settings icon
share icon
கேள்வி

பரிசுத்த ஆவியின் கனி என்றால் என்ன?

பதில்


கலாத்தியர் 5: 22-23 சொல்கிறது, “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” பரிசுத்த ஆவியின் கனியானது ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பதற்கான விளைவாகும். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அவரை ஏற்றுக்கொண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்படுகிறார் என்பதை வேதாகமம் தெளிவுபடுத்துகிறது (ரோமர் 8:9; 1 கொரிந்தியர் 12:13; எபேசியர் 1:13-14). ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் வரும் பரிசுத்த ஆவியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, அந்த வாழ்க்கையை மாற்றியமைப்பதாகும். பரிசுத்த ஆவியானவரின் வேலை நம்மை கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றி, அவரைப் போல நாம் அதிகமதிகமாய் இருக்கும்படி செய்கிறார்.

பரிசுத்த ஆவியின் கனி கலாத்தியர் 5:19-21-ல் கூறப்பட்டுள்ள பாவம் நிறைந்த மாம்சத்தின் செயல்களுக்கு நேர்மாறாக இருக்கிறது, “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” இந்த பத்தியானது அனைத்து ஜனங்களையும் வெவ்வேறு அளவுகளில், அவர்கள் கிறிஸ்துவை அறியாமல் இருப்பதினால், அவர்கள் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தின் கீழ் இல்லாமலிருக்கிறார்கள் என்று விவரிக்கிறது. நம் பாவ சுபாவம் நம் பாவ இயல்பை பிரதிபலிக்கும் சில வகையான கனியை உற்பத்தி செய்கிறது, பரிசுத்த ஆவியானவர் தன் இயல்பை பிரதிபலிக்கும் கனி வகைகளை உற்பத்தி செய்கிறார்.

கிரிஸ்துவ வாழ்க்கை என்பது கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்ட புதிய இயல்புக்கு எதிராக பாவ மாம்சத்தோடு செய்யும் ஒரு யுத்தம் ஆகும் (2 கொரிந்தியர் 5:17). விழுந்துபோன மனிதர்களாகிய நாம் பாவம் நிறைந்த காரியங்களை விரும்புகிற ஒரு சரீரத்தில் இன்னமும் சிக்கிக்கொண்டு இருக்கிறோம் (ரோமர் 7:14-25). கிறிஸ்தவர்கள் என்கிற நிலையில், நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மால் அவரது கனியைக் கொணர்வதோடு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் பாவங்களின் இயற்கை ஆற்றலையும் பெற்றுக்கொள்கிறோம் (2 கொரிந்தியர் 5:17; பிலிப்பியர் 4:13). பரிசுத்த ஆவியின் கனியால் எப்பொழுதும் ஒரு கிறிஸ்தவன் வெற்றிகொள்ள மாட்டார். இது கிறிஸ்துவர்கள் வாழ்க்கையில் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும், இருப்பினும், படிப்படியாக பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் இன்னும் அவரது கனியை உற்பத்தி செய்து மற்றும் அனுமதிக்க பரிசுத்த ஆவியானவர் எதிர்க்கும் பாவம் ஆசைகளை ஜெயிக்க அனுமதிக்க வேண்டும். பரிசுத்த ஆவியின் உதவியோடு, நம் வாழ்வில் தேவன் வெளிப்படுத்த விரும்புகிற ஆவியின் கனி சாத்தியமாகும்!

English



முகப்பு பக்கம்

பரிசுத்த ஆவியின் கனி என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries