settings icon
share icon
கேள்வி

கடைசிக்கால தீர்க்கதரிசனத்தின் ஏதேனும் அம்சங்கள் நிறைவேறியுள்ளதா?

பதில்


வெளிப்படுத்தல் 4:1 "இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை" விவரிக்கும் வேதத்தின் ஒரு பகுதியை அறிமுகப்படுத்துகிறது. எவை அவற்றைப் பின்தொடருகிறதோ அவை "கடைசிக்காலத்தின்" தீர்க்கதரிசனங்கள் ஆகும். உபத்திரவம், அந்திக்கிறிஸ்துவின் தோற்றம் அல்லது பிற "கடைசிக்கால" நிகழ்வுகளை நாம் இன்னும் அடையவில்லை. நாம் பார்ப்பது அந்த நிகழ்வுகளுக்கான "ஆயத்தம்" ஆகும்.

கடைசி நாட்களுக்கு முன்பாக பல காரியங்களால் உண்டாயிருக்கும் என்று இயேசு கூறினார்: “அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்” (மத்தேயு 24:5-8). இன்றைய செய்திகள் கள்ள மதங்கள், போர் மற்றும் இயற்கை பேரழிவுகள் நிறைந்தவை. உபத்திரவ காலத்தின் நிகழ்வுகள் இயேசு முன்னறிவித்த அனைத்தையும் உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம் (வெளிப்படுத்துதல் 6:1-8); நிகழ்கால நிகழ்வுகள் எதிர்காலத்தில் அதிக உபத்திரவத்திற்கான கட்டமைப்பு என்று தெரிகிறது.

கடைசி நாட்களில் தவறான போதனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என்று பவுல் எச்சரித்தார். "பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்" (1 தீமோத்தேயு 4:1). கடைசி நாட்கள் "கொடியகாலங்கள்" என விவரிக்கப்பட்டுள்ளன, மனிதனின் தீய குணங்கள் அதிகரித்து வருவதால் மற்றும் "சத்தியத்தை தீவிரமாக எதிர்க்கும்" ஜனங்கள் (2 தீமோத்தேயு 3:1-9; மேலும் 2 தெசலோனிக்கேயர் 2:3). கடைசி நாட்களில் மக்கள் இருக்கும் காரியங்களின் பட்டியல்— மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்--(2 தீமோத்தேயு 3:1-2) நமது நவீன யுகத்திற்கு இது மிகச்சரியாகப் பொருந்துகிறது.

விசுவாசத் துரோகம் பற்றிய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுகின்றன என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்க முடியுமா? நமது 21 ஆம் நூற்றாண்டு உலகமானது தார்மீக சார்பியல் தத்துவத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது, இது சபையையும் கூட கறைபடுத்தும் ஒரு தத்துவம் ஆகும். உதாரணமாக, பல சபை பிரிவினர் திருமணத்தை ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் மட்டும் நடத்துவது கடினமாகிறது, இன்று பல மதத் தலைவர்கள் ஓரினச்சேர்க்கையை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். நவீன சபையின் மிகவும் கவர்ச்சிகரமான "சத்தியத்திற்கான" தேடலுக்கு வேதாகமம் அடிபணிந்துள்ளது. இவை உண்மையில் ஆவிக்குரிய ரீதியாக "கொடியகாலங்கள்".

ஐரோப்பிய யூனியனின் உருவாக்கம்—மற்றும் மீண்டும் ஒன்றிணைந்த ஜெர்மனி நமக்கு உள்ளது என்பது வேதாகமத் தீர்க்கதரிசனத்தின் வெளிச்சத்தில் மிகவும் சுவாரஸ்யமானது. தானியேல் 2:42 இல் உள்ள "பத்து கால்விரல்கள்" மற்றும் தானியேல் 7:20 மற்றும் வெளிப்படுத்தல் 13:1 இன் பத்து-கொம்புகள் கொண்ட மிருகங்கள் கிறிஸ்து திரும்ப வருவதற்கு முன்பு அதிகாரத்தை வைத்திருக்கும் "புத்துயிர் பெற்ற" ரோம சாம்ராஜ்யத்தைக் குறித்த குறிப்புகள் ஆகும். துல்லியமான அரசியல் அமைப்பு இன்னும் உருவாகவில்லை என்றாலும், துண்டுகள் அதன் சரியான இடத்தில் விழுந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

1948 ஆம் ஆண்டில், இஸ்ரவேல் ஒரு சுய ஆட்சியைக் கொண்ட அரசாக அங்கீகரிக்கப்பட்டது, மேலும் இது வேதாகம மாணவர்களுக்கு அதிக ஆவல் மற்றும் விருப்பத்தைக் கொண்டுவந்தது. தேவன் ஆபிரகாமுக்கு அவரது சந்ததியினர் கானானை "நித்திய சுதந்திரமாக" கொண்டிருப்பதாக வாக்களித்தார் (ஆதியாகமம் 17:8), மற்றும் எசேக்கியேல் இஸ்ரவேலின் சரீர மற்றும் ஆவிக்குரிய உயிரடைதலை முன்னறிவித்தார் (எசேக்கியேல் 37). இஸ்ரவேல் அதன் சொந்த தேசத்தில் ஒரு தேசமாக இருப்பது கடைசிக்கால தீர்க்கதரிசனத்தின் வெளிச்சத்தில் முகவும் முக்கியமானது, ஏனெனில் இஸ்ரவேலரின் எதிர்கால சாஸ்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது (தானியேல் 10:14; 11:41; வெளிப்படுத்துதல் 11:8).

மேலே குறிப்பிடப்பட்ட காரியங்கள் குறிப்பிட்ட கடைசிக்கால தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் என்பதற்கு எந்த வேதாகம ஆதாரமும் இல்லை என்றாலும், இந்த நிகழ்வுகளில் எத்தனை வேதாகமம் விவரிக்கிறது என்பதை நாம் பார்க்க முடியும். எப்படியிருந்தாலும், இந்த அடையாளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் கர்த்தருடைய நாள்—அவருடையவர்களுக்காகத் திரும்புவது—இரவில் ஒரு திருடன் வருகிற விதமாய் இருக்கும் என்று இயேசு சொன்னார் (2 பேதுரு 3:10), அது எதிர்பாராத மற்றும் அறிவிக்கப்படாததாக இருக்கும். "ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்" (லூக்கா 21:36).

English



முகப்பு பக்கம்

கடைசிக்கால தீர்க்கதரிசனத்தின் ஏதேனும் அம்சங்கள் நிறைவேறியுள்ளதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries