settings icon
share icon
கேள்வி

தேவன் மற்றும் அறிவியல் மீது வைக்கும் விசுவாசம் முரண்பாடானதா?

பதில்


அறிவியல் என்பது நிகழ்வுகளை கவனித்தல், அடையாளப்படுத்துதல், விளக்குதல், சோதனையின் கண்டுபிடிப்பு நிகழ்வுகளின் தத்துவ விளக்கம் என வரையறுக்கப்படுகின்றன. அறிவியல் நமக்கு இந்த இயற்கையான உலகத்தை சரியாக புரிந்துகொள்ள உதவுகிறது. அறிவியல் என்பது கண்கானிப்பதன் மூலம் ஞானத்தை தேடுதல் ஆகும். மனிதனுடைய தர்க்கம் மற்றும் கற்பனையை சென்றடைந்ததே அறிவியலின் வளர்ச்சியாகும். எனினும் அறிவியல் மீதான கிறிஸ்தவர்களின் விசுவாசம் தேவனிடத்தில் உள்ள விசுவாசத்திற்கு இணையாக இருக்கக்கூடாது. கிறிஸ்தவர்களாகிய நாம் எது நிறைவானது மற்றும் எது நிறைவற்றது என்பதை அறிந்திருக்கும் பட்சத்தில் நமக்கு தேவன் மீது விசுவாசமும் அறிவியலின் மீது மதிப்பும் இருக்கலாம்.

நாம் தேவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை விசுவாசத்தின் நம்பிக்கையாக இருக்கிறது. இரட்சிப்புக்காக அவருடைய குமாரன் மீது, போதனைக்காக அவருடைய வார்த்தையின் மீது, வழிநடத்துதலுக்காக அவருடைய பரிசுத்த ஆவியானவரின் மீது நமக்கு விசுவாசம் இருக்கிறது. நாம் நம்முடைய விசுவாசத்தை பூரணமான, சர்வ வல்லமையுள்ள, சர்வ வியாவியான சிருஷ்டிப்பின் தேவன் மீது வைத்திருப்பதால் நம்முடைய விசுவாசம் முழுமையாக இருக்கவேண்டும். அறிவியல் மீது நமது நம்பிக்கை அறிவுசார்ந்ததாக மட்டும்தான் இருக்க வேண்டுமே தவிர அதற்கு மேலல்ல. அறிவியலால் பெரிய காரியங்களை செய்ய முடியும் அதுபோல அதனால் தவறுகளும் நிகலும் என்பதை நாம் யூகிக்க முடியும். நாம் அறிவியலின் மீது நமது நம்பிக்கையை வைப்போமானல் நாம் நிறைவற்ற, பாவமான, குறைவான, நிறந்தரமில்லாத மனிதனை சார்ந்திருக்கிறோம் என்று அர்த்தமாகிவிடும். பூமியின் வடிவம், விமானத்தை இயக்குதல், தடுப்பூசிகள், இரத்தத்தை மாற்றுதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றில் அறிவியல் தவறு செய்திருக்கிறதை சரித்திரம் நமக்கு காண்பிக்கிறது. தேவன் ஒருநாளும் தவறுவதில்லை.

பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதே உண்மை, ஆக நல்ல அறிவியலைப் பார்த்து கிறிஸ்தவர்கள் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. தேவன் இந்த உலகத்தைப் படைத்த விதங்களைப் பற்றிக் கற்றுக்கொள்கிற போது அது நம்மெல்லோருக்கும் ஆச்சரியமான சிருஷ்டிப்பை பாராட்ட உதவியாக இருக்கும். நமது அறிவை வளர்த்துக்கொள்ளுதல், நோய்கள், அறியாமை மற்றும் தவறுகளை எதிர்த்து நிற்க நமக்கு உதவுகிறது. எனினும் விஞ்ஞானிகள் தங்கள் நம்பிக்கையை சிருஷ்டிப்பின் தேவனுக்கு மேலாக மனிதனின் தர்க்க சாஸ்திரத்தில் மீது வைக்கும் போது அது மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது. இப்படிப்பட்ட நபர்கள் மதத்திற்கு தங்களை அர்ப்பணித்த நபர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. அவர்கள் தங்களுடைய விசுவாசத்தை மனிதனிடமிருந்து தேர்ந்தெடுத்திருக்கின்றனர் மற்றும் அந்த விசுவாசத்தை பாதுகாக்க உண்மைகளை கண்டறிய முற்படுகின்றனர்.

இன்னும் தேவனை விசுவாசிக்காத அதேநிலையில் மிகவும் அறிவுப்பூர்வமான விஞ்ஞானிகள் இந்த உலகத்தை தங்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளுகிறார்கள். அவர்களின் அநேக கோட்பாடுகள் இறுதியாக நிரூபிக்கப்பட அல்லது மறுக்க பட முடியாதது போலவே அறிவியலினாலே தேவனையோ அல்லது வேதாகமத்தையோ நிரூபிக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். உண்மையான நடுநிலை ஒழுக்கை ஏற்படுத்த, உண்மையை மட்டுமே தேட அறிவியல் இருக்கிறதே தவிர அது மேம்பாட்டுக்கான செயல்திட்டத்திற்காக அல்ல.

தேவன் இருக்கிறார் என்பதற்கும் அவரின் செயல்பாடுகளுக்கும் அறிவியல் மிகுந்த ஆதரவைத் தருகிறது. சங்கீதம் 19:1 “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” என்று சொல்லுகிறது. நவீன அறிவியல் எவ்வளவு அதிகமாக இவ்வுலகத்தை பற்றி கண்டுபிடிக்கிறதோ அவ்வளவு அதிகம் நாம் சிருஷ்டிப்பை பற்றிய ஆதாரங்களை பெறுகிறோம். பெரும் சிக்கலான மற்றும் பிரதியெடுப்பு செய்யத்தக்கதான (ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்) மரபணு சோதனை, சிக்கலான மற்றும் பிணைந்திருக்கும் புவியியல் நியமங்கள், முழுமையான நல்லிணக்க நிலமைகள் மற்றும் பூமியின் வேதியல் இவையெல்லம் வேதாகமத்தின் கருத்துகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது. கிறிஸ்தவர்கள் உண்மையை நாடுகிற அறிவியலை தழுவ வேண்டும் ஆனால் மனிதனின் அறிவை தேவனுக்கு மேலாக வைக்கும் “அறிவியல் ஆசாரியர்களை” நாம் நிராகரிக்க வேண்டும்.

English



முகப்பு பக்கம்

தேவன் மற்றும் அறிவியல் மீது வைக்கும் விசுவாசம் முரண்பாடானதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries