உங்கள் பணத்தை கையாளுவது பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?


கேள்வி: உங்கள் பணத்தை கையாளுவது பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?

பதில்:
பணம் கையாளுவதை பற்றி அநேக காரியங்களை வேதாகமம் சொல்கிறது. கடன் வாங்குவதற்கு விரோதமாக வேதாகமத்தில் பொதுவான ஆலோசனையை பார்க்கலாம். நீதிமொழிகள் 6:1-5; 20:16; 22:7, 26-27 (“ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்: கடன்வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை… கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களின் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே”).; செல்வத் திரட்சிக்கு எதிராக மீண்டும் மீண்டும் வேதாகமம் எச்சரிக்கிறது இதற்கு பதிலாக ஆவிக்குரிய செழிப்பை நாட நம்மை ஊக்குவிக்கிறது. நீதிமொழிகள் 28:20: “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்: ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.” மேலும் நீதிமொழிகள் 10:15; 11:4; 18:11; 23:5 வசனங்களை பார்க்கவும்.

நீதிமொழிகள் 6:6-11 சோம்பலை பற்றிய ஞானத்தையும் அதன் விளைவாக ஏற்படும் தவிர்க்க முடியாத செல்வத்தின் அழிவையும் பற்றி வாசிக்கிறோம். நாம் எறும்பினிடத்தில் போய் அது எப்படி தனக்கு ஆகாரத்தை சேர்த்துவைக்கிறது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆதாயமாக ஏதேனு செய்வதை விட்டுவிட்டு தூங்குவதற்கு எதிராகவும் இப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. மந்தன் சோம்பேறியாவான் அப்படிப்பட்டவர்கள் தூங்குவார்களே தவிர வேலை செய்ய மாட்டார்கள். நிச்சயமாய் அவர்களுடைய முடிவு வருமை மற்றும் இல்லாமையாக தான் இருக்கும். மற்றொரு புறம் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற மனஉறுதியுடன் இருப்பவர்களை பார்க்கலாம். பிரசங்கி 5:10ன் படி அப்படிபட்டவர்கள் பணத்தினால் திருப்தியடைவதில்லை தொடர்ந்து மேலும் மேலும் சாம்பதிக்கவே நினைப்பான். 1தீமோத்தேயு 6:6-11 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று எச்சரிக்கிறது.

செல்வத்தை நாம் திரளாக்க விரும்பி சேர்ப்பதை வேதாகமம் முக்கியபடுத்தவில்லை. வாங்குவது அல்ல கொடுப்பதே வேதாகமத்தின் கோட்பாடு ஆகும். “இதை நினைவுகூறுங்கள்: சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2கொரிந்தியர் 9:6-7). தேவன் நமக்கு கொடுத்தவைகளுள் நாமும் நல்ல உக்கிராணக்காரனாக இருக்க உற்சாகப்படுத்தப்படுகிறோம். லூக்கா 16:1-13ல் நேர்மையற்ற உக்கிராணக்காரனை குறித்த உவமை தவறான உக்கிராணக்காரனுக்கு எச்சரிக்கையாக இயேசுகிறிஸ்து சொன்னார். இக்கதையின் ஒழுக்க நெறி “அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?” என்பதே (வசனம் 11). நமக்கு நம்முடைய சொந்த வீட்டாரை விசாரிக்க வேண்டிய பொறுப்புள்ளது, 1 தீமோத்தேயு 5:8 நினைவூட்டுகிறது “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.”

சுருக்கமாக பணத்தை கையாளுவது பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது? இதனுடை பதிலை ஞானம் என்று ஒரே வரியில் சுருக்கமாக சொல்லலாம். நம்முடைய பணத்தை ஞானமாக கையாள வேண்டும். நாம் பணத்தை சேமிக்க வேண்டும் ஆனால் குவித்துக்கொள்ள கூடாது. விவேகம் மற்றும் கட்டுபாடோடு பணத்தை செலவு செய்ய வேண்டும். நாம் தேவனுக்கு சந்தோஷமாக தியாகமாக திரும்ப கொடுக்க வேண்டும். நாம் நம்முடைய பணத்தை பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் ஆனால் அதை விவேகமாக மற்றும் தேவ ஆவியினுடைய வழிநடத்துதலோடு செய்ய வேண்டும். ஏழையாக இருப்பது தவறல்ல ஆனால் பணத்தை அனாவசியமாக செலவிடுவது தவறாகும். பணத்தை கையாள்வதில் ஞானமாய் இருக்க வேண்டும் என்பதே வேதாகமத்தின் சீராண கருத்து.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
உங்கள் பணத்தை கையாளுவது பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?