settings icon
share icon
கேள்வி

இடைவெளி கோட்பாடு என்றால் என்ன? ஆதியாகமம் 1:1 மற்றும் 1:2-க்கு இடையில் ஏதாவது நிகழ்ந்ததா?

பதில்


ஆதியாகமம் 1:1-2 இப்படியாக கூறுகிறது, “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.” இடைவெளிக் கோட்பாடு, தேவன் முதலில் வசனம் ஒன்றில் வாசிக்கிறபடி முழுமையான நிலையில் சகல மிருகங்களையும் புதைபடிவ பதிவிலிருந்து மட்டுமே நமக்குத் தெரிந்த டைனோசர்கள் மற்றும் பிற உயிரினங்கள் உட்பட யாவையும் சிருஷ்டித்தார் என்று கூறுகிறது. பின்னர் அந்த கோட்பாடு, பூமியை முற்றிலுமாக அழிக்கதத்தக்க நிலையில் ஏதோ நடந்தது என்று-பெரும்பாலும் சாத்தான் பூமிக்கு வீழ்ந்தது – இதனால்தான் பூமியின் வடிவம் வெறுமையாக மற்றும் தோற்றம் எதுவுமின்றி மாறியது என்கிறது. இந்த கட்டத்தில்தான், தேவன் சிருஷ்டிப்பின் வேலையை மீண்டும் தொடங்கினார், அதுதான் ஆதியாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி பூமியை அதன் பரதீசு வடிவத்தில் மீண்டும் உருவாக்குகிறார் என்கிறது இந்த இடைவெளிக் கோட்பாடு. தேவ பரிணாமம் மற்றும் நாள்-யுகக் கோட்பாட்டிலிருந்து வேறுபட்ட இடைவெளிக் கோட்பாடானது, பழைய-பூமி படைப்புவாதம், இடைவெளி படைப்புவாதம் மற்றும் அழிவு-புனரமைப்பு கோட்பாடு என்றும் அழைக்கப்படுகிறது.

இளம்-பூமி படைப்புவாதத்தில், ஆதியாகமம் 1:1 எபிரேய கதை சொல்லும் வடிவத்தில் 1 ஆம் அத்தியாயத்தின் சுருக்கமாகக் காணப்படுகிறது. தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 1 வது வசனம் சுருக்கமாகக் கூறும் படிப்படியான செயல்முறையின் விரிவான விளக்கம் 2 வது வசனம் முதல் தொடங்குகிறது. இருப்பினும், “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது” (ஆதியாகமம் 1:2) என்கிற கூற்று குழப்பமானதாக இருக்கலாம். பயனற்ற மற்றும் வடிவமற்ற பூமியை தேவன் படைத்தார் என்ற கருத்து சில பழமைவாத இறையியலாளர்களுக்கு சங்கடமான நிலையாகும், மேலும் இது அவர்களை இடைவெளிக் கோட்பாட்டிற்கு அல்லது பழைய பூமி முன்னோக்குக்கு இட்டுச் செல்கிறது.

இடைவெளிக் கோட்பாட்டின் பழமைவாத ஆதரவாளர்களின் கூற்றுப்படி, ஆதியாகமம் 1:1 தேவனின் அசல் படைப்பை விவரிக்கிறது - அந்த படைப்பானது எல்லா வகையிலும் சரியானது. பின்னர், 1 மற்றும் 2 வசனங்களுக்கு இடையில், சாத்தான் பரலோகத்தில் தேவனுக்கு எதிராக கலகம் செய்தபடியினால் கீழே தள்ளப்பட்டான். சாத்தானின் பாவம் தேவனுடைய அசல் படைப்பை “பாழாக்கியது”; அதாவது, அவனது கிளர்ச்சி அதன் அழிவையும் இறுதியில் மரணத்தையும் கொண்டு வந்தது, மேலும் பூமி அதன் “உருவமற்ற மற்றும் வெற்று” நிலைக்கு குறைக்கப்பட்டு, “மறு சிருஷ்டிப்பிற்கு” தயாராக இருந்தது. சம்பந்தப்பட்ட நேரத்தின் நீளம் - “இடைவெளியின்” அளவு குறிப்பிடப்படவில்லை ஆனால் மில்லியன் கணக்கான ஆண்டுகள் நீடித்திருக்கலாம் என்பதாக கூறப்படுகிறது.

நிச்சயமாக, ஆதாம் வீழ்ச்சி அடைவதற்கு முன்பாக சாத்தான் வீழ்ந்திருக்க வேண்டும்; இல்லையெனில், எதேன் தோட்டத்தில் எந்தவிதமான சோதனையும் இருந்திருக்காது. ஆதியாகமம் 1:31-க்குப் பிறகு சாத்தான் வீழ்ந்தான் என்று இளம் பூமி படைப்பாளர்கள் கூறுகிறார்கள். ஆதியாகமம் 1:1 மற்றும் 2-க்கு இடையில் சாத்தான் விழுந்ததாக இடைவெளிக் கோட்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இடைவெளிக் கோட்பாட்டின் ஒரு சிரமம் என்னவென்றால், ஆதாமின் வீழ்ச்சிக்கு முன்னரே சிருஷ்டியானது மரணத்தையும் அழிவையும் அனுபவிக்க வேண்டும் என்பதாகும். ஆனால் ரோமர் 5:12 கூறுகிறது, “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” இடைவெளி கோட்பாடு இரண்டு உலகங்களை முன்வைப்பதன் மூலம் இதை எதிர்க்கிறது. சாத்தானின் பாவம் அசல் படைப்புக்கு மரணத்தை கொண்டு வந்தது, அது எது போன்றதாக இருந்தாலும்; ஆதாமின் பாவம் மனிதகுலத்தின் மறு உருவாக்கத்திற்கு மரணத்தை கொண்டு வந்தது. ஆதாமின் பாவத்தின் மூலம், தீமை நம் உலகிற்குள் நுழைந்தது, மனிதஇனம் அதனால் சபிக்கப்பட்டது. சாத்தானும் அவனைச்சேர்ந்த தேவதூதர்களும் ஏற்கனவே வீழ்ந்திருந்ததால் (ஆவிக்குரிய உலகில்) மனிதகுலத்திற்கு வெளியே கலகம் ஏற்கனவே இருந்தது (ஏசாயா 14:12-14; எசேக்கியேல் 28:12-18). மனிதன் அதைத் தேர்ந்தெடுக்கும் வரை பாவத்தால் மனிதனின் அரங்கில் நுழைய முடியவில்லை. சாத்தான், பாம்பு ரூபத்தில், மனிதனை வெற்றிகரமாக சோதனை செய்து வெற்றிக்கொண்டான்.

இடைவெளிக் கோட்பாட்டின் ஆட்சேபனைகளில் ஆதியாகமம் 1:1 மற்றும் 2-க்கும் இடையில் ஏதேனும் முக்கியமான ஒன்று நிகழ்ந்திருந்தால், தேவன் அதை அறியாமையில் ஊகிக்க விடாமல், நிச்சயமாக அதை சொல்லியிருப்பார். மேலும், ஆதியாகமம் 1:31 கூறுகிறது, தேவன் தம் படைப்பை எல்லாம் “மிக நன்றாயிருக்கிறது” என்று அறிவித்தார் - சாத்தான் “இடைவெளியில்” வீழ்ந்ததால் தீமை ஏற்கனவே இருந்திருக்கிறது என்ற கோட்பாட்டைக் கொண்டு சொல்வது கடினம்.

ஆதியாகமம் 1:3-ல் ஒரு நாள் நிகழ்வுகளுக்கு முன்பாக இடைவெளி விழுவதால், ஒரு நேரடி எழுத்தியல் பிரகாரமான, ஆறு நாள் படைப்பு வாரத்தையைக் கொண்டிருப்பது மற்றும் இடைவெளிக் கோட்பாட்டை இன்னும் கொண்டிருப்பது சாத்தியம் – காரணம் இடைவெளிக் கோட்பாட்டிற்கு பரிணாமம் உண்மையாக இருக்க தேவையில்லை. அதனால்தான் சில பழமைவாத அறிஞர்கள் இடைவெளிக் கோட்பாட்டை நம்புகிறார்கள், இருப்பினும் சி. ஐ. ஸ்கோஃபீல்ட் (C. I. Scofield) மற்றும் ஜே. வெர்னோன் மெக்கீ (J. Vernon McGee) ஆகியோரின் நாட்களிலிருந்து அதன் ஏற்றுக்கொள்ளல் குறைந்துவிட்டது.

இருப்பினும், இடைவெளிக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பவர்களில் பலர் பழைய பூமி, பரிணாமக் கோட்பாடுகளை ஆதியாகமம் புத்தகத்துடன் சரிசெய்யும் பொருட்டு அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அது ஒரு நல்லிணக்க சமரசம் என்று தெரிகிறது. ஆதியாகமம் 1 இன் தெளிவான வாசிப்பு முதல் இரண்டு வசனங்களுக்கிடையில் நீண்ட காலம் நெருங்கவில்லை. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று ஆதியாகமம் 1:1 சொல்கிறது. அவர் பூமியை முதன்முதலில் படைத்தபோது, அது உருவமற்ற, வெற்றிடமாக, இருள் சூழ்ந்ததாக இருந்தது என்பதை ஆதியாகமம் 1:2 நமக்குத் தெரிவிக்கிறது; அது முடிக்கப்படாதது மற்றும் மக்கள் வசிக்காததுமான நிலையைக் காண்பிக்கிறது. இப்படி உருவமற்ற, வெற்றிடமாக, இருள் சூழ்ந்ததாக இருந்த பூமியை தேவன் எவ்வாறு ஜீவனுள்ளதாய், அழகு மற்றும் நன்மை ஆகியவற்றால் நிரப்பினார் என்பதைத்தான் ஆதியாகமம் 1 விவரிக்கிறது.

English



முகப்பு பக்கம்

இடைவெளி கோட்பாடு என்றால் என்ன? ஆதியாகமம் 1:1 மற்றும் 1:2-க்கு இடையில் ஏதாவது நிகழ்ந்ததா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries