settings icon
share icon
கேள்வி

நான்கு குதிரை வீரர்களின் நான்கு குதிரை வீரர்களின் திருவெளிப்பாடு என்ன?

பதில்


வெளிப்படுத்துதலின் நான்கு குதிரைவீரர்கள் வெளி. 6-ஆம் அதிகாரத்தில் 1-8 வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளனர். நான்கு குதிரை வீரர்களும் இறுதியில் நடைபெறும் வெவ்வேறு நிகழ்வுகளின் உருவக விளக்கங்கள் ஆகும். வெளி. 6:2-ல் முதலாம் குதிரைவீரனின் வெளிப்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது: “நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.” இந்த முதல் குதிரை வீரர் எதிர்க்கிறிஸ்துவைக் குறிக்கிறான், அவனை எதிர்க்கிற அனைவரையும் வெல்லத்தக்க அதிகாரம் அவனுக்கு அளிக்கப்படும். எதிர்க்கிறிஸ்து உண்மையான கிறிஸ்துவின் போலியான பின்பற்றுபவனாகும், இவனும் வெள்ளைக்குதிரை மீது ஏறி வருவான் (வெளி. 19:11-16).

வெளி. 6:4-ல் இரண்டாம் குதிரைவீரன் வெளிப்படுகிறதைக் குறிப்பிடுகிறது, “அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.” இரண்டாம் குதிரை வீரர் இறுதி காலத்தில் சம்பவிக்கப்போகிற கொடூரமான யுத்தத்தைக் குறிக்கிறது. மூன்றாம் குதிரைவீரர் வெளிப்படுத்துதல் 6:5-6 ல் விவரிக்கப்பட்டுள்ளது, “... நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.” மூன்றாவதாக வெளிப்படுகிற குதிரைவீரர், இரண்டாவது குதிரை வீரரின் யுத்தத்தின் விளைவாக, நிகழும் பெரும் பஞ்சத்தை குறிக்கிறது.

வெளி. 6:8-ல் நான்காவது குதிரைவீரன் குறிப்பிடப்படுகிறார்: “நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.” வெளிப்படுகிற நான்காவது குதிரை வீரன் மரணம் மற்றும் பேரழிவு ஆகியவற்றின் அடையாளமாக உள்ளது. முந்தைய குதிரை வீரர்களின் கலவையாக இது தெரிகிறது. வெளிப்பாட்டின் நான்காவது குதிரை வீரர் மேலும் இன்னும் அதிகமாக யுத்தங்களும் கொடூரமான பஞ்சங்களும், கொடூரமான வாதாடுதல்களும் நோய்களும் கொண்டு வருவான். மிக ஆச்சரியமான ஒன்று அல்லது ஒருவேளை திகிலூட்டும் விஷயம் என்னவென்றால், வெளிப்படுதலின் நான்கு குதிரை வீரர்கள் பின்னர் உபத்திரவ காலத்தில் வரவிருக்கிற மோசமான நியாயத்தீர்ப்புகள் (வெளி. 8:9 மற்றும் 16) "முன்னோடிகள்” மட்டுமே.

English



முகப்பு பக்கம்

நான்கு குதிரை வீரர்களின் நான்கு குதிரை வீரர்களின் திருவெளிப்பாடு என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries