எனக்கு விரோதமாய் பாவம் செய்தவர்களை நான் எப்படி மன்னிக்க முடியும்?


கேள்வி: எனக்கு விரோதமாய் பாவம் செய்தவர்களை நான் எப்படி மன்னிக்க முடியும்?

பதில்:
வாழ்கையின் எந்த கட்டதிலாவது, எல்லாரும் மற்றவர்களால் புண்படுத்தப்பட்டிருக்கிறார்கள், வருத்தப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், மற்றும் தவறாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். இவைகள் நேரிடும்போது கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்? வேதத்தின்படி, நாம் மன்னிக்க வேண்டும். எபேசியர் 4:32 சொல்லுகிறது,“ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” அப்படியே கொலோசியர் 3:13 கூறுகிறது என்னவென்றால், “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” கிறிஸ்து நம்மை மன்னித்தது போலவே நாமும் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் என்று இவ்விரண்டு வேத வசனங்களும் சொல்லுகிறது. ஏன் நாம் மன்னிக்க வேண்டும்? நாம் மன்னிக்கப்பட்டவர்கள் அதனால் நாம் மன்னிக்க வேண்டும்!

நம்மிடம் உருக்கத்தோடும் உண்மையான மனந்திரும்புதலோடும் மன்ணிப்பு கேட்கிறவர்களை மன்னிப்பது நமக்கு சுலபமானது. ஆனால், எந்த நிபந்தனையும் இல்லாமல் நமக்கு விரோதமாய் பாவம் செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. ஒருவரை உண்மையாக மன்னிக்காமல் இருப்பது நமக்குள் இருக்கும் எருச்சலை, கசப்பை, மற்றும் கோபத்தை வெளிப்படுத்துகிறது—இவை ஒரு உண்மையான கிறிஸ்தவனின் குணங்கள் அல்ல. பரமண்டல ஜெபத்தை செய்யும்போது, பிறரின் குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களையும் மன்னியும் என்று சொல்லுகிறோம் (மத்தேயு 6:12). இயேசு சொன்னார், “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” (மத்தேயு 6:12). மன்ணிப்பை பற்றி சொல்லப்பட்ட வேத வசனங்களின் வெளிச்சத்தில் பார்க்கும்போது, மத்தேயு 6:14-15 சொல்லுகிறது என்னவென்றால் மற்றவர்களை மன்னிக்காதவர்கள் தேவனின் மன்ணிப்பை உன்மையாக அனுபவிக்க வில்லை என்பதாகும்.

நாம் தேவனின் ஒரு கற்பனையை கீழ்ப்படியாமல் போகும்போது, நாம் அவருக்கு விரோதமாய் பாவம் செய்கிறோம். நாம் ஒரு நபருக்கு தீங்கு செய்யும்போது, அந்த நபருக்கு விரோதமாய் மாத்திரம் அல்ல, தேவனுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறோம். தேவன் எந்த அளவிற்கு நமது எல்லா அக்கிரமங்களையும் மன்னித்திருக்கிறார் என்று என்னும்போது, மற்றவர்களுக்கு அதே கிருபையை தராமல் விலக்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று உணருகிறோம். நம்மை தேவன் இவ்வளவாய் மன்னிதிருக்க, நாம் எப்படி மற்றவர்களை சிறிய அளவில் மன்னிக்காமல் இருக்கமுடியும்? மத்தேயு 18:23-35-ல் சொல்லப்பட்ட உவமை, இந்த சத்தியத்தினுடைய வல்லமையான எடுத்துகாட்டாக இருக்கிறது. நாம் தேவனிடம் மண்னிப்பை கேட்கும்போது, அவர் அதை இலவசமாய் நமக்கு அளிக்கிறார் (1யோவான் 1:9). தேவனின் மன்னிப்புக்கு எப்படி அளவில்லையோ, அதே போல நாமும் அளவில்லாமல் மன்னிக்க வேண்டும் (லூக்கா 17:3-4).

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
எனக்கு விரோதமாய் பாவம் செய்தவர்களை நான் எப்படி மன்னிக்க முடியும்?