settings icon
share icon
கேள்வி

தலைமுறை சாபங்களை உடைப்பது பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?

பதில்


வேதாகமம் "தலைமுறை சாபங்கள்" என்று பல இடங்களில் குறிப்பிடுகிறது (யாத்திராகமம் 20:5; 34:7; எண்கள் 14:18; உபாகமம் 5:9). தேவன் தம்மைக்குறித்துக் கூறுகையில், “தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்” என்று எச்சரிக்கிறார்.

தகப்பனின் பாவங்களுக்காக பிள்ளைகளை தேவன் தண்டிப்பது நியாயமற்றது என்பதுபோல் தோன்றுகிறது. இருப்பினும், அதை விட அதிகமாக உள்ளது. பாவத்தின் விளைவுகள் இயற்கையாகவே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அனுப்பப்படுகின்றன. ஒரு தகப்பன் ஒரு பாவமான வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கும்போது, அவனுடைய பிள்ளைகளும் அதே பாவமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வாய்ப்புள்ளது. யாத்திராகமம் 20:5-ன் எச்சரிப்பில் மறைமுகமாக, பிள்ளைகள் தங்கள் தகப்பனின் பாவங்களைத் திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுப்பார்கள். ஒரு யூத டார்கம் இந்த பத்தியில் "தேவபக்தியற்ற தகப்பன்கள்" மற்றும் "கிளர்ச்சி செய்யும் பிள்ளைகளைக்" குறிக்கிறது என்று குறிப்பிடுகிறது. எனவே, தேவன் பாவத்தை மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறை வரைக்கும் தண்டிப்பது அநியாயம் அல்ல—அந்த தலைமுறையினர் தங்கள் முன்னோர்கள் செய்த அதே பாவங்களை செய்கிறார்கள்.

ஒவ்வொரு பாவத்தையும், பிரச்சனையையும் ஏதோ ஒரு தலைமுறை சாபத்தின் மீது பழி சுமத்த முயற்சி செய்யும் போக்கு இன்று திருச்சபையில் உள்ளது. இது வேதாகமத்தின்படியானது அல்ல. வருங்கால சந்ததியினர் மீது அக்கிரமத்தை விசாரிப்பேன் என்ற தேவனுடைய எச்சரிக்கை பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் ஒரு பகுதியாகும். ஒரு குறிப்பிட்ட பாவத்திற்காக (விக்கிரக வழிபாடு) ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கு (இஸ்ரேல்) ஒரு தலைமுறை சாபம் ஒரு விளைவாகும். பழைய ஏற்பாட்டின் வரலாற்று புத்தகங்களில் (குறிப்பாக நியாயாதிபதிகள்) இந்த தெய்வீக தண்டனையின் பதிவேடு உள்ளது.

ஒரு தலைமுறை சாபத்திற்கான பரிகாரம் எப்போதும் மனந்திரும்புதலாகும். ஜீவனுள்ள தேவனுக்கு சேவை செய்ய இஸ்ரவேல் விக்கிரகங்களை விட்டு திரும்பியபோது, "சாபம்" உடைக்கப்பட்டு தேவன் அவர்களை காப்பாற்றினார் (நியாயாதிபதிகள் 3:9, 15; 1 சாமுவேல் 12:10-11). ஆம், மூன்றாம் மற்றும் நான்காவது தலைமுறைகளில் இஸ்ரவேலின் பாவத்தை விசாரிப்பதாக தேவன் வாக்களித்தார், ஆனால் அடுத்த வசனத்திலேயே "என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்" (யாத்திராகமம் 20:6) வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய கிருபை அவருடைய கோபத்தை விட ஆயிரம் மடங்கு நீடிக்கும் ஒன்றாகும்.

ஒரு தலைமுறை சாபத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு, பதில் இயேசு கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பு. ஒரு கிறிஸ்தவன் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறான் (2 கொரிந்தியர் 5:17). தேவனுடையப் பிள்ளை எப்படி இன்னும் தேவனுடைய சாபத்தில் இருக்க முடியும் (ரோமர் 8:1)? "தலைமுறை சாபத்திற்கு" தீர்வு என்பது கேள்விக்குரிய பாவத்திற்கு மனந்திரும்புதல், கிறிஸ்துவில் விசுவாசம் மற்றும் கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை (ரோமர் 12:1-2).

English



முகப்பு பக்கம்

தலைமுறை சாபங்களை உடைப்பது பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries