settings icon
share icon
கேள்வி

ஒரு விசுவாசி பரிசுத்த ஆவியானவரை உணர முடியுமா?

பதில்


பரிசுத்த ஆவியின் சில ஊழியங்கள் பாவத்தை கண்டித்து உணர்த்துதல், ஆறுதல் அளித்தல், மற்றும் அதிகாரமளித்தல் போன்ற ஒரு உணர்வை உள்ளடக்கியிருக்கலாம் என்றாலும், பரிசுத்த ஆவியானவரோடு நமக்குள்ள உறவானது நாம் எவ்வாறு அல்லது எப்படி அவரை உணருகிறோம் என்பதைப் பொறுத்ததல்ல என்பதை வேதாகமம் மிகதெளிவாக நமக்கு அறிவுறுத்துகிறது. ஒவ்வொரு மறுபிறப்படைந்த விசுவாசிக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் வசிக்கிறார். தேற்றரவாளர் வரும்போது நம்முடனும் நமக்குள்ளும் இருப்பார் என்று நமக்கு இயேசு கூறுகிறார். “நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்” (யோவான் 14:16-17). வேறு வார்த்தைகளில் சொன்னால், இயேசு தம்மைபோல ஒருத்தரை நம்முடனும் நமக்குள்ளும் இருக்கும்படியாக அனுப்புகிறார்.

பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இருப்பதை அறிந்திருக்கிறோம், ஏனென்றால் அப்படியாக தேவனுடைய வார்த்தை நமக்கு சொல்லுகிறது. ஒவ்வொரு மறுபிறப்பு அடைந்த விசுவாசியும் பரிசுத்த ஆவியியை தனக்குள் வசிகும்படி பெற்றிருக்கிறார், ஆனால் எல்லா விசுவாசியும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவதில்லை, ஒரு முற்றிலும் மாறுபட்ட வித்தியாசம் உள்ளது. நாம் பரிசுத்த ஆவியானவரை நமக்குள் வாழும்படியாக கொண்டிருக்கிற போதிலும், நம்முடைய மாம்சத்தில் நாம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருப்போமானால், நாம் பரிசுத்த ஆவியின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்று அர்த்தப்படும். இந்த சத்தியத்தை அப்போஸ்தலனாகிய பவுல் நாம் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிற வகையில் ஒரு உவமையை அவர் பயன்படுத்துகிறார். “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து” (எபேசியர் 5:18). அநேகர் இந்த வசனத்தை வாசித்து, அப்போஸ்தலனாகிய பவுல் மதுவை எதிர்த்து பேசுகிறார் என்று அர்த்தப்படுத்துகிறார்கள். இருப்பினும், இந்த பத்தியின் பின்னணி மற்றும் சந்தர்ப்பம் ஆவியால் நிரப்பப்பட்ட விசுவாசியின் நடை மற்றும் ஆவியினால் நிறைந்த மனிதனுக்குள்ள யுத்தம் ஆகும். எனவே, அதிகமாக மது குடிப்பது பற்றியில்லாமல் இன்னும் ஏதோ ஒரு எச்சரிக்கை இங்கே இருக்கிறது.

மக்கள் அதிகமாக மதுவைக் குடித்துவிட்டு, சில குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறார்கள்: அவர்கள் விகாரமானவர்களாகி விடுகிறார்கள், அவர்களின் பேச்சு மெலிந்துவிடுகிறது, மற்றும் அவர்களுடைய தீர்ப்பு குறைபாடுடையதாக இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இங்கே ஒரு ஒப்பீடு அமைத்துள்ளார். அதிக மதுவினால் கட்டுப்படுத்தப்படுகிற ஒருவரை அடையாளம் காண்பிக்கும் சில குணாதிசயங்கள் இருப்பதால், பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படும் ஒருவரை அடையாளம் காண்பிக்கும் சில பண்புகளும் இருக்க வேண்டும். ஆவியின் கனியைப் பற்றி கலாத்தியர் 5:22-24-ல் நாம் வாசிக்கிறோம். இது பரிசுத்த ஆவியானவரின் கனியாகும், அது பரிசுத்த ஆவியினால் அவருடைய கட்டுப்பாட்டின் கீழுள்ள மறுபிறப்பு அடைந்த விசுவாசியால் வெளிப்படுத்தப்படுகிறது.

எபேசியர் 5:18-ல் உள்ள வினைச்சொல், பரிசுத்த ஆவியானவரால் தொடர்ச்சியாக "நிரப்பப்படுகிற" செயலைக் குறிக்கிறதாக இருக்கிறது. இது ஒரு புத்திமதி என்பதால், பரிசுத்த ஆவியால் நிரப்பப்படாமலும் கட்டுப்படுத்தப்படாமலும் இருக்கலாம் என்பதையும் காண்பிக்கிறது. மீதமுள்ள எபேசியர் 5-ஆம் அதிகாரத்தில், நமக்கு ஒரு ஆவியால் நிரப்பப்பட்ட விசுவாசியின் பண்புகளை அளிக்கிறது. “சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்” (எபேசியர் 5:19-21).

நாம் ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறோம், ஏனெனில் நாம் உணர்கிறோம் என்பதாலல்ல, ஆனால் இது கிறிஸ்தவனின் பாக்கியம் மற்றும் உரிமையாகும். ஆவியால் நிரப்பப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்படுவது கர்த்தருக்கு கீழ்ப்படிவதன் விளைவாகும். இது கிருபையின் ஒரு பரிசு, வெறுமனே ஒரு உணர்ச்சி/உணர்வு அல்ல. உணர்ச்சிகள் நம்மை ஏமாற்றும், மற்றும் நாம் முழுவதும் மாம்சத்தை சார்ந்து இருந்து முற்றிலும் பரிசுத்த ஆவியினால் அல்லாமல் ஒரு உணர்ச்சி வேகத்துடன் நம்மால் வேலை செய்ய முடியும். “பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்” (கலாத்தியர் 5:16, 25).

இதுவரையில் சொன்ன காரிய்ந்களின்படி, நாம் ஆவியானவரின் பிரசன்னம் மற்றும் ஆவியின் வல்லமை ஆகியவற்றால் அதிகமாக ஆட்கொண்டு இருக்க முடியும் என்பதை நாம் மறுக்க முடியாது, இது பெரும்பாலும் ஒரு உணர்ச்சி அனுபவம் ஆகும். அது நடக்கும் போது, அது வேறு ஒரு பெரும் மகிழ்ச்சியாகும். உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வந்த போது, “தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்” (2 சாமுவேல் 6:14). பரிசுத்த ஆவியின் மகிழ்ச்சியை அனுபவிப்பது தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவருடைய கிருபையினால் ஆசீர்வதிக்கப்படுவதாகும். எனவே, முற்றிலும், பரிசுத்த ஆவியின் ஊழியங்கள் நம் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் உட்படுத்துகின்றன. அதே சமயத்தில், பரிசுத்த ஆவியானவரை நாம் எப்படி உணருகிறோம் என்பதன் அடிப்படையாகக் கொண்டு நாம் அவரைப் பெற்றிருக்கிறோம் என்பதல்ல.

English



முகப்பு பக்கம்

ஒரு விசுவாசி பரிசுத்த ஆவியானவரை உணர முடியுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries