settings icon
share icon
கேள்வி

நான் இரட்சிக்கப்பட்டு, என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டதானால், ஏன் தொடர்ந்து பாவம் செய்யக்கூடாது?

பதில்


அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 6:1-2-ல் இதே போன்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார், “ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?” ஒரு நபர் இரட்சிப்பிற்காக "இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து", பின்னர் அவர் / அவள் முன்பு வாழ்ந்ததைப் போலவே தொடர்ந்து வாழலாம் என்ற கருத்து வேதாகமத்திற்கு முற்றிலும் அந்நியமானதாகும். கிறிஸ்தவ விசுவாசிகள் புதிய சிருஷ்டிகள் (2 கொரிந்தியர் 5:17) ஆகும். பரிசுத்த ஆவியானவர் மாம்சத்தின் செயல்களை உருவாக்குவதிலிருந்து (கலாத்தியர் 5:19-21) நம்மை விலக்கி ஆவியின் கனியை உருவாக்குவதற்கு நம்மை மாற்றுகிறார் (கலாத்தியர் 5:22-23). கிறிஸ்தவ வாழ்க்கை மாற்றப்பட்ட ஒரு வாழ்க்கை காரணம் கிறிஸ்தவன் மாற்றப்பட்டவனாக இருக்கிறான்.

கிறிஸ்தவத்தை மற்ற எல்லா மதங்களிலிருந்தும் வேறுபடுத்துவது எதுவென்றால், கிறிஸ்தவ மதம் தெய்வீக சாதனையாக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் நமக்குச் செய்ததை அடிப்படையாகக் கொண்டது ஆகும். ஒவ்வொரு உலக மதமும் தேவனின் தயவையும் மன்னிப்பையும் சம்பாதிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்ட மனித சாதனையாகும். தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் சம்பாதிக்க நாம் சில காரியங்களைச் செய்ய வேண்டும், வேறு சில காரியங்களைச் செய்வதை நிறுத்த வேண்டும் என்று ஒவ்வொரு மதமும் கற்பிக்கிறது. கிறிஸ்தவமோ, கிறிஸ்துவின் மீதான நம்பிக்கை, கிறிஸ்து நமக்காகச் செய்தவற்றின் காரணமாக நாம் சில காரியங்களைச் செய்கிறோம், சில காரியங்களைச் செய்வதை நிறுத்துகிறோம் என்று கற்பிக்கிறது.

பாவத்தின் தண்டனையிலிருந்து, நரகத்தின் நித்தியத்திலிருந்து விடுவிக்கப்பட்ட எவரும், அவரை நரகத்திற்கான பாதையில் முதன்முதலில் வைத்திருந்த அதே வாழ்க்கைக்கு எப்படி திரும்பப் போகமுடியும்? பாவத்தின் தீட்டுப்படுத்தலில் இருந்து தூய்மைப்படுத்தப்பட்ட எவரும், அதே மோசமான நிலைக்கு திரும்பிச் செல்ல விரும்புவது எப்படி? நம் சார்பாக இயேசு கிறிஸ்து என்ன செய்தார் என்பதை அறிந்த எவரும், அவர் முக்கியமல்ல என்பது போல் வாழ்வது எப்படி? நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்து எவ்வளவு துன்பப்பட்டார் என்பதை உணர்ந்த எவரும், அந்த துன்பங்கள் அர்த்தமற்றது போல் தொடர்ந்து பாவம் செய்வது எப்படி?

ரோமர் 6:11-15 வரையிலுள்ள வசனங்கள் இப்படியாக அறிவிக்கிறது, “அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே.”

உண்மையிலேயே மனந்திரும்பி மாற்றப்பட்டவர்களுக்கு, தொடர்ந்து பாவத்துடன் வாழ்வது என்பது தேர்ந்தெடுக்கும் ஒரு விருப்பமல்ல. நமது மாற்றம் முற்றிலும் புதிய சுபாவத்திற்கு காரணமாக அமைந்ததால், இனி பாவத்தில் வாழக்கூடாது என்பதே நமது விருப்பமாகும். ஆமாம், இரட்சிக்கப்பட்ட பிறகும் நாம் இன்னும் பாவம் செய்கிறோம், ஆனால் ஒரு காலத்தில் முன்பு செய்ததைப் போலவே அதில் நுழைவதற்கு பதிலாக, இப்போது நாம் அதை வெறுக்கிறோம், அதிலிருந்து விடுவிக்கப்பட விரும்புகிறோம். தொடர்ந்து பாவத்தில் வாழ்வதன் மூலம் நம் சார்பாக மரித்த கிறிஸ்துவின் தியாகத்தை "சாதகமாகப் பயன்படுத்துதல்" என்ற யோசனை சிந்திக்கவே முடியாதது ஆகும். கிறிஸ்துவுக்காக வாழ விருப்பமில்லாத கிறிஸ்தவர்கள், மாறாக, அவிசுவாசிகளிடமிருந்து தங்களைப் பிரித்தறிய முடியாத வாழ்க்கையை அவர்கள் காண்கிறார்கள் என்றால், அவர்கள் எப்போதாவது கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டார்களா என்பதை ஆராய வேண்டும். “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்” (2 கொரிந்தியர் 13:5).

English



முகப்பு பக்கம்

நான் இரட்சிக்கப்பட்டு, என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டதானால், ஏன் தொடர்ந்து பாவம் செய்யக்கூடாது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries