனம் 18). அவன் இனி தன் தகப்பனுக்கு ஒரு மகனாக கருதப்பட மாட்டான் எனவும் எண்ணியிருந்தான் (வசனம் 19), ஆனால் அவன் அப்படி எண்ணியது தவறு. காரணம் அவனது தகப்பன் தன் கெட்டுப்போன மகன் திரும்பி வந்ததை கண்டு சந்தோஷப்பட்டதோடு இல்லாமல் அவனை இன்னும் அதிகமாய் நேசித்தார் (வசனம் 20). அந்த மகன் செய்த எல்லா தப்பிதங்களும் அவனுக்கு மன்னிக்கப்பட்டன, கொண்டாட்டமும் ஏற்பாடானது (வசனம் 24). மன்னிப்பளிக்கும் வாக்குறுதி உட்பட தேவனுடைய எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் அவர் நல்லவராகவே இருக்கிறார். "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்" (சங்கீதம் 34:18).

நீங்கள் தேவனோடு சரியான நிலையை வைத்துக்கொள்ள விரும்பினால், நீங்கள் ஜெபிக்க வேண்டிய ஒரு மாதிரி ஜெபம் இதோ. நீங்கள் ஜெபிக்கிற இந்த ஜெபமோ அல்லது இதுபோன்ற மற்ற ஜெபங்களோ உங்களை இரட்சிப்பது இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவில் நீங்கள் வைக்கிற நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும். அவர்மேல் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை மற்றும் அவரால் நீங்கள் பெற்றிருக்கிற இரட்சிப்பை வெளிப்படுத்துகிற ஒரு செயல் தான் இந்த ஜெபம். "ஆண்டவரே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறேன் என்றும் அதினிமித்தம் பாவத்திற்கான தண்டனையை அடைவதற்கு பாத்திரமாய் இருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரில் நான் மன்னிப்பை பெறத்தக்கதாக நான் அடையவேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும் அறிந்திருக்கிறேன். இரட்சிப்பிற்காக உம்மில் எனது பரிபூரண நமிக்கையை வைக்கிறேன். ஈவாகிய நித்திய ஜீவனுக்காக நீர் காண்பித்திருக்கிற அற்புதமான கிருபைக்காகவும் மன்னிப்பிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்! ஆமென்!"

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

Englishமுகப்பு பக்கம்

தேவனிடத்தில் நான் எப்படி சரியான நிலையைப் பெறமுடியும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries