கிறிஸ்தவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா? உடல் நலத்தை குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?


கேள்வி: கிறிஸ்தவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா? உடல் நலத்தை குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?

பதில்:
வாழ்க்கையில் பல காரியங்கள் இருப்பது போலவே உடல்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிலர் தங்களின் உடல் சார்ந்த காரியங்களை தவிர்ப்பதற்காகவே ஆவிக்குரிய காரியங்களில் தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர். பிறர் தங்களின் உடலின் அமைப்பிற்கும் உருவத்திற்கும் அதிக முக்கியதுவம் கொடுக்கின்றனர் அதனால் ஆவிக்குரிய வளர்ச்சியை மற்றும் முதிர்ச்சியை புறக்கணிக்கின்றனர். இவைகளில் எதுவுமே வேதாகமத்தின் சமநிலையை குறிக்கவில்லை. 1தீமோத்தேயு 4:8ல் வாசிக்கிறோம்: “சரீரமுயற்ச்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்கு பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது”. இந்த வசனம் உடல்பயிற்சியின் அவசியத்தை மறுக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். உடல்பயிற்சி விலை மதிப்பிற்குரியது ஆனால் முக்கியத்துவம் கொடுப்பதில் தெய்வீக சுபாவம் உடற்பயிற்சியை பார்க்கிலும் அதிக மதிப்புமிக்கது.

அப்போஸ்தலர் பவுல் உடற்பயிற்சியை, ஆவிக்குரிய உண்மையை தெளிவு படுத்தும் உதாரணமாக 1 கொரிந்தியர் 9:24-27ல் பயன்படுத்தியிருக்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கையை பந்தயத்தில் பரிசை பெறதக்க விதத்திலே ஒடுகிற பந்தயத்திற்கு ஒப்பாக பவுல் கூறுகிறார். ஆனால் நாம் எதிர்பார்க்கிற பரிசு அழிவில்;லாத மற்றும் மரையாத நித்திய கிரீடம் ஆகும். 2 தீமோத்தேயு 2:5ல் “மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்” என்று வாசிக்கிறோம். பவுல் மீண்டும் 2தீமோத்தேயு 4:7 ல் தடகள ஒப்புமையை பயன்படுத்துகிறார்: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.” இந்த வசனம் உடற்பயிற்ச்சியை முக்கிய படுத்தாவிட்டாலும் ஆவிக்குரிய உண்மைகளை போதிக்க தடகள வார்த்தைகளை பயன்படுத்தியது பவுலின் உடற்பயிற்சியை, போட்டியை குறித்த கருத்துகளை உண்மையாகவே நமக்கு வெளிச்சமிட்டுகாட்டுகிறது. நாம் மாம்சிகத்திற்குரியவர்களாகவும் மற்றும் ஆவிக்குரியவர்களாகவும் இருக்கிறோம். வேதாகமத்தின் அடிப்படையில் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் மிக முக்கியமானதாக இருக்கும் போது நாம் எதையாகிலும் ஒன்றை அதாவது ஆவிக்குரிய அல்லது மாம்சிக உடல் நலத்திற்குரிய அம்சங்களை புறக்கணிக்க வேண்டியது இருக்கிறது.

எனவே கிறிஸ்தவர்கள் உடற்பயிற்ச்சி செய்வது எந்த விதத்திலும் தவறு அல்ல என்பது தெளிவாகிறது. நாம் நம்முடைய சரீரத்தை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று வேதாகமம் (1கொரிந்தியர் 6:19-20) தெளிவாய் குறிப்பிடுகிறது. அதே சமயத்தில் வேதாகமம் வீண் தற்பெருமையை எதிர்க்கிறது (1சாமுவேல் 16:7; நிதீமொழிகள் 31:30; 1பேதுரு 3:3-4). நம்முடைய உடற்பயிற்சியின் நோக்கம் நம்முடைய உடலின் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் பிறருடைய கவனத்தை ஈர்த்தல் அல்லது கவர்தலாக இருக்க கூடாது. இதற்கு பதிலாக நம்முடைய உடல் நலத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆவிக்குரிய இலக்குகளை அடைவதற்கு ஏதுவான உடல் ஆற்றலை வளர்த்துக்கொள்ள முடியும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
கிறிஸ்தவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா? உடல் நலத்தை குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?