பரலோகத்தில் நாம் நண்பர்கள், உறவினர்களை பார்க்கவும் அறியவும் முடியுமா?


கேள்வி: பரலோகத்தில் நாம் நண்பர்கள், உறவினர்களை பார்க்கவும் அறியவும் முடியுமா?

பதில்:
பரலோகத்தில் சென்றவுடனே செய்ய வேண்டிய முதலாவது காரியம் தங்களை விட்டு பிரிந்து போன நண்பர்கள் உறவினர்களை பார்பது தான் என்று அநேகர் விரும்புகிறார்கள். நித்தியத்தில் நாம் நண்பர்கள் உறவினர்களை பார்க்கவும் அறிந்துகொள்ளவும் அதிக நேரம் நமக்கு இருக்கும். ஆனால், பரலோகத்தில் அது நமது முக்கிய நோக்கமானது அல்ல. நாம் தேவனை ஆராதிப்பதிலும் பரலோகத்தின் அதிசயங்களை அனுபவிப்பதிலும் அதிக நேரத்தை செலுத்துவோம். நாம் நேசிப்பவர்களோடு மீண்டும் இணையும்போது, நாம் தேவனின் கிருபையையும் மகிமையையும், அவரின் ஆச்சரியமான அன்பையும், மகத்தான செயல்களையும் குறித்து பேசுவோம். நாம் மற்ற விசுவாசிகளோடு, குறிப்பாக நாம் நேசிபபவர்களோடு, தேவனை துதித்து ஆராதிக்கிறபடியினால் நாம் அதிக சந்தோஷப்படுவோம். மருவாழ்வில் நாம் ஜனங்களை அடையாலம் கண்டுபிடிப்போமா இல்லையா என்பதை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?

"எந்தொரில்" குறி சொல்லுகிற அந்த ஸ்திரீ சாமுவேலை மரித்தோரில் இருந்து எழுப்பி வரவைத்தபோது சவுல் அவரை அடையாலம் கண்டுகொண்டான் (1 சாமுவேல் 28:8-17). தாவீதின் மகன் மரித்தபோது அவன் சொல்லுகிறான், “நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.” (2 சாமுவேல் 12:23). தாவீதின் மகன் குழந்தையாய் இருந்தபோதே மரித்த போதிலும்,தாவீது அவன் மகனை பரலோகத்தில் அடையாலம் கண்டுபிடிப்பான் என்று நம்பினான். லூக்கா 16:19-31-ல், மரித்த பிறகும் கூட ஆபிரகாம், லாசரு, மற்றும் ஐஸ்வரியவானின் அடையாலம் கண்டு கொள்ள முடிந்தது என்று பார்க்கிறோம். மறுரூப மலையில், மோசேயும் எலியாவையும் அடையாலம் கண்டு கொள்ள முடிந்தது (மத்தேயு 17:3-4). மரித்த பிறகும் கூட மனிதர்களை அடையாலம் கண்டு கொள்ள முடியும் என்று இந்த வேத எடுத்துக்காட்டுகள் காண்பிக்கிறது.

நாம் பரலோகத்தில் சேரும்போது, இயேசுவை “போலவே நாமும் இருப்போம்; அவர் இருக்கிறவன்னமாகவே அவரை காண்போம்” (1 யோவான் 3:2) என்று வேதம் சொல்லுகிறது. நமது பூமிக்குரிய சரீரங்கள் முதல் மனிதன் ஆதாமை போல் இருப்பதுபோல, நமது உயிர்த்தெழபட்ட சரீரங்கள் கிரிஸ்துவை போல இருக்கும் (1 கொரிந்தியர் 15:47). “மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்” (1 கொரிந்தியர் 15:49, 53). உயிர்த்தெழுந்த பிறகு, இயேசுவை அநேகர் அடயாலம் கண்டு கொண்டார்கள் (யோவான் 20:16, 20; 21:12; 1 கொரிந்தியர் 15:4-7). மகிமையடைந்த சரீரத்தில் இருந்த இயேசுவை அடையாலம் கண்டு கொள்ள முடிந்ததென்றால், நாமும் மகிமைபடுத்தபட்ட சரீரத்தில் இருக்கும்போதே அடையாலம் கண்டு கொள்ளபடுவோம். நாம் நேசிப்பவர்களை பரலோகத்தில் பார்போம் என்பது ஒரு மகிமையான காரியமாய் இருந்தாலும், பரலோகம் நம்மை பற்றி இருப்பதை விட அதிகமாய் தேவனை பற்றியதாகும். நாம் நேசிப்பவர்களோடு மீண்டும் இணைக்கபட்டு, அவர்களோடு நித்தியமாய் தேவனை ஆராதிப்போம் என்பது எவ்வளவு மகிழ்ச்சியானது.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
பரலோகத்தில் நாம் நண்பர்கள், உறவினர்களை பார்க்கவும் அறியவும் முடியுமா?